செய்திகள் :

சென்னை: அரசு மருத்துவமனையில் டாக்டர்போல நடித்து தங்க நகைகள், செல்போன் திருட்டு - கூட்டாளிகள் கைது!

post image

சென்னை, கொளத்தூரைச் சேர்ந்தவர் காஞ்சனா. இவரின் மாமியாருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதனால் மாமியாரை அழைத்துக் கொண்டு காஞ்சனா, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்தார். காஞ்சனாவின் மாமியாரை பரிசோதித்த டாக்டர்கள், தலையில் கட்டியிருக்கிறது. அதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறியதோடு மருத்துவமனையில் உள்நோயாளியாக 04.06.2025-ம் தேதி அனுமதித்தனர். மாமியாரை அருகிலிருந்து கவனித்துக் கொள்ள காஞ்சனாவும் சில தினங்கள் மருத்தவமனையில் தங்கியிருந்தார். 06.06.2025 -ம் தேதி மாமியாரை அழைத்துக் கொண்டு மயக்கவியல் டாக்டரை பார்க்க சென்றார். அப்போது அங்கிருந்தவர், தன்னை மயக்கவியல் டாக்டர் என காஞ்சனாவிடமும் அவரின் மாமியாரிடமும் அறிமுகம் செய்து கொண்டு மெடிக்கல் ரிப்போர்ட்களை பார்த்திருக்கிறார்.

டாக்டர் எனக் கூறி நகைகளை திருடிய ராஜேஷ் பிரித்வி

அதைத் தொடர்ந்து 07.06.2025-ம் தேதி காஞ்சனாவின் மாமியார் அட்மிட் செய்திருந்த வார்டுக்கு வந்த அந்த டாக்டர், மாத்திரைகளை எழுதி கொடுத்து 7-வது மாடிக்குச் சென்று வாங்கி வரும்படி காஞ்சனாவிடம் கூறியிருக்கிறார். அதனால் காஞ்சனாவும் மாத்திரைகளை வாங்க 7-வது மாடிக்கு சென்றிருக்கிறார். அப்போது அந்த டாக்டர், 7-வது மாடிக்கு வந்திருக்கிறார். 7-வது மாடியில் காஞ்சனா, மாத்திரைகளை வாங்க காத்திருந்தபோது அங்கு வந்த டாக்டர், உங்களுக்கும் ஹெல்த்தில் சில பிரச்னைகள் இருப்பது போல தெரிகிறது. அதனால் நீங்களும் ஸ்கேன் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். அதன்படி காஞ்சனாவும் ஸ்கேன் எடுக்க ஆயத்தமாகியிருக்கிறார். ஸ்கேன் அறைக்குள் செல்வதற்கு முன்பு காஞ்சனா, தான் அணிந்திருந்த தங்க நகைகளை கழற்றி பையில் போட்டிருக்கிறார். அதைப்பார்த்த டாக்டர், காஞ்சனாவிடம் நகைகள், செல்போனை யாராவது திருடிச் சென்றுவிடுவார்கள். அதனால் என்னுடைய கேபினில் பத்திரமாக வைத்து விட்டு வருகிறேன் என அந்த டாக்டர் அக்கறையாக கூறியிருக்கிறார். அதைக் கேட்ட காஞ்சனா, அரசு மருத்துவமனையில் இப்படியொரு மனித நேய மிக்க டாக்டரா என்று நினைத்துக் கொண்டு அறையில் காத்திருந்திருக்கிறார்.

காஞ்சனாவிடமிருந்து தங்க நகைகளையும் செல்போனையும் வாங்கிச் சென்ற டாக்டர், நீண்ட நேரமாகியும் திரும்ப வரவில்லை. அதனால் அதிர்ச்சியடைந்த காஞ்சனா, டாக்டரின் அடையாளங்களை அங்குள்ள ஊழியர்களிடம் கூறி விசாரித்திருக்கிறார். அப்போது அவர்கள் அப்படியொரு டாக்டர் இங்கு வேலை பார்க்கவில்லை எனக் கூறியிருக்கிறார்கள். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த காஞ்சனா, மருத்துவமனைன வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மருத்துவமனையில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போதுதான் காஞ்சனாவிடம் டாக்டர் என கூறி அறிமுகமானவர், உண்மையிலேயே டாக்டர் இல்லை எனத் தெரியவந்தது. தொடர்ந்து அவர் யார் என்று போலீஸார் விசாரித்தனர்.

