செய்திகள் :

உடல் பருமன் மட்டும் அல்ல… நாக்கும் பருமனாகலாம்! - காரணங்களும், தீர்வும்!

post image

உடல் பருமன், உடல் எடை அதிகரிப்பு பற்றிய விஷயங்களைப் பார்க்கிறோம், கேட்கிறோம், பேசுகிறோம். ஆனால், உடலின் முக்கிய உறுப்பான நாக்கின் பருமன் பற்றி, பெரும்பாலானவர்களுக்குத் தெரிவதில்லை. பேசுவது, சாப்பிடுவது என முக்கிய விஷயங்களுக்கு உறுதுணையாக இருக்கும் நாக்கில் ஏற்படும் பருமனுக்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் பற்றி விளக்குகிறார், சென்னையைச் சேர்ந்த மூத்த பொது மருத்துவர் ஆர்.பி.சுதாகர்.

நாக்கு பருமன்

"நாக்கு தடிமானம் ஆவதை மருத்துவ ரீதியாக 'மேக்ரோக்ளாசியா' (Macroglossia) என்போம். நாக்கு என்பது அளவுக்கு அதிகமாக பருமனாக இருப்பது. இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. மரபணு குறைபாட்டோடு பிறக்கும் குழந்தைகளுக்கு பிறவியிலேயே இந்தப் பிரச்னை இருக்கும். நாக்கு இயல்பான அளவைவிட பெரிதாக இருக்கும்.

அவர்கள் தூங்கும்போது மூச்சு விட சிரமப்படுவார்கள். பற்கள் சரியாக அமைவதில் (Align) பிரச்னை ஏற்படலாம். அதேபோல பற்களின் நடுவே இடைவெளிகள் ஏற்படலாம். இதுபோன்ற காரணங்களால் உணவை மெல்ல முடியாமல் சிமரப்படுவார்கள். சில நேரங்களில் நாக்கை அடிக்கடி கடித்துக்கொள்ளும் நிலைகூட ஏற்படலாம்.

குறட்டை

பெரியவர்களுக்கும்...

பெரியவர்களுக்கு நாக்கு பருமனாவதற்கான பொதுவான காரணம் ஹைப்போதைராய்டிஸம் எனப்படும் தைராய்டு குறைபாடு. தைராய்டு சுரப்பி குறைவாக வேலை செய்வதால், நாக்கின் உள் சில புரதங்கள் படிந்து, நாக்கு தடிமனாக ஆகும். இவர்களுக்கும் தூங்கும்போது மூச்சு விடுவதில் சிரமம், இரவு நேரங்களில் மூச்சுத் திணறல், குறட்டைப் பிரச்னை, பற்களின் அலைன்மென்ட் மாறுவது, பற்கள் முன்னோக்கி துருத்திக்கொண்டு வருவது போன்ற பிரச்னைகள் வரலாம்.

அதேபோல பிறவியிலேயே ஹைப்போ தைராய்டு (congenital hypothyroidism) உள்ள குழந்தைகளில், நோய் கண்டறியும் போது சுமார் 12 முதல் 25 சதவிகிதம் பேருக்கு நாக்கு பெரிதாகக் காணப்படலாம். ஹைப்போ தைராய்டுக்கு பிரச்னைக்கு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, தைராய்டு ஹார்மோன் மருந்துகளை தொடர்ந்து எடுத்தால் இந்த அறிகுறிகள் படிப்படியாக குறையும். எனவே, இந்த அறிகுறி இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் தைராய்டு அளவுகளை பரிசோதிப்பதும் முக்கியமானது.

பொது மருத்துவர் ஆர்.பி. சுதாகர்

உடலில் வளர்ச்சி ஹார்மோன் அளவுக்கு அதிகமாகச் சுரப்பதால் ஏற்படும் 'அக்ரோமேகலி' (Acromegaly) என்ற அரிதான நோயின் காரணமாகவும் இது ஏற்படலாம். மூளையின் அடிப்பகுதியில் காணப்படும் பிட்யூட்டரி சுரப்பி, வளர்ச்சி ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இந்த ஹார்மோன் அதிகமாக சுரக்கும்போது உடலின் சில பகுதிகள் இயல்பைவிட அதிகமாக வளரத் தொடங்கும். இதுவும் நாக்கு பருமனாக ஆவதற்கான காரணமாக இருக்கலாம். இவற்றால் பாதிக்கப்பட்ட 54 முதல் 69 சதவிகிதம் பேருக்கு நாக்கு பருமனாக மாறலாம்.

