செய்திகள் :

'கூட்டணிக்கு போகலாமா?'- அவசர மா.செக்கள் மீட்டிங்கில் ஆனந்த் கேட்ட கேள்வி; ட்விஸ்ட் கொடுக்கும் விஜய்?

post image

தவெக சார்பில் திடீரென அவசர அவசரமாக கூட்டப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் ஆனந்த், 'நாம் கூட்டணிக்கு போகலாமா? உங்களுடைய விருப்பம் என்ன?' என நிர்வாகிகள் மத்தியில் கேட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

Bussy Anand
Bussy Anand

கடந்த மார்ச் 10 ஆம் தேதி தவெகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜய் உள்ளரங்கக் கூட்டத்தில் உறுதி செய்திருந்தார். இந்நிலையில், தவெக தனித்து போட்டியிட தயாராகிறது எனும் தோற்றம் உண்டாகியது. ஆனால், திடீரென தவெக தரப்பில் ஒரு ட்விஸ்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அவசர கூட்டம்...!

இன்று மதியம் 12 மணியளவில் மாவட்டச் செயலாளர்களின் வாட்ஸ் அப் குழுவில் மீட்டிங் லிங்கை பதிவிட்டு, 'மதியம் 12:30 மணிக்கு அவசர ஆலோசனைக் கூட்டம் இருக்கிறது. அத்தனை மா.செக்களும் தவறாமல் இணையுங்கள்' என ஒரு செய்தியை ஆனந்த் அனுப்பியிருக்கிறார். 12:45 மணியளவில் கூட்டம் தொடங்கியிருக்கிறது.

TVK Vijay - தவெக விஜய்
TVK Vijay - தவெக விஜய்

20 நிமிடங்களுக்கு மட்டுமே கூட்டம் நடந்திருக்கிறது. அதில்தான் பொதுச்செயலாளர் ஆனந்த் சர்ப்ரைஸாக, 'நாம் கூட்டணிக்கு செல்லலாமா? உங்களின் கருத்து என்ன? குறிப்பாக, திமுகவை வீழ்த்த நமக்கு கூட்டணி தேவையா இல்லையா?' எனக் கேட்டிருக்கிறார். திடீரென கூட்டப்பட்ட கூட்டம் என்பதால் சில மா.செக்கள் ஆப்செண்ட். கூட்டத்தில் இருந்தவர்கள் தங்களின் கருத்துகளை கூறியிருக்கின்றனர்.

கணிசமானோர் நாம் கூட்டணிக்கு சென்றால்தான் திமுகவை வீழ்த்த முடியும் எனக் கூறியிருக்கின்றனர். பதிலுக்கு ஆனந்த், 'அப்படி கூட்டணி சென்றால் பலருக்கும் சீட் கிடைக்காதே?' எனக் கேட்டிருக்கிறார். 'கட்சியின் நலன் தான் எங்களுக்கு முக்கியம். தளபதி வெல்ல வேண்டும். அவ்வளவுதான்...' என பாசிட்டிவாக மா.செக்கள் பதில் கூறியிருக்கின்றனர். மேலும், '50-60 சீட்டுகள் + தளபதிக்கு துணை முதல்வர் பதவி என்றால் சிறப்பாக இருக்கும்' என்றும் சில மா.செக்கள் கூறியிருக்கின்றனர்.

TVK Vijay
TVK Vijay

கூட்டணிக்கு க்ரீன் சிக்னல் கிடைத்த உற்சாகத்தில் கடைசியாக பேசிய ஆனந்த், 'கூட்டணி குறித்த உங்களின் கருத்துகளை தலைவரிடம் எடுத்துச் செல்கிறேன். நீங்கள் எப்போதும் போல தொய்வில்லாமல் உங்களின் வேலையை செய்து கொண்டிருங்கள்!' எனக் கூறி முடித்திருக்கிறார்.

