செய்திகள் :

கலைஞர் கனவு இல்லம்: ஐந்து ஆண்டுகளில் ரூ.19,694 கோடியில் ஏழை மக்களுக்காக 4,29,394 வீடுகள்!

post image

தென்கடல் வளாகம் பொதுமை இன்றி

வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்

நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்

கடுமா பார்க்கும் கல்லா ஒருவருக்கும்

உண்பது நாழி உடுப்பது இரண்டே

பிறவும் எல்லாம் ஓரோக் கும்மே! -என்று புறநானூறு 189 ஆம் பாடல் சொல்கிறது. அதாவது அரசன் ஆயினும், ஆண்டி ஆயினும் அனைவரும் உண்பது ஒரு நாழி அளவுள்ள உணவே. அவர்களுக்கு இடுப்பில் உடுக்கும் துணியும், உடம்பின் மேல் அணியும் துணியும் என இரண்டு துணிகள்தான் தேவை; இதுபோல் பிற அனைத்தும் எல்லோர்க்கும் ஒரே அளவில்தான் தேவைப்படும் என்கிறது இந்த புறநானூற்றுப் பாடல் 

இவற்றுடன் எல்லோரும் மழை, வெயில் காலங்களிலும் புயல் வெள்ளக் காலங்களிலும் பாதுகாப்பாகத் தங்கி வாழ ஒரு வீடு என்பது மிகவும் முக்கியம் 

ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு வேண்டும் என்பதனை, ‘எலிவளை ஆயினும் தனிவளை தேவை’ என நம் நாட்டுப் பழமொழி கூறும்.

இவற்றின் அடிப்படையில்தான் நம் திராவிட மாடல் அரசு அனைவருக்கும் தேவைப்படும் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறது.

எல்லார்க்கும் எல்லாம் என்னும் திராவிட மாடல் அரசின் தத்துவத்தைத் தான் இந்தப் புறநானூற்றுப் பாடல் முழங்குகிறது.

கலைஞர் கனவு இல்லம்
கலைஞர் கனவு இல்லம்

கலைஞர் கனவு இல்லம்

எல்லோர்க்கும் உணவு தேவை. உணவுப் பொருள்களை ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்குகிறது. கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மூலம் நேரடி வருவாய் இல்லாத மகளிருக்கு நேரடியாகவே மாதம் ரூ.1000 தருகிறது. இந்த 1000 ரூபாயைக் கொண்டு தேவையானவைகளை வாங்கிக் கொள் என வழிகாட்டுகிறது திராவிட மாடல் அரசு!

அடுத்து, எல்லோர்க்கும் வீடு வேண்டும் அல்லவா?அதற்காகத்தான் கலைஞர் கனவு இல்லம் திட்டம்!

தமிழ்நாட்டில் உள்ள குடிசைகள் எல்லாவற்றையும் அகற்றிவிட்டு எல்லோர்க்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும் என்பது திராவிட மாடல் அரசின் இலக்கு. இதற்காக 2030 ஆம் ஆண்டிற்குள் 8 இலட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்பட வேண்டும் என முடிவு செய்துள்ளது. ஏழை எளிய மக்கள் வீடு கட்டிக்கொள்ள தலா ரூ. 3 இலட்சத்து 50 ஆயிரம் வீதம் 2 இலட்சம் குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.7,000 கோடி மதிப்பிலான திட்டத்தை அனுமதித்துள்ளது. இத்திட்டத்தின்கீழ் இரண்டே ஆண்டுகளில் 2 இலட்சம் வீடுகளில் 1,79,850 கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மீதி வீடுகள் கட்டப்படுகின்றன. இந்த ஆண்டில் மேலும் 1 இலட்சம் வீடுகள் ரூ. 3500 கோடியில் கட்டப்படும் என அறிவித்துள்ளது திராவிட மாடல் அரசு

இதில் ஒரு ஒப்பீடு 

2016-2021 ஐந்து ஆண்டுகளில் முந்தைய ஆட்சியில் 1 இலட்சம் வீடுகள் தான் கட்டப்பட்டன. ஆனால் 2024-2026 இரண்டே ஆண்டுகளில் 1,79,850 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு, மேலும் 1 இலட்சத்து 20  ஆயிரத்து 150 வீடுகள் கட்டப்படுகின்றன. 

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் மட்டும் அல்ல!

