செய்திகள் :

`இது முட்டாள்தனமானது' Vs `சமநிலையைப் பேண முடியும்' - TRB ராஜா - கீர்த்தனா கருத்து மோதல்!

post image

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்துவரும் நிலையில், ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தாஹிரா சட்டமன்றத்தில் உரையாற்றினார். அப்போது, ``எங்கள் பகுதியில் இயங்கி வரும் ஜே.கே. டயர் நிறுவனம் இரவோடு இரவாக டயர்களை எரிப்பதால் கடும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். கடந்த ஆட்சியிலிருந்தே இந்த புகார் நீடித்து வருவதால், மக்களின் நலன் கருதி அந்த தொழிற்சாலையை உடனடியாக இழுத்து மூட வேண்டும். இத்தகைய கம்பெனி நமக்குத் தேவையில்லை." எனக் காரசாரமாக வலியுறுத்தினார்.

எம்.எல்.ஏ தாஹிரா
எம்.எல்.ஏ தாஹிரா

எம்.எல்.ஏ தாஹிராவின் இந்த பேச்சுக்கு முன்னாள் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கடுமையாக எதிர்ப்பைப் பதிவு செய்தார். அவர் எக்ஸ் பதிவில், ``மாசுபாடு தொடர்பான பிரச்னைகள் இருந்தால் அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, ஒரு தொழிற்சாலையை ஒட்டுமொத்தமாக மூடச் சொல்வது முட்டாள்தனமானது. இது தொழில்துறைக்கு மிகவும் தவறான சமிக்ஞையை அனுப்பும். இதுபோன்ற முதிர்ச்சியற்ற மற்றும் சிந்தனையற்ற பேச்சுகளால் தமிழ்நாட்டின் தொழில் துறை நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பது மிகுந்த மனவேதனையளிக்கிறது." எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பதிவுக்கு பதிலளித்திருக்கும் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, `` `அரசியலை தொழில்துறையிலிருந்து விலக்கி வைக்க வேண்டும்' என்ற கருத்து, உண்மைகள் சாதகமாக இல்லாதபோது சிலருக்கு பேசுவதற்கு வசதியாக இருக்கிறது. அதே வழியைப் பயன்படுத்தித் தங்களுக்குச் சாதகமானக் கருத்துகளைப் பரப்புவதற்கும் அவர்கள் தயங்குவதில்லை.

நல்லாட்சிக்கு நுட்பமான அணுகுமுறை தேவை. நாங்கள் எதையும் ‘சரி - தவறு’ என்ற ஒற்றைப் பார்வையில் அணுகுவதில்லை. வேலைவாய்ப்புகளையும் சுற்றுச்சூழலையும் எங்களால் ஒரே நேரத்தில் சமநிலையாகப் பாதுகாக்க முடியும்.

அமைச்சர் கீர்த்தனா
அமைச்சர் கீர்த்தனா

தொழிற்சாலைகளை மூடுவது தொழிலாளர்களைப் பாதிக்கும். அதேபோலக் கட்டுப்பாடற்ற மாசடைவு அங்குள்ள மக்களைப் பாதிக்கும். நமது முதலமைச்சரின் தலைமையில், நாங்கள் தொழில்துறை வளர்ச்சியையும் அதேவேளையில் சுற்றுச்சூழல் விதிகளையும் சரியாகப் பின்பற்றிச் செயல்பட உறுதியேற்றுள்ளோம்.

நிலையான வளர்ச்சி என்பது ஒரு விருப்பத் தேர்வு அல்ல. அது நமது எதிர்காலச் சந்ததியினருக்கு நாம் செய்ய வேண்டிய மிகப்பெரிய பொறுப்பாகும். இதை நான் சட்டமன்றத்திலேயே தெரிவித்திருந்தேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

"அம்பேத்கரின் சட்டத்திற்கு காக்கி ட்ரவுசர் போட்ட அமைச்சர்"- நிர்மல் குமாருக்கு அன்பில் மகேஸ் கண்டனம்

இன்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசினார். அந்த உரையில், முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுகத் தலைவர் ஸ்டாலின் பெண்களை இழிவாகப் பேசியதால்தான் மிசாவில் கைதா... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: `கள்ளச்சாராய மரணங்களுக்கு அதிகாரிகளே காரணம்!’ - கோகுல்தாஸ் அறிக்கை சொல்வதென்ன ?

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி அதிகாலையில் கள்ளச்சாராயம் குடித்ததால் ஒன்று, இரண்டு என மெல்லத் தொடங்கிய உயிரிழப்புகள், அன்று நள்ளிரவைத் தாண்டுவதற்குள் கருணாபுரம... மேலும் பார்க்க

"எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும்..!"- முதல்வர் விஜய் விளக்கம்

நேற்று (செப்.7) நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது முதல்வர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். சர்க்காரியா கமிஷன், ... மேலும் பார்க்க

மதுராந்தகம் இடைத்தேர்தல்: தவெக-வில் சீட் வார்... மரகதம் குமரவேலுக்கு எதிராக உருவாகும் ரேஸ்!

தமிழகத்தில் காலியாக இருக்கும் ஏழு தொகுதிகளில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவித்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். அந்த இரண்டு தொகுதிகளிலும் எம்.எல்.ஏ-க்களாக இருந்து, பத... மேலும் பார்க்க

`ஆளுங்கட்சியினர் அதிமுகவினரை தாஜா செய்கிறார்கள்; இடைத்தேர்தலில் நாங்கள்..!' - எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். "இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு தொகுதிகளும் (மதுராந்தகம், தாராபுரம்) ஏற்கெனவே அதிமுக வெற்றி பெற்ற இடங்கள்... மேலும் பார்க்க

`நீதி கேட்கும் அதிமுக; குறைகூறும் திமுக... நம்பிக்கையில் தவெக' - இடைத்தேர்தல் களம் எப்படி இருக்கும்?

தமிழகத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, இவ்விரு தொகுதிகளுக்க... மேலும் பார்க்க