செய்திகள் :

Doctor Vikatan: சப்பாத்தி சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்கு வருமா?

post image

Doctor Vikatan: எனக்கு கடந்த 4 வருடங்களாக சர்க்கரை நோய் இருக்கிறது. என்னுடைய தோழி சொன்னதைக் கேட்டு, பல வருடங்களாக இரவில் சப்பாத்திதான் சாப்பிடுகிறேன். ஆனாலும், எனக்கு சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் வருவதில்லை. சப்பாத்தி சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும் என்பது உண்மையா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம்.

நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம் | சென்னை
நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம் | சென்னை

சப்பாத்தியா, சாதமா, இட்லியா, தோசையா... சர்க்கரை நோயாளிகளுக்கு எது ஏற்றது, எது சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது.

சர்க்கரை நோயாளிகளைப் பொறுத்தவரை உணவின் மூலம் கலோரி அளவை அதிகப்படுத்திக் கொள்ளக்கூடாது. உங்களுடைய எடை, உயரம், நீங்கள் பார்க்கும் வேலையின் தன்மை (உடலுழைப்பு உள்ளதா, உட்கார்ந்தபடியே வேலை பார்க்கிறீர்களா) போன்றவற்றைப் பொறுத்து அது வேறுபடும்.

உணவில் கார்போஹைட்ரேட்டின் அளவு 50 சதவிகிதத்துக்கு மேல் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அது அரிசி, கோதுமை என எல்லாவற்றுக்கும் பொருந்தும். உங்கள் உணவில் 15 முதல் 20 சதவிகிதம் புரதச்சத்து இருக்க வேண்டும்.

நார்ச்சத்து இருக்க வேண்டும். நீரிழிவைப் பொறுத்தவரை என்ன சாப்பிடுகிறீர்கள், எவ்வளவு சாப்பிடுகிறீர்கள், எந்த நேரத்தில் சாப்பிடுகிறீர்கள் என்பதுதான் மிகவும் முக்கியம். 

சர்க்கரை நோயாளிகள் கஞ்சி குடித்தால் உடனே அவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடும், உடலுக்கு எனர்ஜி கிடைக்கும். இது சிறுதானியங்களுக்கும் பொருந்தும். கேழ்வரகு, கம்பு என எதையும் மாவாக்கி, கஞ்சியாகத் தயாரிக்கும்போது அதிலுள்ள நார்ச்சத்து அழிகிறது. 

நீரிழிவைப் பொறுத்தவரை என்ன சாப்பிடுகிறீர்கள், எவ்வளவு சாப்பிடுகிறீர்கள், எந்த நேரத்தில் சாப்பிடுகிறீர்கள் என்பதுதான் மிகவும் முக்கியம்.

கம்பு, கேழ்வரகு, சாமை என அத்தனை சிறுதானியங்களும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றவை. காரணம் அவற்றிலுள்ள நார்ச்சத்து. அந்த நார்ச்சத்து முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்றால் கஞ்சியாக மாற்றாமல் குருணையாக உடைத்து உப்புமா, கிச்சடி போன்றோ முழுத் தானியங்களாக சமைத்து சாதம்போல சாம்பார், ரசம் ஊற்றியோ சாப்பிடுவதுதான் சரியானது.

அரிசி, கோதுமை என இரண்டிலும் ஒரே அளவுதான் சர்க்கரைச்சத்து இருக்கும். எனவே, சப்பாத்தி சாப்பிட்டால் சர்க்கரை குறையும் என நினைக்காதீர்கள். பச்சரிசியில் நார்ச்சத்து மிகக்குறைவு. புழுங்கல் அரிசியில் அது ஓரளவு அதிகம்.

கறுப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா போன்ற பாரம்பர்ய அரிசி வகைகளில் நார்ச்சத்து மிக அதிகம். அதற்காக அவற்றையும் அளவுக்கு மீறி எடுக்கக்கூடாது. கிழங்கு வகைகள் தவிர்த்து, நிறைய காய்கறிகள் சேர்த்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

Anemia: 3 மணிக்கு லஞ்ச், AI டாக்டர்... நகரத்து ஆண்களையும் விட்டு வைக்காத அனீமியா!

"நான் முன்னாடி நார்மலா இருந்தேன், சுறுசுறுப்பா வேலை செஞ்சுட்டு இருந்தேன், திடீர்னு எனக்கு டயர்டா இருக்கு, என்னால புரொடக்டிவா (productive) இருக்க முடியல" என்று மருத்துவரை நாடுவோர் அதிகரித்துள்ளனர். குற... மேலும் பார்க்க

Doctor Vikatan: கம்பங்கூழ், கேழ்வரகு கூழ்; கோடைக்கு ஏற்றது எது, சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?

Doctor Vikatan:கம்பங்கூழ், கேழ்வரகு கூழ் - கோடைக்கு எது சிறந்தது... கேழ்வரகு கூழ் ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்பது உண்மையா... இந்த இரண்டையும் இரவில்எடுத்துக்கொள்ளலாமா?பதில் சொல்கிறார், திருப்ப... மேலும் பார்க்க

Doctor Vikatan: கற்றாழைச் சாறு குடித்தால் சளி பிடிக்குமா? - எல்லோரும் குடிக்கலாமா?

Doctor Vikatan: கோடைக்காலம் நெருங்குவதால், தெருக்களில் கற்றாழைச் சாறு விற்கும் கடைகள் அதிகரித்து வருகின்றன. கற்றாழைச் சாறு குடித்தால் சளி பிடிக்கும் என்கிறார்கள் சிலர். அது ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கு... மேலும் பார்க்க

Doctor Vikatan: சன் ஸ்கிரீன்... அதிக எஸ்பிஎஃப் உள்ளதுதான் பலனளிக்குமா? வைட்டமின் டி குறையுமா?

Doctor Vikatan: சன் ஸ்கிரீன் வாங்கும்போது எஸ்பிஎஃப் அளவைப் பார்க்க வேண்டும் என்கிறார்களே... அப்படியென்றால் என்ன... அது அதிகம் இருந்தால்தான் நல்ல சன் ஸ்கிரீனா... சன் ஸ்கிரீன் பயன்படுத்துவோருக்கு வைட்டம... மேலும் பார்க்க

Doctor Vikatan: பீரியட்ஸின்போது சருமத்தில் மாற்றம்... கிராம்புத்தைலம், கற்றாழை தடவலாமா?

Doctor Vikatan: என் வயது 21. எனக்கு ஒவ்வொரு மாதமும் பீரியட்ஸுக்கு முன்னால் சருமத்தில் பருக்கள் வருகின்றன. இந்தப் பிரச்னைக்கு சோற்றுக் கற்றாழை ஜெல் அல்லது கிராம்புத் தைலம் வைத்தால் சரியாகி விடும் என்று... மேலும் பார்க்க

Doctor Vikatan: 23 வருடங்களாக சர்க்கரை நோய்... அதீத சோர்வு... உடலில் சத்துக்குறைபாடு இருக்குமா?

Doctor Vikatan:எனக்கு 43 வயதாகிறது. 20 வயதில் எனக்கு சர்க்கரைநோய் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அப்போது glyciphage vg1 என்ற மாத்திரையை எடுத்துக்கொண்டேன். இப்போது என்னால் வெகுதூரம் நடக்க முடியவில்லை. ... மேலும் பார்க்க