செய்திகள் :

'உதயசூரிய'னில் நிற்க வற்புறுத்தும் திமுக - உயர்நிலைக் குழுவை அவசரமாக‌ கூட்டிய மதிமுக‌!

post image

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை, தி.மு.க கூட்டணிக்குள் வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது. இருக்குமா அல்லது வெளியேறி தவெக பக்கம் போகுமா என கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு மேல் விவாதத்தைக் கிளப்பி விட்டிருந்த காங்கிரஸ் கட்சிக்கு ஒருவழியாக தொகுதிகளின் எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டு விட்டன.

தேமுதிகவுக்கும் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், ஆனால் தொகுதிகளை அறிவிப்பதை பிறகு செய்யலாம் என இரண்டு தரப்பும் நினைப்பதாகவும் சொல்லப்படுகிறது.

வி.சி.க. கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இதில் ம.தி.மு.க - தி.மு.க இடையே கூட்டணி ஒப்பந்தம் குறித்துதான் கடந்த சில தினங்களாக பரபரப்பான பேச்சுகள் உலா வருகின்றன.

வைகோ, ஸ்டாலின்
வைகோ, ஸ்டாலின்

2021 தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் நின்றது அந்தக் கட்சி. அப்போது துரை வைகோ கட்சிக்குள் வந்திருக்கவில்லை.

அவர் என்ட்ரி ஆன பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் நிற்க மறுத்து தனிச் சின்னத்தில் நின்று வென்றார் அவர்.

இந்த முறையும் உதயசூரியன் சின்னத்திலேயே நிற்க திமுக தலைமை வற்புறுத்துவதாக தகவல்கள் கசிகின்றன. முதல்வர் ஸ்டாலின் நேரடியாக வைகோவிடமே இது குறித்துப் பேசியதாகவும், ஆனால் வைகோ அந்த இடத்தில் எந்தப் பதிலும் சொல்லவில்லை என்றும் சொல்கிறார்கள்.

துரை வைகோவோ இந்த முறை நிச்சயம் தனிச் சின்னத்தில்தன் நிற்க வேண்டும், அப்போதுதான் கட்சிக்கு அந்தஸ்தை மீட்க அது உதவும் என நினைக்கிறாராம்.

durai vaiko

ஆனால் தனிச் சின்னம் என்றால் சீட்டுகளின் எண்ணிக்கையை குறைப்போம் என்கிறதாம் திமுக தலைமை.

இந்தச் சூழலில்தான் கட்சியின் அவசர உயர்நிலைக் குழுக் கூட்டத்தை நாளை கூட்டியிருக்கிறார் வைகோ.

திமுக தலைமை தரும் அழுத்தம், தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து இந்தக் கூட்டத்தில் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படுமென்கிறார்கள்.

'நிர்வாகிகளிடம் விருப்ப மனு பெறும் வேல்முருகன்!' - கூடுதல் தொகுதி கிடைக்குமா? த.வா.க ப்ளான் என்ன?

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தனது கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனு பெறத் தொடங்கியிருக்கிறார். த.வா.க-வுக்கு ஒதுக்கும் 1 தொகுதியில் வேல்முருகனே களமிறங்குவார் எனச் சொல்லப்பட்ட சூழலில் 'த.... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் கையிருப்பு நிலவரம்! எண்ணெய் நிறுவனங்கள் சொல்வது என்ன?

அமெரிக்க, இஸ்ரேல் படைகள் ஈரான் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலை ஆரம்பித்து ஒரு வாரம் கடந்து விட்டது.'அமெரிக்கப் படைகளுக்கு தளம் அமைக்க உதவுகின்றன' எனச் சொல்லி வளைகுடா நாடுகள் சி... மேலும் பார்க்க

LPG சிலிண்டர் தட்டுப்பாடு: `பொறுப்புள்ள அரசாக இதைச் செய்ய வேண்டும்!'- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்தி வரும் போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. சமையல் எரிவாய... மேலும் பார்க்க

'உதயசூரியன் சின்னம்' - மதிமுகவை நிர்பந்திக்கும் திமுக; டென்ஷனில் துரை வைகோ?

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தி.மு.க கூட்டணிக்குள் வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது. ம.தி.மு.க - தி.மு.க இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ள நிலையில் அக்கட்சியின் முத... மேலும் பார்க்க

LPG: `அத்தியாவசியப் பொருள்கள் சட்டம்' - சிலிண்டர் தட்டுப்பாடா? - மத்திய அரசின் திட்டம் என்ன?

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்தியக் கிழக்கு நாடுகளில் போர் பரவியது. அதனால், உலக நாடுகளுக்கு மத்தியில் நடைபெற்ற எண்ணெய், எரிபொருள் விற்பனை சிக்கலை சந்தித்தது. அ... மேலும் பார்க்க

'நமக்காக பேச யாருமில்லை' - விரக்தியடைந்த விசிக நிர்வாகிகள்; இழுபறியில் பேச்சுவார்த்தை?

வி.சி.க - தி.மு.க இடையேயான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறவில்லை என்றும் வி.சி.க-வுக்காக குரல் கொடுக்க தி.மு.க கூட்டணியில் யாருமே இல்லை என விரக்தியடைந்து வருகிறார்கள் வி.சி.க மாநில நிர... மேலும் பார்க்க