செய்திகள் :

Doctor Vikatan: உயரம் குறைவான குழந்தை... உணவுகளின் மூலம் தீர்வு கிடைக்குமா?

post image

Doctor Vikatan: என் 8 வயதுப் பெண் குழந்தை, அந்த வயதுக்குண்டான உயரத்தில் இல்லை.  இது இப்படியே தொடருமோ என பயமாக இருக்கிறது. குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க பிரத்யேக உணவுகள் ஏதேனும் இருந்தால் பரிந்துரைக்க முடியுமா? 

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

ஒரே ஓர் உணவுப்பொருளை மட்டும் சாப்பிடுவதால் குழந்தைகளின் உயரத்தை அதிகரித்துவிட முடியாது. குழந்தைகளின் சரியான வளர்ச்சிக்கு (Optimal Growth) நல்ல ஊட்டச்சத்து மிக அவசியமானது. உயரம் என்பது மரபியல் (Genetics) சார்ந்த விஷயமாக இருந்தாலும், அதனுடன் வேறு சில காரணிகளும் இணையும்போது ஒருவரின் முழுமையான வளர்ச்சி சாத்தியப்படுகிறது. அந்த வகையில் சரியான ஊட்டச்சத்து (Proper Nutrition), போதுமான தூக்கம், உடல் செயல்பாடுகள் / உடற்பயிற்சி போன்றவையும் உயரத்தைத் தீர்மானிப்பவை.

குழந்தைகளின்  வளர்ச்சியில் புரதச்சத்து (Protein) மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. எலும்பு, தசை மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு புரதம் மிகவும் முக்கியம். இது  பால், தயிர், பனீர் என பால் பொருள்களிலும், அசைவ உணவுகளில் கோழி, முட்டை, மீன் போன்றவற்றிலும், சைவ உணவுகளில் பருப்பு வகைகள், முளைக்கட்டிய பயறுகள், டோஃபு உள்ளிட்ட சோயா  உணவுகளிலும் அதிகம் இருக்கிறது.  பாதாம், அக்ரூட் (Walnut) போன்ற நட்ஸை  ஒரு கைப்பிடி அளவு தினமும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

எலும்புகளின் வலிமைக்கும் வளர்ச்சிக்கும் கால்சியம் சத்தும் அவசியம். பால், ராகி, எள், பாதாம் மற்றும் பசலைக்கீரை போன்ற கீரைகள் மற்றும் பச்சைக் காய்கறிகளில் கால்சியம் சத்து நிறைய இருக்கும்.
உடல் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி தேவை. தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருப்பதன் மூலம் இயற்கையாகவே வைட்டமின் டி சத்தைப் பெறலாம்.  முட்டையின் மஞ்சள் கரு, மீன் மற்றும் செறிவூட்டப்பட்ட பால் (Fortified Milk) போன்றவற்றிலும் வைட்டமின் டி சத்து கிடைக்கும். 

குழந்தைகளின் வளர்ச்சியில் புரதச்சத்து (Protein) மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

வளர்ச்சி ஹார்மோன்களின் செயல்பாட்டிற்கு துத்தநாகம் சத்தும் அவசியம். அது  நட்ஸ் வகைகள், பூசணி விதைகள் மற்றும் முழு தானியங்களில் அதிகம் கிடைக்கும். சிறிய குழந்தைகள் நட்ஸாக சாப்பிட மறுத்தால், இவற்றையும் விதைகளையும் பொடி செய்து சப்பாத்தி அல்லது தோசை மாவில் கலந்து கொடுக்கலாம். அதேபோல வளர்ச்சிக்குத் தேவையான  இரும்புச்சத்து அனைத்து வகை பச்சைக் காய்கறிகளிலும் கீரைகளிலும் நிறைந்துள்ளது. இரும்புச்சத்து உடலில் நன்றாக சேர, அத்துடன் வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை அல்லது ஆரஞ்சுப் பழங்களை சேர்த்துக்கொள்ளலாம். உதாரணமாக, சிக்கன் சாப்பிடும்போது அதன் மேல் எலுமிச்சைப்பழச் சாறு பிழிந்து சாப்பிடலாம்.