சில மா.செக்கள், 'முதல் தேர்தலில் நம் பலத்தை நிரூபித்தால், அடுத்தடுத்த தேர்தலில் நம்மை நோக்கி கட்சிகள் வரும். அதனால் தனித்தே போட்டியிடலாம்' என்றும் கூறியிருக்கின்றனர்.

'கூட்டணின்னா எந்த கட்சி கூட்டணிண்ணா? என சில மா.செக்களிடம் கேட்டோம். 'வேற என்னங்க ஆப்சன் இருக்கு. உங்களுக்கும் தெரியும். எங்களுக்கு தலைவர் ஜெயிச்சா போதும்!' என குஷியாக பேசுகின்றனர் சில மா.செக்கள்!

ஈரான் தாக்குகிறதுதான்; ஆனாலும், மோதாமல் 'சைலன்ட்டாக' இருக்கும் வளைகுடா நாடுகள் - என்ன காரணம்?

ஈரான் மீது போர் தொடுத்தது என்னவோ அமெரிக்காவும், இஸ்ரேலும் தான். ஆனால், ஈரான் வளைகுடா நாடுகளையும் சேர்த்துக் குறி வைக்கின்றது. 'அமெரிக்காவை எங்களால் நேரடியாகத் தாக்க முடியாது. அதனால், வளைகுடா நாடுகளில்... மேலும் பார்க்க

ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து மும்பை வந்தடைந்த கச்சா எண்ணெய் கப்பல் - கைகொடுத்த `Dark Mode' டெக்னிக்!

கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக ஹார்முஸ் ஜலசந்தியில் பல பில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் கொண்ட கப்பல்கள் நின்று கொண்டிருக்கின்றன. இதற்கு ஈரான் போர் தான் காரணம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஹார்முஸ் ஜலச... மேலும் பார்க்க

திருத்தணி: திமுக-வில் கோஷ்டி பூசல்; சசிகலா ஆதரவாளரால் நெருக்கடியில் அதிமுக -கட்சிகளில் நிலவரம் என்ன?

திருவள்ளூர் மாவட்டத்தில் முருகனின் அறுபடை வீடு அமைந்துள்ள திருத்தணி தொகுதியில் தெலுங்கு பேசும் மக்கள் அதிகளவில் உள்ளனர். தொகுதியில் வன்னியர் சமூகத்தினரும் முதலியார் சமூகத்தினரும் மெஜாரிட்டியாக இருக்கி... மேலும் பார்க்க

'புறக்கணித்த விஜய் தரப்பு; முயன்று பார்த்த திமுக!' - காளியம்மாள் அதிமுகவில் இணைந்த பின்னணி!

நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள் இன்று எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்திருக்கிறார். கடந்த ஓராண்டாக தவெக, திமுக, சசிகலா என பலரும் காளியம்மாளுடன் பேசி வந்தனர். அப்படிய... மேலும் பார்க்க

பண்ணையாளர்கள் அறிமுகப்படுத்திய பரிசுகள்... வளைக்கப்பட்ட வாக்காளர்கள்! | நினைவுச் சுவடுகள் 09

பரிசுகளால் வளைக்கப்பட்ட வாக்காளர்கள்நினைவுச் சுவடுகள்தமிழ்நாட்டு அரசியலில் தேர்தல்கள் என்றால் பொதுக்கூட்டம், மாநாடு, கருத்தியல், கொள்கைகள், பிரசாரம், தலைவர்களின் பேச்சுகள் மட்டுமல்ல; அதோடு சேர்ந்து பர... மேலும் பார்க்க

``கூட்டம் சேர்ப்பவரெல்லாம் தலைவன் ஆகிவிட முடியாது!’’ - ஆதவ் கருத்துக்கு ரஜினி ரசிகர் மன்றம் பதிலடி

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா நேற்று ரஜினிகாந்த் குறித்து கருத்தொன்றை பேசியிருந்தார். அதாவது, ``தமிழ்நாட்டில் `எம்.ஜி.ஆருக்குப் பிறகு பிரபலமான அரசியல் தலைவராக வ... மேலும் பார்க்க