செய்திகள் :

"நடிகர் ரஜினிகாந்தை யாரும் மிரட்ட முடியாது; எந்த மிரட்டலுக்கும் அவர் அடிபணிய மாட்டார்!" - ரகுபதி

post image

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி,

"நடிகர் ரஜினிகாந்தை யாரும் மிரட்ட முடியாது. எந்த மிரட்டலுக்கும் அவர் அடிபணிய மாட்டார் என்பது நாடறிந்த உண்மை. தி.மு.க ரஜினிகாந்தை மிரட்டியதாக கூறுவது அப்பட்டமான பொய். அரசியல் ஆதாயம் தேடி விஜய் கட்சியினர் சொல்லி வருகின்றனர். எங்களைப் பொறுத்தவரை அவர் எங்களது நண்பர். 1996-ல் திராவிட மாடல் ஆட்சி வர வேண்டும் என்பதற்காக குரல் கொடுத்த நபர் ரஜினிகாந்த். அவரைப் பற்றி எந்த குறையும் தி.மு.க சொல்லாது. சமையலுக்கு எரிவாயுவையே கொடுக்க முடியாத பிரதமர் மோடி நாட்டை காப்பாற்ற போகிறாரா?. அமெரிக்காவுக்கு அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டார். அமெரிக்காவினுடைய அடிமைகளாக நம்மளையெல்லாம் வைத்திருக்கிறார். அதுதான் அவர் இந்த 11 ஆண்டு காலத்தில் செய்திருக்கிற மிகப்பெரிய சாதனை என்று சொல்ல முடியும். சட்டம் ஒழுங்கு பிரச்னையை சொல்வதை தவிர வேற வேலையே கிடையாது. அவங்களுக்கு சட்டம் ஒழுங்கு நல்லா இருக்கு. இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு பாதுகாப்பாக இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான். எல்லா பேப்பர்லயும் பாருங்க. ஒவ்வொரு மாநிலத்திலும் என்னென்ன கலாட்டாக்கள் நடக்குது, என்னென்ன பிரச்னைகள் நடக்குது, என்ன அடிதடி சண்டைகள் நடக்குது, என்ன கலவரங்கள் நடக்குது என்பதெல்லாம் தினசரி பேப்பர்கள்ல வருகிறது. தமிழ்நாட்டுல அதில் ஒரு பங்கு வந்தா பெரிய விஷயம். எனவே, தமிழ்நாட்டில் தான் இன்றைக்கு சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது. மானாமதுரை வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. நாங்கள் யார் தவறு செய்தாலும் யாரையுமே எங்களுடைய முதலமைச்சர் காப்பாற்ற மாட்டார். சி.பி.சி.ஐ.டி விசாரணையில் உண்மை தெரியும். லாக்-அப் மரணங்களைப் பற்றி அ.தி.மு.க பேசவே முடியாது. அ.தி.மு.க ஆட்சியில் தினசரி எத்தனை நடந்துச்சுன்னு யாருக்குமே தெரியாது. அந்த அளவுக்கு லாக்-அப் மரணங்கள் எல்லாம் நடந்திருக்கு. அதனால் லாக்-அப் மரணங்கள் அ.தி.மு.க ஆட்சியில் கிடையாது, தி.மு.க ஆட்சியில்தான் 27 அப்படின்னு சொன்னா அதை விட அப்பட்டமான பொய் வேற எதுவும் இருக்க முடியாது. எங்களைப் பொறுத்தவரை லாக்-அப் மரணம்னா அதுக்கு விசாரிச்சு உரிய தண்டனை நடவடிக்கை எடுக்கப் போறோம், தண்டனை கொடுக்கப் போறோம். நாங்க யாரையும் அடித்துக் கொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்குக் கிடையாது. அவங்களுக்குத்தான் அதெல்லாம். அங்கொன்றும் இங்கொன்றும் ஒரு சில சம்பவங்கள் நடப்பது உண்டு. ஆனால், இந்தியா என்று எடுத்துக்கொணண்டால் இங்கே இருக்கக்கூடிய மாநிலங்களிலேயே சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கக்கூடிய மாநிலம், பாதுகாப்பாக இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான். அதுக்காக எந்தச் சம்பவமுமே நடக்கலைன்னு சொல்ல முடியாது. எஃப்.ஐ.ஆர் போட்டுக்கிட்டுத்தான் இருக்கோம். ஆனால், இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் இன்றைக்குச் சிறப்பான மாநிலம், பாதுகாப்பான மாநிலம். சமையல் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என்றும் தட்டுப்பாடு இருந்தால் நானே தருகிறேன் என்றும் நயினார் கூறியுளள்ளது பற்றி கேட்க்கிறீர்கள். ஒருவேளை அவர் பதுக்கி வைத்திருப்பாரோ என்னவோ தெரியவில்லை. என்.டி.ஏ கூட்டணியை பார்த்து எங்களுக்கு என்ன பயம்?. அவர்கள் தான் பயந்து ஒவ்வொருவர் காலில் விழுந்து எங்களுடன் கூட்டணிக்கு வாருங்கள் என்று கெஞ்சி வருகின்றனர். எங்களுக்கு பயமில்லை. 2026 -ல் நாங்கள்தான் வெற்றியடைய போகிறோம். அது, தெரிந்து விட்டது. அது அவர்களுக்கும் தெரிந்து விட்டது. அதனால் தான் இன்னும் இழுத்துக் கொண்டு இருக்கின்றனர்.

