செய்திகள் :

Youth: `தனுஷ் தேர்வு பண்ண ஆட்கள் பெரிய இடத்தில இருக்காங்க, நான் பேர் சொல்ல விரும்பல, ஆனா.!'- கருணாஸ்

post image

கென் கருணாஸ் 'அசுரன்', 'விடுதலை 2', 'வாத்தி' போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருந்தார்.

இதனிடையே தனுஷின் சில படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். தற்போது 'யூத்' படத்தை இயக்கி, இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். அனிஷ்மா, தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.

 'யூத்' படம்
'யூத்' படம்

இந்தப் படம் மார்ச் 19-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரி- ரிலீஸ் ஈவென்ட் இன்று ( மார்ச். 13) நடைபெற்றிருக்கிறது.

இதில் நடிகர் தனுஷ் கலந்துகொண்டிருக்கிறார். தனுஷ் குறித்து மேடையில் பேசிய கருணாஸ், " 'காதல் கொண்டேன்' படத்தை பார்த்துவிட்டு, இந்திய சினிமாவுக்கு, தமிழ் சினிமாவுக்கு ஒரு மிகச்சிறந்த நடிகனை கொடுத்திருக்கீங்க என செல்வராகவனிடம் சொன்னேன்.

இன்னைக்கு இந்த சின்ன வயசுல ரெண்டு தேசிய விருது வாங்கின ஒரு நடிகர் தனுஷ் மட்டும் தான். இவர் நடிக்க வந்த புதுசுல நிறைய கேலி செஞ்சாங்க.

நிறைய பத்திரிகைகள் இவர் எல்லாம் எதுக்கு நடிக்க வந்தாரு'ன்னு விமர்சிச்சு எழுதுனாங்க. ஆனா இன்னைக்கு இந்த அளவுக்கு வளர்ந்துருக்காரு.

12 வயசுல இருந்து நான் சினிமாவுலதான் இருக்கேன். சினிமாவை தவிர எனக்கு வேற எதுவும் தெரியாது. சினிமாவுக்கு உண்மையா இருந்தா, சினிமா நம்மல ஒருபோதும் கைவிடாது.

தனுஷ்
தனுஷ்

அப்படி நான் வச்ச நம்பிக்கை தான் என் மகன் கென். இன்னைக்கு தவிர்க்க முடியாத சூழல்ல அவர் இயக்குநராகி இருக்காரு.

ஆனால் அதை கத்துக்கோன்னு சொன்னது தனுஷ் தான். தனுஷ் தேர்வு பண்ண ஆட்கள் யாரும் தோற்றது கிடையாது. எல்லாரும் பெரிய இடத்தில தான் இருக்காங்க. ஆனால் நான் பெயர் சொல்ல விரும்பல.

அவரோட பழகி பல வருஷம் ஆகிருச்சு. சினிமாவை தவிர வேற எந்த சிந்தனையும் இல்லாத ஒரு நபர் அவர்தான்" என கருணாஸ் பேசுயிருக்கிறார்.

Youth: "நான் 'அசுரன்' படத்துல சொன்னதை தவிர எல்லாத்தையும் பண்ணிருக்க.!"- கென்னை கலாய்த்த தனுஷ்

'அசுரன்', 'விடுதலை 2', 'வாத்தி' போன்ற படங்களில் நடித்த கென் இயக்கத்தில் 'யூத்' படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரி- ரிலீஸ் ஈவென்ட் இன்று ( மார்ச். 13) நடைபெற்றிருக்கிறது. இதில் கலந்த... மேலும் பார்க்க

பேரும் புகழும் காதலியும் தந்த ஜப்பானில் செட்டில் ஆகிட்டேன்!- 'போடா போடா புண்ணாக்கு' பாடிய‌ நீலகண்டன்

தமிழ் சினிமாவில் தொண்ணூறுகளில் வெளியாகி பட்டையைக் கிளப்பிய ஒரு படம் 'என் ராசாவின் மனசிலே'. ராஜ்கிரண் தயாரித்து நடிக்க அவருக்கு ஜோடியாக நடித்தார் மீனா. படத்தை இயக்கியது கஸ்தூரி ராஜா. நடிகர் வடிவேலுவின்... மேலும் பார்க்க

என்ஜாய் என்சாமி: 'என்னிடம் விவாதிக்கத் தயாரா?'- அறிவு குற்றச்சாட்டுக்கு சந்தோஷ் நாராயணன் பதில்

கடந்த 2021-ம் ஆண்டு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் தீ மற்றும் அறிவு பாடி வெளியான ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் பட்டித் தொட்டி எங்கும் பரவி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தப் பாடல் வெளியாகி ஐந... மேலும் பார்க்க

என்ஜாய் என்சாமி: 'என் உழைப்புக்கான ஊதியமும், உரிமையும் கிடைக்கல.!'- பாடகர் அறிவு ஆதங்கம்

கடந்த 2021-ம் ஆண்டு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் தீ மற்றும் அறிவு பாடி வெளியான ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தப் பாடல் வெளியாகி ஐந்த... மேலும் பார்க்க

Youth: " 'அசுரன்' படத்தில நடிக்க கென் வேண்டாம்'னு வெற்றி கிட்ட சொன்னேன், ஏன்னா.!"- தனுஷ் ஷேரிங்

கென் கருணாஸ் 'அசுரன்', 'விடுதலை 2', 'வாத்தி' போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருந்தார். இதனிடையே தனுஷின் சில படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். தற்போது 'யூத்' படத்தை இயக்க... மேலும் பார்க்க