செய்திகள் :

'அந்த ஒரு காரணத்துக்குதான் கூட்டணிக்கு ஒத்துக்கிட்டோம்!' - கிரிஷ் சோடங்கர் அதிரடி

post image

திமுக கூட்டணியில் காங்கிரஸூக்கு 28 சீட்களும் ஒரு ராஜ்ய சபா சீட்டும் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.

Cong
Cong

இந்நிலையில் அறிவாலயத்திலிருந்து கிளம்பிய பிறகு தனியார் விடுதியில் கூட்டணி குறித்து செல்வப்பெருந்தகை பேசுகையில், 'இது வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த நாள். இத்தனை ஆண்டுகளாக காங்கிரஸூக்கு தொகுதி குறைந்துகொண்டேதான் வந்திருக்கிறது. இப்போதுதான் திமுக கூட்டணியில் எங்களுக்கு எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

எங்களுக்கு உரிய அங்கீகாரத்தை கொடுத்த முதல்வருக்கு நன்றி. எங்கள் கூட்டணி 210 தொகுதிகளில் வெல்லும். உள்ளாட்சியில் உரிய பிரதிநிதித்துவம் வேண்டுமென கோரிக்கை வைத்திருக்கிறோம். கண்டிப்பாக செய்கிறோம் என திமுக கூறியிருக்கிறது.' என்றார்

Chodankar
Chodankar

கிரிஷ் சோடங்கர் பேசுகையில், 'நாங்கள் தொண்டர்களின் மனநிலைக்கே முக்கியத்துவம் கொடுத்தோம். எங்களின் தொண்டர்களும் நிர்வாகிகளும் 58 ஆண்டுகளாக அதிகாரத்தில் இல்லை. அவர்களை முன்வைத்தே கூட்டணி பேசினோம். உள்ளாட்சியில் எங்கள் தொண்டர்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதையே பிரதானமாக முன்வைத்தோம்.

உள்ளாட்சியிலும் கூட்டுறவிலும் எங்களின் தொண்டர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கப்படும் என உறுதியளித்ததால் மட்டுமே கூட்டணிக்கு ஒத்துக்கொண்டோம்' என்றார்.

` மண்ணுக்கு போற உடம்பு; படிப்புக்கு உதவட்டுமே!'- உடல் தானப் பதிவுசெய்த அற்புதம் அம்மாள், பேரறிவாளன்

"ரொம்ப நாள் ஆசைய்யா... ஆனா யார்கிட்ட கேட்டாலும் யாராவது சொந்தக்காரங்க சாட்சிக் கையெழுத்துப் போடணும்னு சொன்னாங்க. யாரைக் கூட்டிட்டிப் போறதுன்னு தெரியாம இருந்தேன். இப்போ அறிவு இருக்கான்ல... நல்லகண்ணு அய... மேலும் பார்க்க

'மனநிறைவோடு 28 சீட்களை வாங்கியிருக்கிறோம்!' - செல்வப்பெருந்தகை ஹேப்பி!

இழுபறியில் நீடித்துக் கொண்டிருந்த திமுக - காங் கூட்டணி இறுதியாகியிருக்கிறது. காங்கிரஸூக்கு 28 சட்டமன்றத் தொகுதிகளும் 1 ராஜ்ய சபா சீட்டும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. Congமுதல்வரை சந்தித்து கூட்டணி ஒப்பந்த... மேலும் பார்க்க

'ராகுல் பனையூருக்கு வரணுமா?' - கோட்டைவிட்ட விஜய்; கொதிக்கும் கதர் சட்டைகள்; விரக்தியில் தவெக

அறிவாலயமும் சத்யமூர்த்தி பவனமும் பெரும் போராட்டத்தை கடந்து ஒருவழியாக தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டனர். இந்த விவகாரத்தில் இலவு காத்த கிளியாக வெறும் கையோடு நிற்பது விஜய் மட்டும்தான... மேலும் பார்க்க

'முடிந்தது பஞ்சாயத்து; காங்கிரஸூக்கு எத்தனை சீட்?' - அறிவாலயத்தில் என்ன நடந்தது?

இழுபறியில் நீடித்து வந்த திமுக காங்கிரஸ் கூட்டணியின் பஞ்சாயத்துகள் அத்தனையும் ஒரு வழியாக ஓய்ந்திருக்கிறது. அறிவாலயத்தில் முதல்வர் முன்னிலையில் காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டி... மேலும் பார்க்க

"தம்பி நல்லா பேசுனாரு; கேள்விகள் நியாயமா கேட்டாரு.!" - விஜய் பேச்சு குறித்து தமிழிசை

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், இன்று (மார்ச். 4) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.அப்போது அவரிடம் இன்று விஜய் தஞ்சாவூர் கூட்டத்தில் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அ... மேலும் பார்க்க

'டெல்லி தலைமையின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.!' - பேச்சுவார்த்தை தாமதம் குறித்து செல்வப்பெருந்தகை

ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை ஓரங்கட்டிய காங்கிரஸ் தலைமை, 30 சட்டசபை தொகுதிகள், 2 ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் ஆனால், 27 சட்டசபை தொகுதிகள், 1 ராஜ்யசபா இடங்கள் மட்டுமே தர ... மேலும் பார்க்க