செய்திகள் :

'ஆர்த்தோ டாக்டர்களுடன் சட்டமன்றத்தை நடத்த வேண்டியிருக்கும்!' - முதல்வரை எச்சரித்த திமுக கவுன்சுலர்!

post image

சென்னை ரிப்பன் பில்டிங்கில் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர் அதியமான் முதல்வர் விஜய்யை எச்சரிப்பதை போல பேசியிருந்தார்.

மாமன்ற கூட்டம்
மாமன்ற கூட்டம்

நேரமில்லா நேரத்தில் பேசிய அதியமான் முதலில் மாமன்ற கூட்டத்தில் அம்பேத்கர் படம் ஓரமாக மாட்டப்பட்டதாக எழுந்த சர்ச்சைக்கு பதிலளித்தார். 'வான் புகழ் கொண்ட வள்ளுவனுக்கு இணையாக அம்பேத்கரின் படத்தை மாட்டி வைத்திருக்கிறோம். நாங்களும் அம்பேத்கரின் வழி வந்தவர்கள்தான்' என்றார்.

அடுத்ததாக பேசுகையில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினையும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினையும் புகழும் விதத்தில் முதல்வர் விஜய்யை எதிர்த்து பேசினார். 'எந்தத் தலைவனும் தன்னுடைய தொண்டன் சாவதை விரும்பமாட்டான் என பெருந்தன்மையோடு எங்கள் தலைவன் பேசியதால்தான் சிலர் சிறை செல்லாமல் தப்பினர். முதல்வர் சட்டமன்றத்தின் கதவுகளை மூடிவிட்டு கூட்டத்தை நடத்த வேண்டும் என்கிறார். அப்படி பூட்டி விட முடியுமா? அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் அரங்கம். அதை முதல்வர் மூடிவிடுவாரா? அப்படி மூடினால் 5-6 ஆர்த்தோ டாக்டர்களுடன்தான் சட்டமன்றத்தை நடத்த வேண்டியிருக்கும்.

அதியமான்
அதியமான்

ஊரான் வீட்டு நெய்யில் ஸ்வீட் செய்யும் விதமாக நம்முடைய திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருக்கிறார். மூன்று மாதங்களில் அவரின் சாயம் வெளுத்துவிட்டது. அரசு ஊழியர்களின் சுதந்திரமே பறிபோய் விட்டது. 500 ரூபாயை சட்டைப் பையில் வைத்திருந்தால் அந்த 500 ரூபாய் எப்படி வந்தது என கேட்கிறார்கள். அரசு ஊழியர்கள் மன உளைச்சலில் இருக்கிறார்கள்' என்றார்.

மாணவர்கள் போராட்டம் குறித்த சுற்றறிக்கை: "பாசிச அரசியலைத் தொடங்க ஆழம் பார்த்ததா தவெக அரசு?"- கனிமொழி

காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் இடதுசாரி போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து சில நிமிடங்களிலேயே இந்த ... மேலும் பார்க்க

`ஆளுங்கட்சி ஆகிவிட்டோம்' தவெக கூட்டணியை உறுதி செய்த திருமா; பாமக-வுக்கு வைத்த செக்! - பின்னணி என்ன?

தவெக அமைச்சரவையில் அமைச்சர் வன்னி அரசு இடம்பெற்றிருந்தாலும் எந்தக் கூட்டணியில் விசிக இருக்கிறது என்பதை தெளிவாக கூறாமல் திருமாவளவன் குழப்பி வந்தார். 'திமுகவுடன் எங்களது நட்பு தொடர்கிறது' என்று திமுகவிற... மேலும் பார்க்க

மேகமலை: `துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும்; முழுமையாக இடித்து அகற்றுங்கள்'- உச்ச நீதிமன்றம் அதிரடி

மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் மாஞ்சோலையைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், இலவம் பஞ்சு தோட்டங்களையும் முழுமையாக அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான உத்... மேலும் பார்க்க

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?'- திமுக கேள்வி

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?' என திமுக கேள்வி எழுப்பியிருக்கிறது.இது தொடர்பாக வெளியாகியிருக்கும் அறிக்கையில், `நேற்றைய தினம் அதிகார ஆணவத்திமிரோடு, “திண்டுக்கல் மாவட்டம்... மேலும் பார்க்க

`மூன்று தமிழர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, ஆணவத்தோடு டி.கே.சிவக்குமார் பேசுவதா?' - சீமான் கண்டனம்

`கர்நாடக வனப்பகுதியில் மூன்று அப்பாவித்தமிழர்களை ஈவிரக்கமற்றுச் சுட்டுக்கொன்றுவிட்டு, எங்கள் மாநிலத்தின் விவகாரத்தில் தலையிடாது, உங்கள் வேலையைப் பாருங்கள் எனத் துளியும் குற்றவுணர்ச்சியோ, பொறுப்புணர்ச்... மேலும் பார்க்க

"அந்தத் தண்ணீரைக் குடிக்கிறாங்க, கோயிலுக்கு அபிஷேகம் பண்றாங்க" - கூவம் நதி குறித்து சௌமியா அன்புமணி

தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை, நீர்வளம், ஊரக வளர்ச்சி, சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற விவாதத்தின்போதுபேசிய பாமக எம்எல்ஏ சௌமியா அன்ப... மேலும் பார்க்க