செய்திகள் :

Doctor Vikatan: பலரும் பின்பற்றும் No-Sugar Diet... ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்துமா, உடல் நடுங்குமா?

post image

Doctor Vikatan: பலரும் காபி, டீ உள்பட எதிலும் சர்க்கரை சேர்த்துக்கொள்வதில்லை என்றும் 'நோ சுகர்' டயட்டுக்கு மாறிவிட்டதாகவும் சொல்கிறார்கள். நானும் அதைப் பின்பற்றலாம் என கடந்த ஒரு வாரமாக எதிலுமே சர்க்கரை சேர்த்துக்கொள்வதில்லை. ஆனால், எனக்கு ஒரு வாரமாக மன அழுத்தமும் எரிச்சலும் அதிகரித்திருப்பதாக உணர்கிறேன். தவிர, கை, கால்களில் ஒருவித நடுக்கத்தையும் உணர்கிறேன். சர்க்கரையை நிறுத்தியதுதான் இதற்கெல்லாம் காரணமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்

டயட்டீஷியன் அம்பிகா சேகர்

``No-Sugar Diet எனப்படும் இனிப்பை முற்றிலும் தவிர்க்கும் உணவுமுறையில் நாம் சர்க்கரையை மட்டுமே தவிர்க்கிறோம். மற்றபடி உடலுக்குத் தேவையான பிற ஊட்டச்சத்துகள் (கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் போன்றவை) மற்ற உணவுகளின் மூலம் உடலுக்குக் கிடைத்துக் கொண்டேதான் இருக்கும்.

நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல சர்க்கரையைத் தவிர்ப்பதால் கை, கால்களில் நடுக்கம் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால், உடலில் சர்க்கரை அளவு மிகக் குறைவாகும் போது, 'ஹைப்போகிளைசீமியா' (Hypoglycemia) என்ற நிலையில் அல்லது போதுமான அளவு உணவு உட்கொள்ளாத போது குளுக்கோஸ் சப்ளை குறைவதால் கை, கால்களில் நடுக்கம் ஏற்படலாம். அதேபோல நீங்கள் குறிப்பிட்டுள்ள மன அழுத்தம், மன உரிச்சலுக்கும் இனிப்பைத் தவிர்ப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது முழுமையாக ஹார்மோன் மற்றும் உளவியல் சார்ந்தது. நமக்கு மிகவும் பிடித்த உணவைத் தவிர்க்கிறோம் என்ற எண்ணம் மனதில் ஒருவித எரிச்சலை உண்டாக்கலாம்.

மன அழுத்தம், மன உரிச்சலுக்கும் இனிப்பைத் தவிர்ப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ஒரு டயட்டைத் தீவிரமாகப் பின்பற்றும் போது, நம் மனதை அதற்கேற்ப பக்குவப்படுத்துவதும் (Conditioning of mind) கட்டுப்பாட்டுடன் இருப்பதும் மிக அவசியம்.  சர்க்கரையைத் தவிர்ப்பதில் மட்டும் கவனமாக இருந்தால் போதாது. உங்கள் உணவில்   புரதம் மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகளைச் சரியாகச் சேர்த்துக் கொள்கிறீர்களா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.  பழங்கள் சாப்பிடுங்கள். இது ரத்தச் சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவும். நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது எரிச்சலைக் குறைக்கவும் உடல் செயல்பாடுகளைச் சீராக்கவும் உதவும்."

 உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Doctor Vikatan: தோட்டத்தில் தானாக முளைத்த கல்யாண முருங்கை... மருத்துவ குணம் மிக்கதா?

Doctor Vikatan:எங்கள் வீட்டுத் தோட்டத்தில் தானாகவே முளைத்திருந்தது ஒரு செடி. குப்பைச்செடி என பிடுங்க நினைத்தபோது, அது கல்யாண முருங்கை செடி என்றும், அற்புதமான மருத்துவ பலன்கள் கொண்டது என்றும் சொன்னது க... மேலும் பார்க்க

HPV: ஆண்களுக்கும் வரும் 'அந்த' புற்றுநோய்; திருமணத்திற்கு முன்பே போட வேண்டிய ஓர் ஊசி - ஏன் தெரியுமா?

தடுப்பூசி திட்டம்பெண்களைப் பாதிக்கும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக, கருப்பைவாய் புற்றுநோய் கண்டறியப்பட்டு வருகிறது. கருப்பை வாய் புற்றுநோய்க்கு முக்கியமான காரணம் HPV (Human Pap... மேலும் பார்க்க

Doctor Vikatan: குழந்தைகளுக்கு காபி, டீ.... எந்த வயதிலிருந்து அறிமுகப்படுத்தலாம்?

Doctor Vikatan: என்னுடைய நண்பன், தன்னுடைய ஒன்றரை வயதுக் குழந்தைக்கு காபியும் டீயும் கொடுத்து வளர்க்கிறான். இந்த வயதில் ஏன் பழக்குகிறாய் என்று கேட்டால், குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே எல்லா உணவுகளையும் அ... மேலும் பார்க்க

Doctor Vikatan: சோஷியல் மீடியாவில் டிரெண்டாகும் Microgreens: ஆரோக்கியத்தை அள்ளித் தருமா?

Doctor Vikatan: கடந்த சில நாள்களாக சமூக ஊடகங்களில் மைக்ரோ க்ரீன் என்ற கான்செப்ட் டிரெண்டாகி வருகிறது. அதென்ன மைக்ரோ க்ரீன்ஸ்.... எதில் தயாரிக்கிறார்கள்... யாருக்கு நல்லது?பதில் சொல்கிறார், கோவையைச் சே... மேலும் பார்க்க

உடல் பருமன் மட்டும் அல்ல… நாக்கும் பருமனாகலாம்! - காரணங்களும், தீர்வும்!

உடல் பருமன், உடல் எடை அதிகரிப்பு பற்றிய விஷயங்களைப் பார்க்கிறோம், கேட்கிறோம், பேசுகிறோம். ஆனால், உடலின் முக்கிய உறுப்பான நாக்கின் பருமன் பற்றி, பெரும்பாலானவர்களுக்குத் தெரிவதில்லை. பேசுவது, சாப்பிடுவத... மேலும் பார்க்க

Doctor Vikatan: Pregnancy Test-ல் ஆணுக்கு பாசிட்டிவ்... இப்படியும் நடக்க வாய்ப்பு உண்டா?

Doctor Vikatan: மனைவிக்காக வாங்கிய பிரெக்னன்சி கிட்டில், கணவன் தனது சிறுநீரை டெஸ்ட் செய்ததாகவும், அதில் அவருக்கு பிரெகன்சி பாசிட்டிவ் என்று வந்ததாகவும் சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். ஆண்களுக்கும் பி... மேலும் பார்க்க