செய்திகள் :

"இடைத்தேர்தலைத் திணிப்பவர்களே தேர்தல் செலவையும் ஏற்க வேண்டும்" - தாராபுரத்தில் சீமான் ஆவேசம்

post image

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 6 - ம் தேதியும் வாக்கு எண்ணிக்கை 9-ம் தேதியும் நடைபெற இருக்கின்றன.

தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர்கள் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் தங்கள் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர்.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியினர் தாராபுரம் தொகுதி வேட்பாளர் கார்த்திகாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று இரவு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சீமான்

தொடர்ந்து மக்களிடம் பேசிய சீமான், "நாங்கள் எந்தத் தேர்தலிலும் இதுவரை செல்லவில்லை. ஆனால், ஒருபோதும் மக்களை விட்டு செல்லவில்லை. விசிலை விடு விவசாயியைத் தொடு. இந்த இடைத்தேர்தல் என்பது வெறும் கட்சிகளுக்கு இடையேயான போட்டி மட்டுமல்ல. தற்போதுள்ள தவறான அரசியல் சிஸ்டத்தைக் கேள்வி கேட்கவும், உண்மையான மாற்றத்தை உருவாக்கவும் மக்களுக்குக் கிடைத்துள்ள ஒரு வாய்ப்பு.

வாக்குக்கு பணம் வாங்காமல் மக்கள் அனைவரும் சிந்தித்து ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும். சொந்த காரணங்களுக்காகவோ அல்லது கட்சி மாறுவதற்காகவோ பதவியை ராஜினாமா செய்து விட்டு மக்கள் மீது இடைத்தேர்தலைத் திணிப்பவர்களே தேர்தலுக்கான முழு செலவையும் ஏற்க வைக்க வேண்டும்.

இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று விட்டு ராஜினாமா செய்யப்படும் தொகுதிகளில் இரண்டாம் இடத்தைப் பெறுபவரையே உறுப்பினராகத் தேர்வு செய்ய வேண்டும். அதற்காக மீண்டும் தேர்தல் நடத்தக் கூடாது.

ஒட்டுமொத்த இந்தியத் தேர்தல் அமைப்பிலும் புதிய சட்ட விதியைக் கொண்டு வர வேண்டும். அதன் மூலமே பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவது தடுக்கப்படும்" என்றார்.

தாராபுரம்: தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மக்கள், பாதியில் நிறுத்தப்பட்ட தேர்தல் பிரசாரம்!

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 - ம் தேதி நடைபெற இருக்கிறது. எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க- வில் இணைந்த சத்யபாமாவை வேட்ப... மேலும் பார்க்க

இடைத்தேர்தல்: ரூ.16.40 கோடி சொத்து, 3 குற்ற வழக்குகள்; 2லும் முதல் இடத்தில் TVK வேட்பாளர் சத்தியபாமா

தாராபுரம் தனித் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு சரிபார்ப்பு நேற்று மாலை நிறைவடைந்துள்ளது. முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 22 வேட்புமனுக்களைத் தேர்வு ஆணையம் ஏற்று... மேலும் பார்க்க

"அஜித் அரசியலுக்கு வந்தால் விஜய்யின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம்" - கொந்தளித்த திண்டுக்கல் சீனிவாசன்

தாராபுரம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க தரப்பில் போட்டியிடும் வேட்பாளர் பானுமதி நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அக்கட்சியின் சார்பில் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் திண்ட... மேலும் பார்க்க

தாராபுரம்: "மீண்டும் மக்கள் சேவையில்..." - தவெக வேட்பாளராக மனுத்தாக்கல் செய்த ராஜினாமா MLA சத்யபாமா

தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் 6-ம் தேதி நடைபெறவுள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று மாலையுடன் நிறைவடைய இருக்கிறது. தாராபுரம் தொகுதியைப் ... மேலும் பார்க்க

தாராபுரம்: "ஒரு வார்த்தை படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் சட்டமன்றத்தில்..."- தி‌முக வேட்பாளர் காட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதி உறுப்பினரான அ.தி.மு.க- வைச் சேர்ந்த சத்யபாமா தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளி... மேலும் பார்க்க