அரவிந்தன்

விசாரணையில் இந்த நூதன திருட்டில் ஈடுபட்டது கோவையைச் சேர்ந்த ராஜேஷ் பிரித்வி எனத் தெரியவந்தது. பின்னர் அவரைப் பிடித்து விசாரித்தபோது நூதன திருட்டுக்கு மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்தன் என்பவரும் உடந்தை எனத் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். காஞ்சனாவிடம் தங்க நகைகள், செல்போனை டாக்டர் எனக் கூறி திருடிய ராஜேஷ் பிரித்வி, அதை விற்று பழைய கார் ஒன்றை வாங்கியிருக்கிறார். இதையடுத்து அவர்களிடமிருந்து தங்க நகைகள், கார் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜேஷ் பிரித்வி மீது இரண்டு கொலைகள் உள்பட சில குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. .தொடர்ந்து இருவரின் பின்னணி குறித்தும் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கு; ஆறு காவலர்கள் பணியிடை நீக்கம்!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை - கிருஷ்ணராஜபுரம் காலனியைச் சேர்ந்தவர் ஆகாஷ் டெலிசன். பொறியியல் பட்டதாரியான இவர், பக்கத்து ஊரில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட தகராறில் அவர்களைக் கொலைசெய்ய முயன்றதாகக் கூறி, மான... மேலும் பார்க்க

நெல்லை: `மனைவி மீது சந்தேகம்' - தலையைத் துண்டித்து சாலையில் வைத்த கொடூர கணவன்

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பெரியகுளம் தெருவைச் சேர்ந்தவர் முத்துப்பட்டன். கட்டிடத் தொழிலாளியான இவரது மனைவி சுதா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சுதாவின் நடத்தையில் முத்துப்... மேலும் பார்க்க

சென்னை: தொழிலதிபரை நம்பவைத்து ரூ.30 லட்சம் பறிப்பு; பட்டதாரிகள் போலீஸில் சிக்கிய பின்னணி!

சென்னை வேளச்சேரி, காந்தி நகரில் வசித்து வருபவர் உத்தம்சன் (65). இவர் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இவரின் சொந்த மாநிலம் ராஜஸ்தான். ஜவுளி வியாபாரத்தோடு பழைய தங்க நகைகளை வாங்கும் பிசினஸிலும் ஈடுபட்டு வருக... மேலும் பார்க்க

விருதுநகர்: மாயமான மூதாட்டி; அழைத்துச் சென்ற தாய், மகள் - நகைக்காக கொல்லப்பட்ட கொடூரம்

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள பண்ணை மூன்றடைப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன்,மனைவி அம்பிகா (வயது 62). இவர் கடந்த மார்ச் 8-ம் தேதி, காரியாபட்டி அருகேயுள்ள சித்து மூன்றடைப்பு கிராமத்திற்கு... மேலும் பார்க்க

'பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை' - 57 வயது ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியரும் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தொப்பம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 100- க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நில... மேலும் பார்க்க

`உனது வார்த்தைகள் என் வாழ்க்கையை முடித்துக்கொள்ள போதுமானது' - பெண் பல் மருத்துவரின் விபரீத முடிவு

மும்பை அண்டாப்ஹில் பகுதியை சேர்ந்த ஸ்துதி சோனாவானே, பல் மருத்துவம் படித்துள்ளார். அவர் இப்போது முதுகலைப் படிப்பு படித்து வந்தார். சோனாவானே பைசுல் முகமது கான் என்பவரை காதலித்து வந்தார். அவர்களுக்குள் ச... மேலும் பார்க்க