செய்திகள் :

"ஆதரவு தரோம்னு சொல்லிட்டு சிலர் நைட்டோட நைட்டா ஓடிட்டாங்க.!"- தவெக கூட்டணியை விமர்சித்த உதயநிதி

post image

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக மாவட்ட - ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் - வட்டம் - கிளை - இளைஞரணி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் நேற்று எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், "நம்மோடு கூட்டணி அமைத்தவர்கள் ஒவ்வொருவராகக் கூட்டணியை விட்டு வெளியே சென்றார்கள். ஜனாதிபதி ஆட்சி அமைந்துவிடக்கூடாது. ஜனாதிபதி ஆட்சி அமைந்தால் கவர்னர் ஆட்சி இங்கு வந்துவிடும், அப்படி வரக்கூடாது' என்று நம் தலைவரிடம் சொல்லிவிட்டு சென்றார்கள்.

மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி
மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி

சிலர் சொல்லாமல், கொள்ளாமல் சென்று விட்டார்கள். சிலர் ஆதரவு தருகிறோம் என்று நைட்டோடு நைட்டாகத் திருட்டுத்தனமாக சென்றுவிட்டனர்...நான் யாரைச் சொல்கிறேன் என்று உங்களுக்கு தெரியும். இப்போது அவர்கள் நிலைமை என்னவென்று உங்களுக்கு தெரியும். ஏன் என்றால் முதலமைச்சர் பிரதமர் வேட்பாளர் பதவிக்கே சென்றுவிட்டார்.

தேர்தல் முடிந்ததும் எல்லோருக்கும் ஒரே சைஸ் சோஃபா சென்றிருக்கிறது. முதல்வர் தேர்தல் பிரச்சாரத்திற்கு கூட வீட்டை விட்டு பெரிதாக வெளியில் வரவில்லை. ஆனால் தேர்தல் முடிந்ததும் ஆளுநரை தினம்தோறும் சந்தித்து பேசினார்" என்று தவெகவையும் கூட்டணி கட்சிகளையும் விமர்சித்து பேசியிருக்கிறார்.

ஸ்டார்பக்ஸ் GCC மையம்: `800 தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலை வாய்ப்பு' - தமிழக முதல்வர் ஒப்பந்தம்

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஸ்டார்பக்ஸ் காபி (STARBUCKS COFFEE) நிறுவனம், 800 தொழில்நுட்ப நிபுணர்களுக்கு உயர் ஊதிய வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் உலகளாவிய திறன் மையம் (Global Capabili... மேலும் பார்க்க

TVK vs CPM: ``தவெக அரசில் இன்னும் ஜனநாயகப் பூர்வமான அணுகுமுறை தேவை" - சிபிஎம் சண்முகம் விமர்சனம்

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,``புதிய தலைமைச் செயலகம் தொடர்பாக பேசுகிறார்கள். ஒரு திட்டம் என்றால் முதலில் DPR – Detailed Project Report தயாரிக்கப்படும். அதன்... மேலும் பார்க்க

"கேள்வி கேட்டா பரவாயில்ல, பாட்டு பாடுனா நாங்க என்ன பண்றது?" - தவெகவைச் சாடிய உதயநிதி

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திமுக மாவட்ட - ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் - வட்டம் - கிளை - இளைஞரணி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந... மேலும் பார்க்க

`இனி, சங்கு சத்தம் மட்டுமே கேட்கும்; விசில் சத்தம் கேட்காது' - தவெக அரசை விமர்சித்த காளியம்மாள்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் அ.தி.மு.க சார்பாக பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துக்கொண்டு பேசிய அ.தி.மு.க-வின் கொள்கை பரப்ப... மேலும் பார்க்க

"தேவஸ்வம் போர்டின் மிகப்பெரிய பலவீனம்" - சபரிமலையில் அரவணை தட்டுப்பாட்டால் ஆவேசமான அமைச்சர்!

புரட்டாசி (கன்னி) மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் திருநடை கடந்த 16-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. இன்று இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும். இந்த நிலையில் சபரிமலையில் அரவணை பிரசாதத்துக்கு க... மேலும் பார்க்க