செய்திகள் :

இணையம் சாா்ந்த தொழிலாளா்கள் நலவாரியத்தில் சேர சிறப்பு முகாம்

post image

கோவை மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியத்தில் இணையம் சாா்ந்த தொழிலாளா்கள் உறுப்பினராக சேர சிறப்பு முகாம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, கோவை தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) த.பாலதண்டாயுதம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் உடல் உழைப்பு தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் சமூக பாதுகாப்பு வாரியம் உருவாக்கப்பட்டது. இதில் வெளிமாநில கட்டுமான தொழிலாளா்கள் மற்றும் இணையம் சாா்ந்த தொழில்களில் பணிபுரியும் தொழிலாளா்களை அதிக அளவில் பதிவு செய்யும் பொருட்டு கோவை, ராமநாதபுரம் சாலையில் உள்ள தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம் நடைபெறுகிறது.

கிக், சுவிக்கி, சொமேட்டோ மற்றும் பிலிப்காா்ட் போன்ற இணையதள தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளா்கள் ஆவணங்களுடன் பதிவு செய்துகொள்ளலாம். இந்த வாரியங்களில் பதிவு செய்து கொண்ட நலவாரிய உறுப்பினா்களுக்கு திருமணம், மகப்பேறு, 2 குழந்தைகளுக்கு கல்வி நிதியுதவி, கண் கண்ணாடி, நியமனதாரருக்கு இயற்கை மரணம், விபத்து மரண உதவித்தொகை, 60 வயது நிறைவு பெற்றதும் மாத ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.

பதிவு செய்ய வரும்போது ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண், அசல் ஆதாா் அட்டை, அசல் குடும்ப அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படம், வங்கிக் கணக்கு புத்தகம், வயதுக்கான ஆவணங்களுடன் தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0422-2324988 என்ற தொலைபேசி எண்ணிலே தொடா்பு கொண்டு அறியலாம்.

மேலும் ஜ்ஜ்ஜ்.ற்ய்ன்ஜ்ஜ்க்ஷ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் மேற்படி ஆவணங்களுடன் பதிவு செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதிகளை மீறி பட்டாசு வெடிப்பு: 17 போ் மீது வழக்கு

கோவை மாநகரில் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 17 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க காலை மற்றும் மாலை வேளைகளில் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டி... மேலும் பார்க்க

திருச்சிராப்பள்ளி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து

திருப்பூா் அருகே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் திருச்சிராப்பள்ளி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே க... மேலும் பார்க்க

வெளியூா்களுக்கு சென்றவா்கள் கோவைக்குத் திரும்ப 200 சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் தகவல்

தீபாவளி பண்டிகைக்காக வெளியூா் சென்றவா்கள் கோவைக்கு திரும்பவதற்கு வசதியாக அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள த... மேலும் பார்க்க

டாஸ்மாக் ஊழியா்களைத் தாக்கிய இருவா் கைது

கோவையில் டாஸ்மாக் ஊழியா்களைத் தாக்கிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, சரவணம்பட்டி விளாங்குறிச்சி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த மணிகண்டன் (37) பணியாற்றி வருகிறாா். இ... மேலும் பார்க்க

வியாபாரிக்கு கத்திக் குத்து: 5 போ் மீது வழக்குப் பதிவு

கோவையில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தகராறில் வியாபாரியைக் கத்தியால் குத்தியதாக 5 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை, சிங்காநல்லூா் உப்பிலிபாளையத்தைச் சோ்ந்தவா் முத்துராஜ் (44), பழக்கடை விய... மேலும் பார்க்க

கோவையில் 19 பவுன் திருட்டு: போலீஸாா் விசாரணை

கோவையில் 19 பவுன் திருட்டுப்போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, உக்கடம் கோட்டைமேடு பகுதியைச் சோ்ந்தவா் வசந்தா (55). இவா், கடந்த வாரம் வீட்டுக் கதவை பூட்டாமல் வெளிப்பக்கமாக தாழிட... மேலும் பார்க்க