செய்திகள் :

'டெல்லி தலைமையின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.!' - பேச்சுவார்த்தை தாமதம் குறித்து செல்வப்பெருந்தகை

post image

ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை ஓரங்கட்டிய காங்கிரஸ் தலைமை, 30 சட்டசபை தொகுதிகள், 2 ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் ஆனால், 27 சட்டசபை தொகுதிகள், 1 ராஜ்யசபா இடங்கள் மட்டுமே தர முடியும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன.

திமுக - காங்கிரஸ்
திமுக - காங்கிரஸ்

இந்நிலையில் திமுகவுடன் காங்கிரஸ் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை இன்று மேற்கொள்கிறது என்று கூறப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியினர் இன்னும் அண்ணா அறிவாலயத்திற்கு செல்லவில்லை. பேச்சுவார்த்தை தாமதமாகிக் கொண்டிருக்கிறது.

திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்தாகும் என தகவல் வெளியாகியிருந்த நிலையில், காங்கிரஸ் மேலிட பார்வையாளர் கிரிஷ் சோடங்கர் 3:50 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்துவிட்டார். அவரை வரவேற்க தான் செல்வப்பெருந்தகையும் சென்றிருந்தார்.

இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக காங்கிரஸ் குழு விமான நிலையத்திலேயே காத்திருந்தது. திமுக தரப்பில் ஒரு நம்பரை சொல்ல அதற்கு டெல்லி தலைமையிடம் ஒப்புதல் வேண்டி காங்கிரஸ் குழு காத்திருந்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தப்போது பேச்சுவார்த்தை தாமதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், " கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் அகில இந்திய தலைமையின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.

டெல்லி தலைமை அறிக்கை தந்ததும் அண்ணா அறிவாலயம் சென்று ஒப்பந்தத்தை இறுதிசெய்வோம்.

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

திமுக - காங்கிரஸ் கூட்டணி சுமூகமாகத் தான் இருக்கிறது. பிரச்னை எதுவும் இல்லை" என்றிருக்கிறார். தொடர்ந்து ராஜ்ய சபா சீட் குறித்த கேள்விக்கு, "இன்னும் நிறைய டைம் இருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.

"தம்பி நல்லா பேசுனாரு; கேள்விகள் நியாயமா கேட்டாரு.!" - விஜய் பேச்சு குறித்து தமிழிசை

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், இன்று (மார்ச். 4) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.அப்போது அவரிடம் இன்று விஜய் தஞ்சாவூர் கூட்டத்தில் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அ... மேலும் பார்க்க

ஈரான் - அமெரிக்கா: இலங்கையில் இருந்து 40 கடல் மைல் தொலைவில் தாக்குதல் - பரவும் போர் பதற்றம்!

ஈரான் - அமெரிக்கா இடையே தொடர்ந்து வரும் போரில், ஈரான் அமெரிக்காவின் ராணுவ முகாம்களையும், அமெரிக்காவின் நட்பு நாடுகளில் இருக்கும் அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளையும் தாக்கி வருகிறது. அமெரிக்காவும் ஈரான்... மேலும் பார்க்க

பீகார்: முதல்வர் பதவியை துறக்கிறாரா நிதிஷ் குமார்? - துணை முதல்வராகும் வாரிசு? - என்ன நடக்கிறது?

பீகார் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஜே.டி.யு கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி போட்டியிட்டது. அரசியல் நிபுணர்களால் 'நிதிஷ் குமார் இந்த தேர்தலில்... மேலும் பார்க்க

"இந்தித் திணிப்பை அதிகாரிகளின் மீது போடாதீர்கள், அது உங்கள் அரசின்.!"- தமிழிசைக்கு சு.வெ பதில்

திருச்சி மண்டல இரயில்வே அலுவலக நுழைவு வாயிலுக்கு 'கர்தவ்ய த்வார்' என மத்திய அரசு பெயர் சூட்டிருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. ' இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது' என்ற... மேலும் பார்க்க

திருச்சி ஜங்ஷன் இந்தி விவகாரம்: `மத்திய அரசின் தமிழ் மொழி மீதான் பற்றை..!' - எடப்பாடி பழனிசாமி

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்துக்கு அண்மையில் புதிதாக நுழைவு வளைவு கட்டப்பட்டது. அதில், இந்த அலுவலகத்தின் இந்தி பெயரான ‘கர்தவ்... மேலும் பார்க்க