இதைத்தவிர, நாக்கு உள்ளிட்ட பல்வேறு உறுப்புகளில், திசுக்களில் அசாதரண புரதம் படியும் பிரச்னையான, 'அமிலாய்டோசிஸ்' (Amyloidosis) காரணமாகவும் நாக்கு பருமனாகலாம். சில நேரங்களில் நாக்கில் ஏற்படும் சில சாதாரண கட்டிகள், புற்றுநோய் கட்டிகள் போன்ற காரணத்தாலும், நாக்குப் பகுதியில் உள்ள ரத்த நாளங்கள் பெரிவதாலும் நாக்கு தடினமாக வாய்ப்புண்டு. இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட 10 முதல் 25 சதவிகிதம் பேருக்கு நாக்கு பருமனாகக் காணப்படலாம்.

நாக்கை கடித்துக்கொள்து போன்ற அறிகுறிகள் தென்படும்.

என்ன காரணங்களாக இருந்தாலும், மூச்சுத்திணறல், பற்களின் அலைன்மென்ட் மாறுவது, நாக்கை கடித்துக்கொள்து போன்ற அறிகுறிகள் தென்படும். காரணத்தைக் கண்டறிந்து, அதற்கு தீர்வு கண்டாலே நாக்கு பருமன் பிரச்னைக்குத் தீர்வு கிடைத்துவிடும். உடல் பருமன், அதிக எடை போன்ற காரணங்களால் உடலில் கொழுப்பு சேர்வதற்கும் நாக்கு பருமனாவதற்கும் தொடர்பில்லை" என்கிறார் மருத்துவர் ஆர்.பி.சுதாகர்.

Doctor Vikatan: Pregnancy Test-ல் ஆணுக்கு பாசிட்டிவ்... இப்படியும் நடக்க வாய்ப்பு உண்டா?

Doctor Vikatan: மனைவிக்காக வாங்கிய பிரெக்னன்சி கிட்டில், கணவன் தனது சிறுநீரை டெஸ்ட் செய்ததாகவும், அதில் அவருக்கு பிரெகன்சி பாசிட்டிவ் என்று வந்ததாகவும் சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். ஆண்களுக்கும் பி... மேலும் பார்க்க

Doctor Vikatan: வேகமாகப் பரவும் சின்னம்மை; தடுக்கவும் தொற்றுக்குள்ளானவர்கள் குணமாகவும் என்ன வழி?

Doctor Vikatan: கோடையின் தாக்கம் ஆரம்பிப்பதற்கு முன்பே, சின்னம்மை தொற்று பரவுவதாகக் கேள்விப்படுகிறோம். வீட்டிலுள்ள குழந்தைகள், முதியவர்கள் இந்தத் தொற்றால் பாதிக்கப்படாமல் இருக்க என்ன வழி... தொற்று பாத... மேலும் பார்க்க

Doctor Vikatan: Soap அல்லது Syndet bar... சருமத்துக்கு எது சிறந்தது, ஏன்?

Doctor Vikatan: காலங்காலமாக நம்மில் பலரும் குளிப்பதற்கு சோப்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில், சோப் பயன்படுத்தவே கூடாது, அது சருமத்தை வறண்டு போகச் செய்துவிடும் என்றும், அதற்கு பதிலாக சி... மேலும் பார்க்க

Doctor Vikatan: வெளியே கேட்கும் வயிற்றுப் பொருமல் சத்தம்; காரணமும் தீர்வும் என்ன?

Doctor Vikatan: என் வயது 45. கடந்த சில தினங்களாக வயிற்றுக்குள் ஏதோ உருள்வது போன்ற பொருமல் சத்தம் கேட்கிறது. அந்தச் சத்தம் எனக்கு மட்டுமல்ல, வெளியேவும் கேட்கிறது. இதனால் மிகவும் தர்மசங்கடமாக உணர்கிறேன்... மேலும் பார்க்க

நட்சத்திரங்களின் வெயிட் லாஸ் மருந்து! மேஜிக் செய்யுமா... பாதிப்பை ஏற்படுத்துமா?

சமீபகாலமாக உலகெங்கிலும் உள்ள ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அதிகம் உச்சரிக்கப்படும் ஒரு பெயர் 'ஓஸெம்பிக்' (Ozempic). ஹாலிவுட், பாலிவுட் நட்சத்திரங்கள் முதல் உள்ளூர் பிரபலங்கள் வரை பலரது உடல் எடை மா... மேலும் பார்க்க