செய்திகள் :

"தேவஸ்வம் போர்டின் மிகப்பெரிய பலவீனம்" - சபரிமலையில் அரவணை தட்டுப்பாட்டால் ஆவேசமான அமைச்சர்!

post image

புரட்டாசி (கன்னி) மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் திருநடை கடந்த 16-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. இன்று இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும். இந்த நிலையில் சபரிமலையில் அரவணை பிரசாதத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்களுக்கு நபர் ஒருவருக்கு ஒரு டின் அரவணை மட்டுமே நேற்று விநியோகிக்கப்பட்டது. நடை அடைக்கப்படும் நாளான இன்று பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்தால், ஒரு டின் அரவணை கூட வழங்க முடியாத இக்கட்டான சூழல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சபரிமலையில் உள்ள அரவணை தயாரிப்பு ஆலையின் தயாரிப்புத் திறனை அதிகரிக்கும் நோக்கில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், பிரசாத தயாரிப்பு முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டதே இந்த தட்டுப்பாட்டிற்கு பிரதான காரணமாகும். கடந்த 20 நாட்களாக ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கமான மாதாந்திர பூஜையை விட இந்த முறை பக்தர்கள் வருகை எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்ததே தட்டுப்பாட்டிற்கு காரணம் எனவும் தேவஸ்வம்போர்டு விளக்கம் அளித்துள்ளது. ​முந்தைய ஆண்டுகளில் விரிவாக்கம் அல்லது பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் போது கூட அரவணை தயாரிப்பு முழுமையாக நிறுத்தப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்பிரச்சினை தொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் கே.ஜெயக்குமாரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட தேவஸ்வம் அமைச்சர் கே.முரளீதரன் தனது கடும் அதிருப்தியைத் தெரிவித்தார். தேவையான அளவு கையிருப்பு வைப்பதில் நிர்வாகம் தவறிவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். 

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்

​கடந்த ஆண்டுகளில் புரட்டாசி மாதப் பூஜையின் போது சுமார் 2.50 லட்சம் முதல் 2.80 லட்சம் டின்கள் வரை அரவணை விற்பனையானது. அதனடிப்படையில், இம்முறை 3.20 லட்சம் டின்கள் அரவணை முன்னெச்சரிக்கையாகத் தயாரித்து இருப்பு வைக்கப்பட்ட பின்னரே ஆலை மூடப்பட்டது. ஆனால், நடை திறக்கப்பட்ட இரண்டே நாட்களில் கையிருப்பில் இருந்த 80 சதவீதத்திற்கும் அதிகமான அரவணை விற்றுத் தீர்ந்துவிட்டது.

​முந்தைய மண்டல - மகரவிளக்கு காலத்தின் போது தினசரி 3 முதல் 4 லட்சம் டின்கள் வரை அரவணை விற்பனையானது. அப்போது நாள் ஒன்றுக்கு 2 முதல் 2.25 லட்சம் டின்கள் வரை உற்பத்தி செய்யப்பட்டன. வரும் மண்டல காலத்துக்குள் அரவணை தயாரிப்பு ஆலையில் நாள் ஒன்றுக்கு 3.25 லட்சம் டின்கள் உற்பத்தி செய்யும் வகையில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது தினமும் 2 முதல் 2.25 லட்சம் டின்கள் தயாரிக்கும் வசதியே உள்ளது. அரவணை தயாரிக்க 26 தயாரிப்புப் பாத்திரங்கள், 6 குளிரூட்டும் அறைகள், 6 கொதிகலன்கள் செயல்பாட்டில் உள்ளன. புதிதாக 6 ​அரவணை தயாரிப்புப் பாத்திரங்கள், 2 குளிரூட்டும் அறைகள், ஒரு ​கொதிகலன் ஆகியவை அமைக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு மண்டலகாலம் தொடங்கும் முன்பே 50 லட்சம் டின்கள் அரவணை இருப்பு வைக்கப்பட்டிருந்ததால் தட்டுப்பாடு ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. புரட்டாசி மாத பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டபோது பள்ளிகளுக்கு தொடர்ந்து மூன்று நாட்களும், அரசு அலுவலகங்களுக்கு இரண்டு நாட்களும் விடுமுறை கிடைத்ததால் வழக்கத்தை விட ஐயப்ப பக்தர்களின் வருகை கணிசமாக உயர்ந்தது. 

