செய்திகள் :

`தவெக-வுடன் கூட்டணியா? டீயும் காபியும் எப்போதும் ஒன்று சேராது..!' - அண்ணாமலை பதில்

post image

அதிமுக- பாஜக கூட்டணியில் விஜய்யின் தவெக-வை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம், இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "விஜய்யைப் பொறுத்தவரை நான் ஏற்கனவே பலமுறை சொல்லியிருக்கின்றேன்.

தவெக - விஜய்
தவெக - விஜய்

அதிகாரப்பூர்வமாக இந்த கட்சியினுடைய தலைவர் நயினார் நாகேந்திரன். அவர் இது போன்ற பேச்சுவார்த்தைகள் எதுவும் நடக்கவில்லை என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கின்றார்.

என்னைப் பொறுத்தவரை டீயும், காபியும் எப்போதும் ஒன்று சேராது என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன், காரணம் சித்தாந்தங்கள் வேறு.

ஆனால் இன்றைக்கு ஊடக நண்பர்கள் உங்களுடைய யூகத்தில் தான் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் இன்றைக்கு வலிமையாக இருக்கிறோம்.

அண்ணாமலை
அண்ணாமலை

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக இருக்கிறது, தேர்தலைச் சந்திப்பதற்குத் தயாராக இருக்கிறோம்.

பெரும் வெற்றியை நாங்கள் பெறுவோம் என்கின்ற முழு நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது" என்று பேசியிருக்கிறார்.

திமுக-வின் `தொகுதி குறைப்பு நடவடிக்கை' - அப்செட்டில் கூட்டணி கட்சிகள்; புதிய யுக்தியுடன் அறிவாலயம்!

தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கான தொகுதிகளின் எண்ணிக்கையை இறுதி செய்யாமல் இருப்பதால், அதை இறுதி செய்யும் வேலையை தி.மு.க தலைமை கையில் எடுத்துள்ளது.ஆனால், தாங்கள் எதிர்பார்க்கும் எண்ணிக்கை... மேலும் பார்க்க

"தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரபலமாவதால் திமுக அதிர்ச்சி அடைந்து வருகிறது"- பிரதமர் மோடி

"தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரபலமாவதால் திமுக அதிர்ச்சி அடைந்து வருகிறது" என்று மோடி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். பிரதமர் மோடி 2026 தேர்தலை முன்னிட்டு மூன்றாவது முறையாக தமிழகம் வர இருக்... மேலும் பார்க்க

ஆளுநர் மாற்றம்... குடியரசுத் தலைவர் அதிருப்தி - மேற்கு வங்கத்தில் சுழன்றடிக்கும் `அரசியல் புயல்!'

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இன்னும் அதிகாரப்பூர்வ தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படவில்லை என்றாலும் மேற்குறிப்ப... மேலும் பார்க்க

'உங்க எல்லாரையும் எம்.எல்.ஏ-வா பார்க்கணும்!' - விஜய் `அறிவித்த' 60 வேட்பாளர்கள்?! - முழு விவரம்!

விஜய்யிடம் பாஜக கூட்டணிக்காக பேசிக்கொண்டிருக்கிறது என்கிற தகவல் அரசியல் புயலை கிளப்பியிருக்கும் சூழலில், தவெக சார்பில் முதற்கட்டமாக 60 வேட்பாளர்களை நேரில் அழைத்து, 'நீங்கள்தான் கேண்டிடேட். தொகுதியில் ... மேலும் பார்க்க

`என்.டி.ஏ கூட்டணியில் தவெக-வா?' - செய்தியாளர்களின் கேள்விக்கு சி.டி.ஆர்.நிர்மல் குமார் பதில்!

தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன. கூட்டணிப் பேச்சுவார்தை தொடங்கி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு என, தீயாக இர... மேலும் பார்க்க

பிரதமரின் தமிழ்நாடு வருகை; ரூ.5,650 மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார் மோடி!

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சட்டமன்றத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி நாளை (மார்ச் 11, 2026) தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இப்பயணத்தின் ... மேலும் பார்க்க