Vowels: "1980-களில் சினிமாவில் நடிப்பது கஷ்டம்; சான்ஸ் கிடைக்காது, ஆனால் இன்று.!...
'மனநிறைவோடு 28 சீட்களை வாங்கியிருக்கிறோம்!' - செல்வப்பெருந்தகை ஹேப்பி!
இழுபறியில் நீடித்துக் கொண்டிருந்த திமுக - காங் கூட்டணி இறுதியாகியிருக்கிறது. காங்கிரஸூக்கு 28 சட்டமன்றத் தொகுதிகளும் 1 ராஜ்ய சபா சீட்டும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

முதல்வரை சந்தித்து கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு செல்வப்பெருந்தகை பேசுகையில், '28 சட்டமன்ற தொகுதிகளும் 1 மாநிலங்களவை சீட்டும் காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. ராஜ்ய சபா வேட்பாளர் யார் என்பதை அகில இந்திய தலைமை அறிவிக்கும். கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த தாமதமும் இல்லை. கூட்டணி சரியான சமயத்தில் அமைந்திருக்கிறது. நாங்கள் மனநிறைவோடு இருக்கிறோம்.' என்றார்.
கிரிஷ் சோடங்கர் பேசுகையில், 'தமிழகம் முடிந்த பிறகுதான் புதுச்சேரி குறித்து பேச முடியும். அதற்கான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளும் தொடங்கியிருக்கிறது.' என்றார்.
பவர் ஷேரிங் பற்றி பேசினீர்களா என நிருபர்கள் சோடங்கரிடம் கேட்க, 'அப்புறம் பேசுறோம் அதெல்லாம்...' என பத்திரிகையாளர் சந்திப்பை முடித்து சோடங்கரை காரில் ஏற்றிக் கொண்டு கிளம்பினார் செல்வப்பெருந்தகை.

திமுகவில் மாநிலங்களவைக்கு கான்ஸ்டண்டைன் ரவீந்தரனும் திருச்சி சிவாவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என அறிவாலயத்திலிருந்து அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.














