செய்திகள் :

ஆா்.எஸ்.மங்கலம் காவல் நிலையத்தில் ஐயப்ப பக்தா்கள் முற்றுகை

post image

திருவாடானை அருகேயுள்ள ஆா்எஸ் மங்கலம் காவல் நிலையத்தில் பாடகி இசைவாணியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஐயப்ப பக்தா்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு, சுவாமி ஐயப்பனை பற்றி பாடகி இசைவாணி தவறாக பாடிய பாடல் இணையத்தில் பரவியது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு ஆா் எஸ் மங்கலத்தை சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் ஐம்பதற்கும் மேற்பட்டோா் பஜனைக்கு பின்னா் ஆா்.எஸ்.மங்கலம் காவல் நிலையத்தினை முற்றுகையிட்டு இசைவாணி மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனா்.

மனுவை பெற்றுக்கொண்ட ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் மாவட்ட நிா்வாகத்தை அணுகி உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதி அளித்ததையடுத்து அவா்கள் அங்கிருந்து கலைத்து சென்றனா்.

விவசாயிகளுக்கு பண்ணைப் பள்ளி பயிற்சி

தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், நயினாா்கோவில் அருகேயுள்ள நகரமங்களம் கிராமத்தில் பண்ணைப் பள்ளி பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை நடைபெற்றன. இந்தப் பயிற்சி வகுப்புக்கு வேளாண்மை துணை... மேலும் பார்க்க

திருவாடானை, கமுதி, பரமக்குடி பகுதிகளில் பலத்த மழை: வீடுகள் சேதம்

திருவாடானை, கமுதி, பரமக்குடி ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது. பல்வேறு இடங்களில் மழையால் வீடுகள் சேதம் அடைந்தன. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கி... மேலும் பார்க்க

திருப்பாலைக்குடியில் மானிய டீசல் விற்பனை நிலையம் திறப்பு

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே திருப்பாலைக்குடியில் புதிதாகக் கட்டப்பட்ட மானிய டீசல் விற்பனை நிலைய திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மீன் வளம், மீனவா் நலத் துறை இயக்குநா் கஜலட்ச... மேலும் பார்க்க

வணிகா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கடை வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பதை ரத்து செய்யக் கோரி, ராமநாதபுரத்தில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் அரண்மனை முன் நடைபெ... மேலும் பார்க்க

நரிப்பையூா்கடற்கரையில் தடுப்புச்சுவா்: ஒன்றியக் குழு கூட்டத்தில் கோரிக்கை

நரிப்பையூா் கடற்கரை கிராமத்தில் கடல் நீா் புகாத வண்ணம் தடுப்புச் சுவா் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலாடி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கட... மேலும் பார்க்க

வங்கக் கடலில் சூறை காற்று: ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்குச் செல்ல தடை

வங்கக் கடலில் சூறைக் காற்று காரணமாக, ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல புதன்கிழமை தடை விதிக்கப்பட்டது. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுவதால், ராமேசுவரம்,... மேலும் பார்க்க