செய்திகள் :

Kharg Island: ஈரான் மகுடக் கல்லில் தாக்குதல்; "நாகரிகத்திற்காக 'இதை' மட்டும் செய்யவில்லை" - ட்ரம்ப்

post image

ஈரானுக்கு மிக மிக முக்கியமானது, 'கார்க் தீவு'. இந்தத் தீவில் இருந்து தான் ஈரான் தன்னுடைய 90 சதவிகித எண்ணெய் ஏற்றுமதிகளைச் செய்கிறது.

90 சதவிகிதம் என்றால் ஒரு ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 950 மில்லியன் பேரல்கள்.

இந்தத் தீவை அமெரிக்கா தொட்டால் ஈரான் கடுமையாக எதிர்வினையாற்றும் என்று இந்தப் போர் தொடங்கியதில் இருந்து அரசியல் பார்வையாளர்கள் எச்சரித்து வந்தனர்.

தற்போது அந்தத் தீவை தான் குறி வைத்து தாக்கியிருக்கிறது அமெரிக்கா.

இதை அமெரிக்க அதிபர் ட்ரம்பே உறுதிசெய்துள்ளார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ட்ரம்ப் பதிவு

இது குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது...

"என்னுடைய வழிகாட்டுதலின் படி, ஈரானின் மகுடக் கல்லான 'கார்க் தீவில்' உள்ள அனைத்து ராணுவ தளவாடங்களும் தகர்க்கப்பட்டுள்ளது. இது மத்திய கிழக்கு வரலாற்றிலேயே மிக சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் ஆகும்.

நாகரிகம் காரணமாக, அந்தத் தீவில் இருக்கும் எண்ணெய் கட்டமைப்புகளை நாங்கள் தாக்கவில்லை.

ஹார்மோஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பலின் பயணத்திற்கும், பாதுகாப்பிற்கும் பாதிப்பு ஏற்பட்டால் எனது முடிவை மாற்ற வேண்டியதாக இருக்கும்".

இதற்கு ஈரானின் பதிலடி எப்படி இருக்குமோ?

https://truthsocial.com/@realDonaldTrump/116109447886304328

எல்.பி.ஜி கேஸ் நிரப்ப நீண்ட வரிசையில் காத்திருந்த ஆட்டோ ஓட்டுனர்கள்! - திருச்சி நிலவரம்

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய போரின் காரணமாக அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் ஈரான் பல்வேறு நடவடிக்கைகள எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஹர்முஸ் நீர்வழிப்பாதையை மூடி உள்ளது. இதனால், உலகம் ... மேலும் பார்க்க

மோனலிசா போஸ்லேவுக்கு 18 வயது பூர்த்தி ஆகும் முன்பே திருமணம் நடந்ததா? விவாதத்துக்கு காரணம் என்ன?

பிரயாக்ராஜில் கடந்த ஆண்டு நடந்த மகா கும்பமேளாவில் ருத்ராட்சம் மற்றும் மாலைகள் விற்பனை செய்துகொண்டிருந்த மோனலிசா போஸ்லே புகைப்படம் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து புகழ்பெற்றார். பின்னர் சினிமா வாய்ப்பு... மேலும் பார்க்க

"நடிகர் ரஜினிகாந்தை யாரும் மிரட்ட முடியாது; எந்த மிரட்டலுக்கும் அவர் அடிபணிய மாட்டார்!" - ரகுபதி

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி,"நடிகர் ரஜினிகாந்தை யாரும் மிரட்ட முடியாது. எந்த மிரட்டலுக்கும் அவர் அடிபணிய மாட்டார் என்பது நாடறிந்த உண்மை. தி.மு.க ரஜினிகாந்தை மிரட்டியதாக கூ... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி பதவிக்கு வேட்டு! - `டெண்டர் முதல் இன்ஸ்டா வரை...' - வெடித்துக் கிளம்பிய விவகாரம்!

தி.மு.க வின் மாணவர் அணிச் செயலாளராகச் செயல்பட்டு வந்த ராஜீவ் காந்தியை தீடிரென அந்தப் பதவியிலிருந்து நீக்கியுள்ளது தி.மு.க தலைமை. அவருக்கு கொள்கை பரப்பு இணைச் செயலாளர் என்ற பதவியைக் கொடுத்துள்ளது. பெண்... மேலும் பார்க்க

ஆதவ் டேபிள் ஃபேன்; ஆனந்த் எலெக்ட்ரிக் குக்கர்! - போட்டி போட்டு பரிசுப் பொருட்களை இறக்கும் தவெக-வினர்

தவெகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை விஜய் உறுதி செய்திருக்கும் நிலையில், சென்னைக்குள் போட்டி போடும் தவெகவின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் ஆதவ் அர்ஜூனாவும் போட்டிப் போட்டுக் கொண்டு வாக்காளர்களுக்கு... மேலும் பார்க்க

ஈரான் தாக்குகிறதுதான்; ஆனாலும், மோதாமல் 'சைலன்ட்டாக' இருக்கும் வளைகுடா நாடுகள் - என்ன காரணம்?

ஈரான் மீது போர் தொடுத்தது என்னவோ அமெரிக்காவும், இஸ்ரேலும் தான். ஆனால், ஈரான் வளைகுடா நாடுகளையும் சேர்த்துக் குறி வைக்கின்றது. 'அமெரிக்காவை எங்களால் நேரடியாகத் தாக்க முடியாது. அதனால், வளைகுடா நாடுகளில்... மேலும் பார்க்க