இவை தவிர, உடலில் வளர்ச்சி ஹார்மோன்கள் சரியாகச் சுரக்க, இரவு நேர தூக்கம் மிகவும் அவசியமானது. முறையான உடல் செயல்பாடுகள் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால், தானியங்கள், புரதங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் நட்ஸ் என அனைத்து உணவுகளும் அடங்கிய சரிவிகித உணவு முறையே ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வழிவகுக்கும். குரோத் சார்ட் (Growth Chart) எனப்படும் வளர்ச்சி அட்டவணையை வைத்து, குழந்தைகளின் உயரம் சரியாக உள்ளதா எனப் பார்த்துக்கொள்ளலாம். ஒருவேளை பெற்றோர் உயரம் குறைவாக இருந்தால், குழந்தையை மருத்துவரிடம் காட்டி, அந்தக் குழந்தையால் எவ்வளவு உயரம் வளர முடியும் என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

குரோத் சார்ட் (Growth Chart) எனப்படும் வளர்ச்சி அட்டவணையை வைத்து, குழந்தைகளி

குழந்தைகளின் எலும்பு மற்றும் தசை வளர்ச்சிக்குத் தேவையான டாப் உணவு வகைகளை ஒரு  பிளான் போல போட்டு வைத்துக்கொண்டு பின்பற்றலாம். அதன்படி, புரத உணவுகள், பச்சைக் காய்கறிகள், கீரைகள்,  சிறுதானியங்கள், நட்ஸ் மற்றும்  சீட்ஸ் வகைகள் (Nuts and Seeds),  முளைக்கட்டிய பயறு வகைகள் (Sprouts), பழங்கள்,  அசைவ உணவுகள் என திட்டமிட்டுக் கொள்ளலாம்.
இந்த உணவுகள் அனைத்தையும் உள்ளடக்கிய  சரிவிகித உணவுத் திட்டம் குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கு வழிகாட்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Doctor Vikatan: சருமத்தில் திடீரெனத் தோன்றும் சிவப்பு நிற மச்சங்கள்: ஆபத்தானவையா? அகற்ற வேண்டுமா?

Doctor Vikatan: எனக்கு வயது 42.உடலின் சில பகுதிகளில் ஆங்காங்கே சிவப்பு நிறத்தில் மச்சங்கள் வருகின்றன. இப்படி உடலில் திடீரெனத் தோன்றும் சிவப்பு நிற மச்சங்கள்ஆபத்தானவையா... இவற்றை அகற்ற வேண்டியது அவசியம... மேலும் பார்க்க

Doctor Vikatan: வேகமாக எடையைக் குறைய உதவுமா Intermittent Fasting... எவ்வளவு இடைவெளி சரியானது?

Doctor Vikatan: என்னுடைய உறவினர் கடந்த சில மாதங்களில் பெரிய அளவில் எடையைக் குறைத்திருக்கிறார். இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் (intermittent fasting) இருப்பதாகவும் அதனால்தான் வேகமாக எடை குறைய முடிந்ததாகவும... மேலும் பார்க்க

நீலகிரி: விபத்தில் மூளைச் சாவடைந்த 22 வயது இளைஞர்; உடல் உறுப்பு தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள காட்டேரி டேம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமகிருஷ்ணன் – விஜயகுமாரி. இந்தத் தம்பதிக்கு மோனிஷாஎன்கிற மகளும், மோனிக்ராஜ் என்ற மகனும் இருந்தனர். 22 வயதான மோனிக்ராஜ் விவச... மேலும் பார்க்க

Doctor Vikatan: கொஞ்சமே சாப்பிட்டாலும் குறையாத உடல் பருமன்... எடையைக் குறைக்க என்னதான் வழி?

Doctor Vikatan: என் வயது 43. எனக்கு உடல் பருமன் பிரச்னை இருக்கிறது. என்ன முயற்சிகள் செய்தாலும் எடையைக் குறைக்கவே முடியவில்லை. நான் அதிகம் சாப்பிடும் வழக்கம் உள்ள நபரும் இல்லை. மிகக் குறைவாகத்தான் சாப்... மேலும் பார்க்க

Doctor Vikatan: பலரும் பின்பற்றும் No-Sugar Diet... ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்துமா, உடல் நடுங்குமா?

Doctor Vikatan: பலரும் காபி, டீ உள்பட எதிலும் சர்க்கரை சேர்த்துக்கொள்வதில்லை என்றும் 'நோ சுகர்' டயட்டுக்கு மாறிவிட்டதாகவும் சொல்கிறார்கள். நானும் அதைப் பின்பற்றலாம் என கடந்த ஒரு வாரமாக எதிலுமே சர்க்கர... மேலும் பார்க்க

Doctor Vikatan: தோட்டத்தில் தானாக முளைத்த கல்யாண முருங்கை... மருத்துவ குணம் மிக்கதா?

Doctor Vikatan:எங்கள் வீட்டுத் தோட்டத்தில் தானாகவே முளைத்திருந்தது ஒரு செடி. குப்பைச்செடி என பிடுங்க நினைத்தபோது, அது கல்யாண முருங்கை செடி என்றும், அற்புதமான மருத்துவ பலன்கள் கொண்டது என்றும் சொன்னது க... மேலும் பார்க்க