செய்திகள் :

ஈரோடு: உற்சவ மூர்த்திக்கு புனித நீர் ஊற்றி வழிபாட்ட பெண்கள்; களைகட்டிய செல்லியாண்டி அம்மன் திருவிழா!

post image

மாசி மாதத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் மாசி திருவிழாக்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன.

ஈரோடு மாவட்டம் பவானியில் அமைந்திருக்கும் செல்லியாண்டி அம்மன் கோயில் மாசி திருவிழா கடந்த பிப்ரவரி மாதம் 17 - ம் தேதியன்று கோலாகலமாகத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பவானி நகர் முழுவதும் உற்சவ மூர்த்திகளின் தேர் பவனி நாள்தோறும் நடைபெற்று வந்தது.

செல்லியாண்டி அம்மன் கோயில் திருவிழா
செல்லியாண்டி அம்மன் கோயில் திருவிழா

இந்த நிலையில், திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான கர்ப்ப கிரக உற்சவ மூர்த்திக்கு பெண்கள் புனித நீர் ஊற்றி வழிபடும் சிறப்பு நிகழ்வு நேற்றுமுன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பெண்கள் நீண்ட வரிசையில் நின்று புனித நீரை ஊற்றி வழிபட்டனர்.

இந்தத் திருவிழா குறித்து தெரிவித்த கோயில் நிர்வாகத்தினர், "தமிழ்நாட்டில் வேறெங்கும் இல்லாத வகையில் கர்ப்ப கிரக உற்சவ மூர்த்திக்கு பெண்கள் புனித நீர் ஊற்றி வழிபடும் நிகழ்ச்சி இங்கு மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

பால், இளநீர், திருமஞ்சனம், கலந்த புனித நீரை ஊற்றி பெண்கள் வழிபட்டனர்.

செல்லியாண்டி அம்மன் கோயில் திருவிழா
செல்லியாண்டி அம்மன் கோயில் திருவிழா

நோய் நொடிகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் செல்லியாண்டி அம்மனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பக்தர்கள் உடல்களில் சேறு பூசும் நேற்றிக்கடன் நிகழ்வும் நடைபெறுகின்றன.

அம்மன் திருவீதி உலா நடைபெற்ற வழிநெடுகிலும் மிளகு கலந்த உப்பை பெண்கள் பலரும் காணிக்கையாகச் செலுத்தி வழிபட்டனர்" என்றனர்.

கோவை: விண்ணை முட்டிய பராசக்தி கோஷம்; விமர்சையாக நடைபெற்ற கோனியம்மன் கோயில் தேர் திருவிழா! - Album

கோவை கோனியம்மன் கோயில் தேர்திருவிழாகோவை கோனியம்மன் கோயில் தேர்திருவிழாகோவை கோனியம்மன் கோயில் தேர்திருவிழாகோவை கோனியம்மன் கோயில் தேர்திருவிழாகோவை கோனியம்மன் கோயில் தேர்திருவிழாகோவை கோனியம்மன் கோயில் தே... மேலும் பார்க்க

ஈரோடு: உடலில் சேறு பூசி நேர்த்திக்கடன்; செல்லியாண்டி அம்மன் கோயிலில் மாசி திருவிழா! - Album

பவானி செல்லியாண்டி அம்மன் திருவிழாபவானி செல்லியாண்டி அம்மன் திருவிழாபவானி செல்லியாண்டி அம்மன் திருவிழாபவானி செல்லியாண்டி அம்மன் திருவிழாபவானி செல்லியாண்டி அம்மன் திருவிழாபவானி செல்லியாண்டி அம்மன் திரு... மேலும் பார்க்க

புதுச்சேரியில் நடைபெற்ற மாசிமக கடல் தீர்த்தவாரி நிகழ்ச்சி!

மாசிமக கடல் தீர்த்தவாரிமாசிமக கடல் தீர்த்தவாரிமாசிமக கடல் தீர்த்தவாரிமாசிமக கடல் தீர்த்தவாரிமாசிமக கடல் தீர்த்தவாரிமாசிமக கடல் தீர்த்தவாரிமாசிமக கடல் தீர்த்தவாரிமாசிமக கடல் தீர்த்தவாரிமாசிமக கடல் தீர்... மேலும் பார்க்க

ஆற்றுகால் பகவதி கோயிலில் இன்று பொங்காலை பெருவிழா; திருவனந்தபுரத்தில் குவியும் பெண்கள்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பெளர்ணமி தினத்தில் பொங்காலை வழிபாடு நடப்பது வழக்கம். பொங்காலை வழிபாட்டின்போது பெண்களுக... மேலும் பார்க்க

மாசி மகம்: புதுச்சேரி திருக்காஞ்சில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் உற்சவர்கள்!

பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் உற்சவர்கள்அருள் பாலிக்கும் உற்சவர்கள்அருள் பாலிக்கும் உற்சவர்கள்அருள் பாலிக்கும் உற்சவர்கள்முன்னோர்களுக்கு தற்பணம்முன்னோர்களுக்கு தற்பணம்அருள் பாலிக்கும் உற்சவர்கள்அருள்... மேலும் பார்க்க

'5 ஆண்டுகள், 65 டன், ரூ.10 கோடி மதிப்பு' - கும்பகோணம் சிற்பக் கூடத்தில் உருவான ஆதிபராசக்தி சிலை!

கும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டு கருப்பூர் பகுதியில் தனியார் சிற்பக் கூடம் செயல்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம் பனமரத்துபட்டி கிராமத்தில் ஆதிபராசக்தி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் பஞ்சலோக சிலை வைப்... மேலும் பார்க்க