இலங்கை தமிழர்களுக்கு ரூ.589 கோடி ஒதுக்கீட்டில் 10,045 நிரந்தர வீடுகள் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டு 7,469 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. மேலும் தொடர்ந்து 1 இலட்சத்து 79 ஆயிரத்து 850 வீடுகள் கட்டப்படுகின்றன. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் ரூ.3,058 கோடியில் 2.63 இலட்சம் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. அடுக்குமாடி குடியிருப்புகள் திட்டத்தின்கீழ் ரூ.8,384 கோடியில் 58,211 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு; மேலும் 53,467 வீடுகளின் கட்டுமான பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்தத் திட்டத்தில் ஒரு ஒப்பீடு 

கலைஞர் கனவு இல்லம்
கலைஞர் கனவு இல்லம்

2016-2021 முந்தைய ஆட்சியில் 27,688 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டன. ஆனால், 2021-2026 திராவிட மாடல் ஆட்சியில் 58,211 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. திராவிட மாடல் அரசு அறிமுகப்படுத்திய அயோத்திதாச பண்டிதர் குறியிருப்பு மேம்பாட்டுத்  திட்டத்தில் ரூ.482 கோடி மதிப்பீட்டில் 5281 உட்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்கள்

2021-2026 திராவிட மாடல் ஆட்சியில் 23.56 இலட்சம் ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

பழங்குடியினர் நலம் நாடும் தொல்குடி திட்டத்தில் 

 ரூ. 221 கோடி மதிப்பீட்டில் 7,674 பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

ஒற்றைச் சாளர முறை திட்டத்தின்கீழ் 

24,446 மனைப்பிரிவு விண்ணப்பங்களுக்கும், 2002 கட்டட அனுமதி விண்ணப்பங்களுக்கு திராவிட மாடல் அரசு அனுமதி வழங்கியுள்ளது.  ஆகமொத்தம், திராவிட மாடல் அரசு 2021 முதல் ஐந்து ஆண்டுகளில் ரூ.19,694 கோடியில் ஏழைகளுக்காக 4,29,394 வீடுகளைக் கட்டியுள்ளது.

ரூ.482 கோடியில் ஆதிதிராவிடர் வாழும் பகுதிகளில் 5,281 கட்டமைப்புப் பணிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 23.56 இலட்சம் ஏழைகளின்   குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.  இப்படி எல்லாருக்கும் எல்லாம் என்னும் தத்துவத்தின்படி திராவிட மாடல் அரசு ஏழை எளிய நலிந்த சமுதாய மக்களின் அடிப்படைத் தேவைகளை எல்லாம் படிப்படியாக நிறைவேற்றி தமிழ்நாட்டிற்குப் பெருமைகளைச் சேர்க்கிறது!

`தவெக-வுடன் கூட்டணியா? டீயும் காபியும் எப்போதும் ஒன்று சேராது..!' - அண்ணாமலை பதில்

அதிமுக- பாஜக கூட்டணியில் விஜய்யின் தவெக-வை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம், இத... மேலும் பார்க்க

`என்.டி.ஏ கூட்டணியில் தவெக-வா?' - செய்தியாளர்களின் கேள்விக்கு சி.டி.ஆர்.நிர்மல் குமார் பதில்!

தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன. கூட்டணிப் பேச்சுவார்தை தொடங்கி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு என, தீயாக இர... மேலும் பார்க்க

பிரதமரின் தமிழ்நாடு வருகை; ரூ.5,650 மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார் மோடி!

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சட்டமன்றத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி நாளை (மார்ச் 11, 2026) தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இப்பயணத்தின் ... மேலும் பார்க்க

"சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை போக்க திமுக அரசின் திட்டம் என்ன?"- அன்புமணி ராமதாஸ் கேள்வி

ஈரான்- இஸ்ரேல் , வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பெட்ரோலிய பொருள்களை இந்தியாவுக்கு கொண்டுவருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்ட... மேலும் பார்க்க

திருச்சி: `கிரிக்கெட்டில் முதல் பந்தில் இருந்தே ரன் அடிப்பது முக்கியம்தான்; ஆனால்..!' - ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (09-03-2026) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற ‘ஸ்டாலின் தொடரட்டும் – தமிழ்நாடு வெல்லட்டும்’ கழகத்த... மேலும் பார்க்க

"பட்டியல் சமூக மக்களின் பிரச்சினைகளுக்கு செவி கொடுக்க மறுக்கிறது தமிழக அரசு"- பா.ரஞ்சித் காட்டம்

மானாமதுரையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர், காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த விவகாரம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இந்நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் இந்தச் சம்பவம் தொடர... மேலும் பார்க்க