செய்திகள் :

"போர் தொடர்ந்தால் உலகளாவிய எண்ணெய் சந்தைக்கு பேரழிவு ஏற்படும்" - எச்சரிக்கும் சவுதி அராம்கோ CEO

post image

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் சூழல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு உலக அரங்கில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தட்டுப்பாடு உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் மேற்காசியாவில் நடைபெற்று வரும் மோதல் நீடித்தால் உலகளாவிய எண்ணெய் சந்தைக்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்று சவுதி அரேபியாவின் தேசிய எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோவின் தலைமை நிர்வாக அதிகாரி அமின் நாசர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர்
ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர்

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``மேற்காசியாவில் அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக முக்கிய கடல் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் எண்ணெய் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் பயன்படுத்தப்படும் பெட்ரோலியத்தில் சுமார் 20% இந்த கடல் வழியாகத்தான் செல்கிறது. ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதலால் இந்த போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சவுதி அராம்கோவின் தலைமை நிர்வாக அதிகாரி அமின் நாசர்
சவுதி அராம்கோவின் தலைமை நிர்வாக அதிகாரி அமின் நாசர்

இந்த இடையூறு தொடர்ந்தால், உலகளாவிய எண்ணெய் சந்தைக்கு பேரழிவை ஏற்படுத்தும். எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், உலக பொருளாதாரத்திலும் கடுமையானத் தாக்கத்தை இது ஏற்படுத்தும்" என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

திமுக-வின் `தொகுதி குறைப்பு நடவடிக்கை' - அப்செட்டில் கூட்டணி கட்சிகள்; புதிய யுக்தியுடன் அறிவாலயம்!

தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கான தொகுதிகளின் எண்ணிக்கையை இறுதி செய்யாமல் இருப்பதால், அதை இறுதி செய்யும் வேலையை தி.மு.க தலைமை கையில் எடுத்துள்ளது.ஆனால், தாங்கள் எதிர்பார்க்கும் எண்ணிக்கை... மேலும் பார்க்க

"தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரபலமாவதால் திமுக அதிர்ச்சி அடைந்து வருகிறது"- பிரதமர் மோடி

"தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரபலமாவதால் திமுக அதிர்ச்சி அடைந்து வருகிறது" என்று மோடி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். பிரதமர் மோடி 2026 தேர்தலை முன்னிட்டு மூன்றாவது முறையாக தமிழகம் வர இருக்... மேலும் பார்க்க

ஆளுநர் மாற்றம்... குடியரசுத் தலைவர் அதிருப்தி - மேற்கு வங்கத்தில் சுழன்றடிக்கும் `அரசியல் புயல்!'

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இன்னும் அதிகாரப்பூர்வ தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படவில்லை என்றாலும் மேற்குறிப்ப... மேலும் பார்க்க

'உங்க எல்லாரையும் எம்.எல்.ஏ-வா பார்க்கணும்!' - விஜய் `அறிவித்த' 60 வேட்பாளர்கள்?! - முழு விவரம்!

விஜய்யிடம் பாஜக கூட்டணிக்காக பேசிக்கொண்டிருக்கிறது என்கிற தகவல் அரசியல் புயலை கிளப்பியிருக்கும் சூழலில், தவெக சார்பில் முதற்கட்டமாக 60 வேட்பாளர்களை நேரில் அழைத்து, 'நீங்கள்தான் கேண்டிடேட். தொகுதியில் ... மேலும் பார்க்க

`தவெக-வுடன் கூட்டணியா? டீயும் காபியும் எப்போதும் ஒன்று சேராது..!' - அண்ணாமலை பதில்

அதிமுக- பாஜக கூட்டணியில் விஜய்யின் தவெக-வை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம், இத... மேலும் பார்க்க

`என்.டி.ஏ கூட்டணியில் தவெக-வா?' - செய்தியாளர்களின் கேள்விக்கு சி.டி.ஆர்.நிர்மல் குமார் பதில்!

தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன. கூட்டணிப் பேச்சுவார்தை தொடங்கி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு என, தீயாக இர... மேலும் பார்க்க