செய்திகள் :

Doctor Vikatan: காபி குடிப்பது சுறுசுறுப்பைத் தருமா... ஆரோக்கியத்தை பாதிக்குமா?!

post image

Doctor Vikatan:  சிலருடன் பேசும்போது காபி, டீ குடிக்கிற பழக்கமே கிடையாது என்கிறார்கள். காபியை விட்டு பல வருடங்கள் ஆகின்றன என்கிறார்கள். என்னால் காபியை விட முடியவில்லை. ஒரு நாளைக்கு 3 முதல் 4 காபி வரை குடித்துவிடுகிறேன்.  அவ்வளவும் ஆபத்து என எச்சரிக்கிறார்கள் சிலர். காபி குடிப்பது என்பது உண்மையில் நல்லதா, ஆரோக்கியத்துக்குக் கேடானதா...?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்.

அருண் கல்யாணசுந்தரம்

காபியில் ஆயிரத்துக்கும் மேலான  பயோ ஆக்டிவ் காம்பவுண்ட்ஸ் (Bioactive Compounds) உள்ளன.  இவை உடலுக்குத் தேவையான  ஊட்டச்சத்துக்கள்  அல்ல. ஆனால், நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோய்கள் வராமல் தடுக்கவும் பயோ ஆக்டிவ் காம்பவுண்ட்ஸ் என்பவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.

காபியில்  குளோரோஜெனிக் அமிலம் (Chlorogenic Acid),  டிட்டர்பீன்கள் (Diterpenes), மெலனாயிடின்ஸ் (Melanoidins),  ட்ரிகோனெல்லைன் (Trigonelline) போன்ற மிகச்சிறப்பான பயோ ஆக்டிவ் காம்பவுண்ட்ஸ் உள்ளன. இவற்றைத் தவிர, காபியில் உள்ள மிகவும் பிரபலமான பயோ ஆக்டிவ் பொருள் கஃபைன் (Caffeine). இது உங்கள் மூளையை விழிப்புடன் வைக்கிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை (Metabolism) வேகப்படுத்துகிறது.

காபி குடிப்பது பொதுவாகவே நல்ல விஷயம்தான்.  வயதான பிறகு ஏற்படும் டிமென்ஷியா எனப்படும் மறதிப் பிரச்னைக்கான ரிஸ்க்கை இது குறைக்கிறது. பார்க்கின்சன்ஸ் டிசீஸ் எனப்படும் முதுமை நோய் ரிஸ்க்கையும் குறைக்கிறது. நீரிழிவு மற்றும் இதய நோய்கள் அபாயத்தைக் குறைக்கிறது. இத்தனை நல்ல விஷயங்கள் இருக்கும்போது, காபியை தவிர்க்கச் சொல்லி பொதுவாக அறிவுறுத்தப்படுவது ஏன் என்ற கேள்வி வரலாம்.

ஃபில்டர் காபி என்ற பெயரில், பால், சர்க்கரை போன்றவற்றை தூக்கலாகச் சேர்த்து அதை இனிப்பான பானமாகக் குடிக்கிறவர்களே அதிகம்.

காபியை எப்படிக் குடிக்கிறோம் என்பதுதான் அது ஆரோக்கியமானதா, ஆரோக்கியமற்றதா என்பதைத் தீர்மானிக்கிறது. தென்னிந்தியர்களைப் பொறுத்தவரை, ஃபில்டர் காபி என்ற பெயரில், பால், சர்க்கரை போன்றவற்றை தூக்கலாகச் சேர்த்து அதை இனிப்பான பானமாகக் குடிக்கிறவர்களே அதிகம். எவ்வளவு குடிக்கிறோம் என்பதும் இதில் முக்கியம். ஒரு நாளைக்கு 400 மில்லிகிராமுக்கு மேல் கஃபைன் உடலுக்குள் போகக்கூடாது. அதாவது ஒரு நாளைக்கு 3 கப்புக்கு மேல் குடிக்கக்கூடாது. இந்த அளவு தாண்டப்படாதபோதும், ஒரு நாளின் முதல் பாதியில் குடிக்கும்போதும் காபியால் பிரச்னைகள் வருவதில்லை.

