செய்திகள் :

"இது சினிமா கிடையாது; Scene பண்ணுவதற்கு"- தவெக அரசை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த்

post image

தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (ஜூலை.24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

"நீட் போராட்டத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள், நிலைப்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பன குறித்து ஓட்டு போட்ட தமிழக மக்கள்தான் சொல்ல வேண்டும்.

இன்று நாங்கள் தொகுதிக்குச் செல்கிறோம், ஆய்வு செய்கிறோம், அதிகாரிகளைச் சந்திக்கிறோம்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

எந்த ஒரு அடிப்படை வேலைகளையும் அவர்கள் ஆரம்பிக்கவில்லை. ஏறக்குறைய 3 மாதங்கள் முடியப்போகின்றன.

இது ஒன்றும் சினிமா கிடையாது. சீன் பண்ணுவதற்கு, ரீல்ஸ் போடுவதற்கு, புகைப்படங்கள் எடுப்பதற்கு... கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை இந்த அரசு மனதில் வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும்.

நிச்சயமாக இந்த அரசாங்கம் நல்ல அரசாங்கமா? என்பதற்கான பதிலை மக்கள்தான் சொல்ல வேண்டும். என்ன செய்யப்போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்" என்று பேசியிருக்கிறார்.

படத்தைப் பார்த்து அழுத முகமது பர்வேஸ்
படத்தைப் பார்த்து அழுத முகமது பர்வேஸ்

தொடர்ந்து 'ஜன நாயகன்' படத்தைப் பார்த்து அழுத அமைச்சர்கள் குறித்த கேள்விக்கு, "மக்கள் பிரதிநிதிகள் 'ஜன நாயகன்' படத்தைப் பார்த்து கண்ணீர்விடாமல் மக்கள் பணியில் ஈடுபடுங்கள். மக்கள் பிரதிநிதிகள் ரீல் ஹீரோக்களாக இல்லாமல் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

மதுரை: `எந்த layout வந்தாலும் என்னிடம் அப்ரூவல் வாங்கிய பிறகே அனுமதி'- எம்எல்ஏ கார்த்திகேயன்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 88 மணி நேர தாக்குதலின் ரகசியங்களை முதன்முறையாக உடைத்த அஜித் தோவல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் முதன்முறையாக விரிவாக பேசியிருக்கிறார். ... மேலும் பார்க்க

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்: ``தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" - சிபிஎம் சண்முகம்

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``பெற்றோரின் புகாரைப் பெற மறுத்த குற்றச்சாட்டில் உண்மையில்லை" - அமைச்சர் சம்பத் குமார்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் மயக்கத்தில் இருக்குறீர்களே CM sir?"- அப்பாவு காட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க