ragupathi

தொகுதி உடன்பாட்டை கூட அவர்களால் செய்ய முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். என்.டி.ஏ கூட்டணியில் எத்தனை கட்சிகள் கூட்டணியில் சேர்ந்தாலும் இன்றைய தி.மு.க கூட்டணியை தமிழ்நாட்டில் அவர்களால் எதுவும் செய்ய முடியாது. கரூரில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் பார்த்ததை தவிர செந்தில் பாலாஜி என்ன தவறை செய்தார்?. செந்தில் பாலாஜிக்கு சி.பி.ஐ சம்மன் கொடுத்துள்ளது. தி.மு.க-வை மிரட்டி பார்க்கின்ற செயலாக எடுத்துக் கொள்ளலாம். அதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். செந்தில் பாலாஜி இதையெல்லாம் பலமுறை சந்தித்தவர். அவர் தைரியசாலி. மிகவும் தைரியமாக அவர் எதிர்கொள்வார். என்.டி.ஏ கூட்டணிக்கு விஜயை கொண்டு வரத்தான் சி.பி.ஐ சம்மன் அனுப்பி இருப்பதாக கூறப்படுவது பற்றி கேட்கிறீர்கள். அது, மோடிக்கும், அமித்ஷாவுக்கும் உண்டான வெளிச்சம். எங்களுக்குத் தெரியாது, அந்த வெளிச்சம்" என்றார்.

ராஜீவ் காந்தி பதவிக்கு வேட்டு! - `டெண்டர் முதல் இன்ஸ்டா வரை...' - வெடித்துக் கிளம்பிய விவகாரம்!

தி.மு.க வின் மாணவர் அணிச் செயலாளராகச் செயல்பட்டு வந்த ராஜீவ் காந்தியை தீடிரென அந்தப் பதவியிலிருந்து நீக்கியுள்ளது தி.மு.க தலைமை. அவருக்கு கொள்கை பரப்பு இணைச் செயலாளர் என்ற பதவியைக் கொடுத்துள்ளது. பெண்... மேலும் பார்க்க

ஆதவ் டேபிள் ஃபேன்; ஆனந்த் எலெக்ட்ரிக் குக்கர்! - போட்டி போட்டு பரிசுப் பொருட்களை இறக்கும் தவெக-வினர்

தவெகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை விஜய் உறுதி செய்திருக்கும் நிலையில், சென்னைக்குள் போட்டி போடும் தவெகவின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் ஆதவ் அர்ஜூனாவும் போட்டிப் போட்டுக் கொண்டு வாக்காளர்களுக்கு... மேலும் பார்க்க

ஈரான் தாக்குகிறதுதான்; ஆனாலும், மோதாமல் 'சைலன்ட்டாக' இருக்கும் வளைகுடா நாடுகள் - என்ன காரணம்?

ஈரான் மீது போர் தொடுத்தது என்னவோ அமெரிக்காவும், இஸ்ரேலும் தான். ஆனால், ஈரான் வளைகுடா நாடுகளையும் சேர்த்துக் குறி வைக்கின்றது. 'அமெரிக்காவை எங்களால் நேரடியாகத் தாக்க முடியாது. அதனால், வளைகுடா நாடுகளில்... மேலும் பார்க்க

'கூட்டணிக்கு போகலாமா?'- அவசர மா.செக்கள் மீட்டிங்கில் ஆனந்த் கேட்ட கேள்வி; ட்விஸ்ட் கொடுக்கும் விஜய்?

தவெக சார்பில் திடீரென அவசர அவசரமாக கூட்டப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் ஆனந்த், 'நாம் கூட்டணிக்கு போகலாமா? உங்களுடைய விருப்பம் என்ன?' என நிர்வாகிகள் மத்தியில் கேட்டது அரசியல் வட... மேலும் பார்க்க

ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து மும்பை வந்தடைந்த கச்சா எண்ணெய் கப்பல் - கைகொடுத்த `Dark Mode' டெக்னிக்!

கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக ஹார்முஸ் ஜலசந்தியில் பல பில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் கொண்ட கப்பல்கள் நின்று கொண்டிருக்கின்றன. இதற்கு ஈரான் போர் தான் காரணம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஹார்முஸ் ஜலச... மேலும் பார்க்க

திருத்தணி: திமுக-வில் கோஷ்டி பூசல்; சசிகலா ஆதரவாளரால் நெருக்கடியில் அதிமுக -கட்சிகளில் நிலவரம் என்ன?

திருவள்ளூர் மாவட்டத்தில் முருகனின் அறுபடை வீடு அமைந்துள்ள திருத்தணி தொகுதியில் தெலுங்கு பேசும் மக்கள் அதிகளவில் உள்ளனர். தொகுதியில் வன்னியர் சமூகத்தினரும் முதலியார் சமூகத்தினரும் மெஜாரிட்டியாக இருக்கி... மேலும் பார்க்க