எனவே, உங்கள் நண்பர்கள் சொல்வதை நீங்கள் பின்பற்ற வேண்டும் என அவசியமில்லை. காபி குடிப்பதில் மேற்குறிப்பிட்ட விஷயங்களை கவனத்தில் கொண்டால் அது உங்களுக்கு நல்லதையே செய்யும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Anemia: 3 மணிக்கு லஞ்ச், AI டாக்டர்... நகரத்து ஆண்களையும் விட்டு வைக்காத அனீமியா!

"நான் முன்னாடி நார்மலா இருந்தேன், சுறுசுறுப்பா வேலை செஞ்சுட்டு இருந்தேன், திடீர்னு எனக்கு டயர்டா இருக்கு, என்னால புரொடக்டிவா (productive) இருக்க முடியல" என்று மருத்துவரை நாடுவோர் அதிகரித்துள்ளனர். குற... மேலும் பார்க்க

Doctor Vikatan: சப்பாத்தி சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்கு வருமா?

Doctor Vikatan: எனக்கு கடந்த 4 வருடங்களாக சர்க்கரை நோய் இருக்கிறது. என்னுடைய தோழி சொன்னதைக் கேட்டு, பல வருடங்களாக இரவில் சப்பாத்திதான் சாப்பிடுகிறேன். ஆனாலும்,எனக்கு சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் ... மேலும் பார்க்க

Doctor Vikatan: கம்பங்கூழ், கேழ்வரகு கூழ்; கோடைக்கு ஏற்றது எது, சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?

Doctor Vikatan:கம்பங்கூழ், கேழ்வரகு கூழ் - கோடைக்கு எது சிறந்தது... கேழ்வரகு கூழ் ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்பது உண்மையா... இந்த இரண்டையும் இரவில்எடுத்துக்கொள்ளலாமா?பதில் சொல்கிறார், திருப்ப... மேலும் பார்க்க

Doctor Vikatan: கற்றாழைச் சாறு குடித்தால் சளி பிடிக்குமா? - எல்லோரும் குடிக்கலாமா?

Doctor Vikatan: கோடைக்காலம் நெருங்குவதால், தெருக்களில் கற்றாழைச் சாறு விற்கும் கடைகள் அதிகரித்து வருகின்றன. கற்றாழைச் சாறு குடித்தால் சளி பிடிக்கும் என்கிறார்கள் சிலர். அது ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கு... மேலும் பார்க்க

Doctor Vikatan: சன் ஸ்கிரீன்... அதிக எஸ்பிஎஃப் உள்ளதுதான் பலனளிக்குமா? வைட்டமின் டி குறையுமா?

Doctor Vikatan: சன் ஸ்கிரீன் வாங்கும்போது எஸ்பிஎஃப் அளவைப் பார்க்க வேண்டும் என்கிறார்களே... அப்படியென்றால் என்ன... அது அதிகம் இருந்தால்தான் நல்ல சன் ஸ்கிரீனா... சன் ஸ்கிரீன் பயன்படுத்துவோருக்கு வைட்டம... மேலும் பார்க்க

Doctor Vikatan: பீரியட்ஸின்போது சருமத்தில் மாற்றம்... கிராம்புத்தைலம், கற்றாழை தடவலாமா?

Doctor Vikatan: என் வயது 21. எனக்கு ஒவ்வொரு மாதமும் பீரியட்ஸுக்கு முன்னால் சருமத்தில் பருக்கள் வருகின்றன. இந்தப் பிரச்னைக்கு சோற்றுக் கற்றாழை ஜெல் அல்லது கிராம்புத் தைலம் வைத்தால் சரியாகி விடும் என்று... மேலும் பார்க்க