அமைச்சர் கே.முரளீதரன்

அரவணை தட்டுப்பாடு குறித்து தேவஸ்வம் அமைச்சர் கே.முரளீதரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "​சபரிமலை கோயில் நடை சார்த்தப்பட்டிருக்கும் காலங்களில்தான் இதுபோன்ற புனரமைப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், நடை திறந்திருக்கும் நேரத்தில் பணிகளைத் தொடங்கியது முறையற்றது. மாதாந்திர பூஜைக்கே இந்த நிலைமை என்றால், லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் மண்டல கால பூஜை சமயத்தில் நிலைமை என்னவாகும் என்ற நியாயமான அச்சம் பக்தர்களுக்கு எழுந்துள்ளது. ​பக்தர்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அரசின் கடமையாகும். அரசு இந்த விவகாரத்தை மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இதுபோன்ற சூழல்களை முன்கூட்டியே கணித்துத் திட்டமிடத் தவறியதே தேவஸ்வம் போர்டின் மிகப்பெரிய பலவீனம். இத்தகைய பிரச்சனைகள் எழும்போது துறை சார்ந்த அமைச்சர் என்ற முறையில் என்னால் அமைதியாக இருக்க முடியாது. சபரிமலையில் ஏதேனும் குறைபாடுகள் நேர்ந்தால், மக்கள் தேவஸ்வம் போர்டு தலைவரைக் குறை கூற மாட்டார்கள்; மாறாக அரசையும் அமைச்சரையும்தான் விமர்சிப்பார்கள்" என்றார்.

"ஆதரவு தரோம்னு சொல்லிட்டு சிலர் நைட்டோட நைட்டா ஓடிட்டாங்க.!"- தவெக கூட்டணியை விமர்சித்த உதயநிதி

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக மாவட்ட - ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் - வட்டம் - கிளை - இளைஞரணி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் நேற்று எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண... மேலும் பார்க்க

ஹார்முஸ் நீர்ச்சந்தி திறக்க வேண்டுமானால் அமெரிக்காவிற்கு 7 நிபந்தனைகள் - ஈரான் புது நகர்வு

ஈரான் போரைத் தாண்டி உலக நாடுகளுக்குப் பெரும் தலைவலியாக இருப்பது ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடல் தான்.அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு...ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்புக் கவுன்சிலின் தலைவர் மொஹ்சென்... மேலும் பார்க்க

`பொதுச் செயலாளர் பதவியை அவருக்காக வைத்திருக்கிறோம்!’ - புதிய கட்சியைத் தொடங்கிய அஜித் ரசிகர்கள்

திரைப்பட நடிகராக இருந்த விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து, 2026 தேர்தலில் ஆட்சியைப் பிடித்து முதலமைச்சர் பதவியைக் கைப்பற்றியிருக்கிறார். சினிமாவில் நடிகர் விஜய், அஜித் மட்டுமல்ல, அவரது... மேலும் பார்க்க

'ரஷ்ய தடைச் சட்டத்திற்கு நன்றி; பல மாற்றங்கள் வரலாம்'- ட்ரம்பிடம் பேசிய பின் ஜெலன்ஸ்கி சொல்வது என்ன?

2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியது. இன்னும் அது தொடர்ந்துகொண்டிருக்கிறது.அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை பொருளாதாரத் தடை போன்ற நெருக்கடிகளை ரஷ்யாவிற்குக் கொடுத்தும்... மேலும் பார்க்க

அமெரிக்கா செல்லும் ஈரான் அதிபர் - எதற்கு? ட்ரம்ப் வைத்திருக்கும் 'மூன்று' ஆப்ஷன்கள்!

இன்னும் ஆறு நாட்களில் ஈரான் போர் தொடங்கி ஏழு மாதங்கள் நிறைவடைந்துவிடும். ஆனால், இந்தப் போரின் முடிவு குறித்த எந்த நேர்மறையான முடிவும் இதுவரை எட்டப்படவில்லை.இந்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க்கில் ... மேலும் பார்க்க