செய்திகள் :

Doctor Vikatan: வெளியே கேட்கும் வயிற்றுப் பொருமல் சத்தம்; காரணமும் தீர்வும் என்ன?

post image

Doctor Vikatan: என் வயது 45. கடந்த சில தினங்களாக வயிற்றுக்குள் ஏதோ உருள்வது போன்ற பொருமல் சத்தம் கேட்கிறது. அந்தச் சத்தம் எனக்கு மட்டுமல்ல, வெளியேவும் கேட்கிறது. இதனால் மிகவும் தர்மசங்கடமாக உணர்கிறேன். இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்.... தீர்வு உண்டா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.

ஊட்டச்சத்து நிபுணர் அம்பிகா சேகர்
ஊட்டச்சத்து நிபுணர் அம்பிகா சேகர்

நீங்கள் சரியான நேரத்திற்குச் சாப்பிடாமல் இருப்பதே இந்தப் பிரச்னைக்கு முக்கியமான காரணம். நீண்ட நேரம் பட்டினி இருப்பவர் என்றால் முதலில் அந்தப் பழக்கத்தை மாற்றுங்கள்.

வயிறு நீண்ட நேரம் காலியாக (Empty) இருக்கும்போது, அதனுள் இருக்கும் காற்றுக்குமிழ்கள் (Bubbles) நகர்வதால்தான் ஒருவித பொருமல் சத்தம் வெளியே கேட்கும் அளவுக்கு உண்டாகிறது.

நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருப்பது கேஸ்ட்ரிக் (Gastric) எனப்படும் வாயுத் தொல்லையை உண்டாக்கி, இத்தகைய சத்தத்தை ஏற்படுத்தும்.

எக்காரணம் கொண்டும் உணவைத் தவிர்க்காமல், சரியான நேரத்திற்குச் சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதுதான் இதற்கான முதல் தீர்வு.

விரதம்
விரதம்

ஒருவேளை உங்களால் சரியான நேரத்திற்கு முழு உணவை உட்கொள்ள முடியாவிட்டாலும், அதற்கு முன்னதாகவே மோர் அல்லது தண்ணீர் போன்ற திரவ உணவுகளை அருந்துவது நல்லது.

இது அந்தச் சத்தத்தைக் குறைக்க உதவும். நீங்கள் விரதம் இருப்பவராக இருந்தால், முழுமையாகப் பட்டினி இருக்காமல் பழங்கள் அல்லது பால் போன்றவற்றைச் சிறிதளவாவது எடுத்துக் கொள்ளுங்கள். இது வாயுத் தொல்லை ஏற்படாமலும், அதன் விளைவாக சத்தம் வராமலும் தடுக்கும்.

வயிற்றுப் பொருமல் என்பது  இயல்பான உடல் இயக்கம் என்பதால், நீங்கள் தர்மசங்கடமாக உணர வேண்டிய அவசியமில்லை. மேற்குறிப்பிட்ட விஷயங்களைப் பின்பற்றியும் நாள்கள் கடந்து இந்தப் பிரச்னை தொடர்ந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

நட்சத்திரங்களின் வெயிட் லாஸ் மருந்து! மேஜிக் செய்யுமா... பாதிப்பை ஏற்படுத்துமா?

சமீபகாலமாக உலகெங்கிலும் உள்ள ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அதிகம் உச்சரிக்கப்படும் ஒரு பெயர் 'ஓஸெம்பிக்' (Ozempic). ஹாலிவுட், பாலிவுட் நட்சத்திரங்கள் முதல் உள்ளூர் பிரபலங்கள் வரை பலரது உடல் எடை மா... மேலும் பார்க்க

Doctor Vikatan: காபி குடிப்பது சுறுசுறுப்பைத் தருமா... ஆரோக்கியத்தை பாதிக்குமா?!

Doctor Vikatan:சிலருடன் பேசும்போது காபி, டீ குடிக்கிற பழக்கமே கிடையாது என்கிறார்கள். காபியை விட்டு பல வருடங்கள் ஆகின்றன என்கிறார்கள். என்னால் காபியை விட முடியவில்லை. ஒரு நாளைக்கு 3 முதல் 4 காபி வரை கு... மேலும் பார்க்க

Anemia: 3 மணிக்கு லஞ்ச், AI டாக்டர்... நகரத்து ஆண்களையும் விட்டு வைக்காத அனீமியா!

"நான் முன்னாடி நார்மலா இருந்தேன், சுறுசுறுப்பா வேலை செஞ்சுட்டு இருந்தேன், திடீர்னு எனக்கு டயர்டா இருக்கு, என்னால புரொடக்டிவா (productive) இருக்க முடியல" என்று மருத்துவரை நாடுவோர் அதிகரித்துள்ளனர். குற... மேலும் பார்க்க

Doctor Vikatan: சப்பாத்தி சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்கு வருமா?

Doctor Vikatan: எனக்கு கடந்த 4 வருடங்களாக சர்க்கரை நோய் இருக்கிறது. என்னுடைய தோழி சொன்னதைக் கேட்டு, பல வருடங்களாக இரவில் சப்பாத்திதான் சாப்பிடுகிறேன். ஆனாலும்,எனக்கு சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் ... மேலும் பார்க்க

Doctor Vikatan: கம்பங்கூழ், கேழ்வரகு கூழ்; கோடைக்கு ஏற்றது எது, சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?

Doctor Vikatan:கம்பங்கூழ், கேழ்வரகு கூழ் - கோடைக்கு எது சிறந்தது... கேழ்வரகு கூழ் ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்பது உண்மையா... இந்த இரண்டையும் இரவில்எடுத்துக்கொள்ளலாமா?பதில் சொல்கிறார், திருப்ப... மேலும் பார்க்க

Doctor Vikatan: கற்றாழைச் சாறு குடித்தால் சளி பிடிக்குமா? - எல்லோரும் குடிக்கலாமா?

Doctor Vikatan: கோடைக்காலம் நெருங்குவதால், தெருக்களில் கற்றாழைச் சாறு விற்கும் கடைகள் அதிகரித்து வருகின்றன. கற்றாழைச் சாறு குடித்தால் சளி பிடிக்கும் என்கிறார்கள் சிலர். அது ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கு... மேலும் பார்க்க