செய்திகள் :

ஆனந்த் போஸ் ராஜினாமா: தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றமா?!

post image

மேற்கு வங்கம், தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கு அடுத்த இரண்டு மாதங்களில் தேர்தல் நடக்க இருக்கிறது. மேற்கு வங்கத்தில் ஆளுநராக இருக்கும் சி.வி.ஆனந்த போஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் முதல்வர் மம்தா பானர்ஜியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அப்பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஆனந்தபோஸ் டெல்லியில் இருக்கிறார். ஆளுநரின் ராஜினாமா குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி அதிர்ச்சியும், கவலையும் தெரிவித்துள்ளார். அதேசமயம் தமிழ்நாட்டில் ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி மேற்கு வங்கத்திற்கு ஆளுநராக நியமிக்கப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் இது குறித்து மேலும் கூறுகையில், ''அவர் ராஜினாமா செய்ததற்கான காரணங்கள் தற்போது எனக்குத் தெரியவில்லை.

ஆனந்தபோஸ்

இருப்பினும், தற்போதைய சூழ்நிலையில், வரவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக சில அரசியல் நலன்களுக்கு சேவை செய்ய மத்திய உள்துறை அமைச்சரின் சில நிர்ப்பந்தத்திற்கு ஆளுநர் உட்பட்டாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன். மேற்கு வங்க ஆளுநராக ஸ்ரீ ஆர்.என். ரவி நியமிக்கப்படுகிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் சமீபத்தில்தான் எனக்குத் தெரிவித்தார். இது தொடர்பாக மரபுப்படி அவர் என்னிடம் ஒருபோதும் ஆலோசனை நடத்தவில்லை.

இதுபோன்ற நடவடிக்கைகள் நமது கூட்டாட்சி அமைப்பின் அடித்தளத்தையே தாக்குகின்றன. மத்திய அரசு கூட்டுறவு கூட்டாட்சி கொள்கைகளை மதிக்க வேண்டும், மேலும் ஜனநாயக மரபுகளையும் மாநிலங்களின் கண்ணியத்தையும் சிதைக்கும் ஒருதலைப்பட்ச முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார். ஆனந்த் போஸ் 2022ம் ஆண்டில் இருந்து இப்பதவியில் இருந்து வருகிறார். இது குறித்து ஆனந்த் போஸ் அளித்த பேட்டியில், `போதிய அளவு இப்பதவியில் இருந்துவிட்டேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

“நெருக்கடி கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்”- எப்படிச் சமாளிக்கப் போகிறது திமுக?

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை இறுதிசெய்த தி.மு.க-வுக்கு அடுத்த சிக்கல் பிற கூட்டணிக் கட்சிகளால் துவங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்குக் கூடுதல் இடங்களை விட்டுக் கொடுத்ததுபோல தங்களுக்கும் கூடுதல் தொகுதி... மேலும் பார்க்க

மேற்கு ஆசியப் போர் பதற்றம்: பிரான்ஸ் அதிபருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி!

மேற்கு ஆசியாவில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். இந்த உரையாடலின் போது, பிராந்தியத்தில் நில... மேலும் பார்க்க

'இதுவே அரசியல் சாணக்கியத்தனம்!' - கூட்டணிக் கடமுடா... முடிவுரை எழுதிய ஸ்டாலின்

முறிவை நோக்கிச் சென்று கொண்டிருந்த திமுக கூட்டணியை கட்டிக் காப்பாற்றி பெருமூச்சு விட்டிருக்கிறார் ஸ்டாலின். அவர் கூட்டணியை கட்டிக் காக்கும் விதம் மெச்சத்தகுந்தது என அரசியல் விமர்சகர்களே பாராட்டுகின்றன... மேலும் பார்க்க

ஈரான் உச்ச தலைவர் கமேனி மறைவு: 5 நாள்கள் கழித்து இரங்கல் தெரிவித்த இந்தியா!

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் போர் தொடுத்து வருகின்றன. ஈரானின் அணுசக்தி மையங்கள், அணுசக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் எனப் பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல... மேலும் பார்க்க

கர்னாடிக் சிங்கர், ஹாக்கி ப்ளேயர், 'உம்மன் சாண்டி'யின் சிஷ்யன்! - யார் இந்த கிறிஸ்டோபர் திலக்?

காங்கிரஸ் தலைமையின் சாய்ஸ் கிறிஸ்டோபர் திலக்காங்கிரஸ் கட்சியிலிருந்து அழைப்பு... நாளைக்கு வேட்புமனுத் தாக்கல் செய்யணும் உடனடியா நீங்க சென்னைக்கு கிளம்பி வரணும்,சுற்றியிருந்த நண்பர்களே ஐதராபாத்திலிருந்... மேலும் பார்க்க

மகள் நிச்சயதார்த்தம்;திடீர் நோன்பு; சோடங்கர்! - கூட்டணியை முடிப்பதற்குள் செல்வப்பெருந்தகை பட்ட பாடு!

புகைச்சலிலேயே பொழுதை ஓட்டிக் கொண்டிருந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒரு வழியாக சுமுகமான தீர்வை எட்டியிருக்கிறது. ஆனால், இந்த கூட்டணி இறுதியாவதற்குள் அதிகம் அல்லோலகலப்பட்டது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ... மேலும் பார்க்க