செய்திகள் :

"இதை யாரும் புறக்கணிக்க முடியாது, புறக்கணிக்கவும் மாட்டார்கள்" - ராகுல் காந்தி - விஜய் போன்கால்

post image

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகித்து வருகிறது.

ஆனால், ஆட்சி அமைப்பதற்கான தொகுதிகளின் எண்ணிக்கை தவெக-விடம் இல்லை. இப்போது தவெக எந்தக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்று கேள்வி எழுந்துள்ள நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் கூறியுள்ளதாவது...

"திரு. விஜய் அவர்களைத் தொலைபேசியில் அழைத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் இந்த பிரமாண்ட வெற்றிக்காக எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்.

ராகுல் காந்தி பதிவு
ராகுல் காந்தி பதிவு

இந்தத் தீர்ப்பு, இளைஞர்களின் எழுச்சிமிகு குரலைப் பிரதிபலிக்கிறது. இந்தக் குரலை யாரும் புறக்கணிக்க முடியாது, புறக்கணிக்கவும் மாட்டார்கள்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் கட்சியினரின் கடின உழைப்பிற்கும், ஆதரவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களின் நலனைப் பாதுகாப்பதிலும், அவர்களுக்குச் சேவை செய்வதிலும் காங்கிரஸ் கட்சி எப்போதும் முன்னிற்கும் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்".

`மு.க.ஸ்டாலின் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி மனதார வருத்தப்பட்டார்!' – ஆதங்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக த.வெ.க உருவெடுத்திருந்தாலும், ஆட்சி அமைப்பதற்கு தேவையான தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் தி.மு.க கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அதிலிருந்து ... மேலும் பார்க்க

SRH vs PBKS:"பஞ்சாப்பை வீழ்த்தி முதலிடம்; அதிரடி ஆட்டமே எங்களின் ரகசியம்!"– பேட் கம்மின்ஸ் பெருமிதம்

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (மே 6) விறுவிறுப்பான ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த பஞ்சாப் அணியை வீழ்த்தி, ஹைதராபாத் அணி அபார வெற்... மேலும் பார்க்க

'எதிர்க்கட்சியினருக்கு அநீதியாகிவிடும்'னு சொன்னவரு ஸ்டாலின், அதனால்.!'- சி.எஸ் அமுதன் சொல்வது என்ன?

நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது. ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.கவி... மேலும் பார்க்க

'திராவிட கட்சிகள் திருமாவை முதல்வராக முன்மொழிய வேண்டும்' - புது ரூட்டில் சிந்தனைச் செல்வன்

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, தவெக என எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், தொங்கு சட்டமன்றம் தான் அமைய உள்ளது. பெரும்பாலான தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள தவெக, பெரும்... மேலும் பார்க்க

தவெக ஆதரவுக்காக உடைகிறதா அதிமுக? – எம்.எல்.ஏ-க்கள் புதுச்சேரி ரிசார்ட்டில் குவிந்த பின்னணி என்ன?

த.வெ.க ஆதரவுக்காக வெடித்த கோஷ்டி மோதல்!தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க-வை வீழ்த்தி த.வெ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், அந்தக் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்க... மேலும் பார்க்க