செய்திகள் :

எல்.பி.ஜி கேஸ் நிரப்ப நீண்ட வரிசையில் காத்திருந்த ஆட்டோ ஓட்டுனர்கள்! - திருச்சி நிலவரம்

post image

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய போரின் காரணமாக அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் ஈரான் பல்வேறு நடவடிக்கைகள எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஹர்முஸ் நீர்வழிப்பாதையை மூடி உள்ளது. இதனால், உலகம் முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், இந்தியாவிலும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் வணிக சிலிண்டர்கள் கிடைக்காமல் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.

auto

இந்த நிலையில், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக பரவிய வதந்தியின் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பெட்ரோல் பங்குகளில் அதிக அளவு மக்கள் தங்களுக்கு தேவையான அளவைவிட அதிக அளவில் பெட்ரோல், டீசலை வாங்கி சென்று வருகின்றனர். இதனிடையே, திருச்சி மாவட்டத்தில் ஆட்டோக்களுக்கு lpg எரிவாயு நிரப்பும் சுமார் 12 எல்.பி.ஜி பங்குகள் உள்ளது. அதில், எல்.பி.ஜி கேஸ் இல்லாமல் பெரும்பாலான பங்குகள் மூடப்பட்டுள்ளது.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே உள்ள அரிஸ்டோ பகுதியில் செயல்படும் இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு சொந்தமான பங்க் மற்றும் கேஸ் நிரப்பும் நிலையம் செயல்பட்டு வருகிறது. அதனால், எல்.பி.ஜி நிரப்புவதற்காக ஆட்டோ ஓட்டுநர்கள் அங்கு சுமார் மூன்று முதல் நான்கு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களுக்கு தேவையான எல்.பி.ஜி எரிவாயுகளை நிரப்பி செல்கின்றனர்.

drivers

"காலதாமதம் ஆவதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம். எங்களுடைய ஒரு நாள் வருமானமே போய்விட்டது. இதே நிலை நீடித்தால் மிகுந்த சிரமம் ஏற்படும். எனவே, அரசு இதில் உரிய கவனம் எடுத்து இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Kharg Island: ஈரான் மகுடக் கல்லில் தாக்குதல்; "நாகரிகத்திற்காக 'இதை' மட்டும் செய்யவில்லை" - ட்ரம்ப்

ஈரானுக்கு மிக மிக முக்கியமானது, 'கார்க் தீவு'. இந்தத் தீவில் இருந்து தான் ஈரான் தன்னுடைய 90 சதவிகித எண்ணெய் ஏற்றுமதிகளைச் செய்கிறது.90 சதவிகிதம் என்றால் ஒரு ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 950 மில்லியன் பேரல்... மேலும் பார்க்க

மோனலிசா போஸ்லேவுக்கு 18 வயது பூர்த்தி ஆகும் முன்பே திருமணம் நடந்ததா? விவாதத்துக்கு காரணம் என்ன?

பிரயாக்ராஜில் கடந்த ஆண்டு நடந்த மகா கும்பமேளாவில் ருத்ராட்சம் மற்றும் மாலைகள் விற்பனை செய்துகொண்டிருந்த மோனலிசா போஸ்லே புகைப்படம் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து புகழ்பெற்றார். பின்னர் சினிமா வாய்ப்பு... மேலும் பார்க்க

"நடிகர் ரஜினிகாந்தை யாரும் மிரட்ட முடியாது; எந்த மிரட்டலுக்கும் அவர் அடிபணிய மாட்டார்!" - ரகுபதி

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி,"நடிகர் ரஜினிகாந்தை யாரும் மிரட்ட முடியாது. எந்த மிரட்டலுக்கும் அவர் அடிபணிய மாட்டார் என்பது நாடறிந்த உண்மை. தி.மு.க ரஜினிகாந்தை மிரட்டியதாக கூ... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி பதவிக்கு வேட்டு! - `டெண்டர் முதல் இன்ஸ்டா வரை...' - வெடித்துக் கிளம்பிய விவகாரம்!

தி.மு.க வின் மாணவர் அணிச் செயலாளராகச் செயல்பட்டு வந்த ராஜீவ் காந்தியை தீடிரென அந்தப் பதவியிலிருந்து நீக்கியுள்ளது தி.மு.க தலைமை. அவருக்கு கொள்கை பரப்பு இணைச் செயலாளர் என்ற பதவியைக் கொடுத்துள்ளது. பெண்... மேலும் பார்க்க

ஆதவ் டேபிள் ஃபேன்; ஆனந்த் எலெக்ட்ரிக் குக்கர்! - போட்டி போட்டு பரிசுப் பொருட்களை இறக்கும் தவெக-வினர்

தவெகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை விஜய் உறுதி செய்திருக்கும் நிலையில், சென்னைக்குள் போட்டி போடும் தவெகவின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் ஆதவ் அர்ஜூனாவும் போட்டிப் போட்டுக் கொண்டு வாக்காளர்களுக்கு... மேலும் பார்க்க

ஈரான் தாக்குகிறதுதான்; ஆனாலும், மோதாமல் 'சைலன்ட்டாக' இருக்கும் வளைகுடா நாடுகள் - என்ன காரணம்?

ஈரான் மீது போர் தொடுத்தது என்னவோ அமெரிக்காவும், இஸ்ரேலும் தான். ஆனால், ஈரான் வளைகுடா நாடுகளையும் சேர்த்துக் குறி வைக்கின்றது. 'அமெரிக்காவை எங்களால் நேரடியாகத் தாக்க முடியாது. அதனால், வளைகுடா நாடுகளில்... மேலும் பார்க்க