செய்திகள் :

திமுக - அதிமுக கூட்டணி? "பாஜக-வைத் தூண்டும் அதிமுக; துரோகத்தையும் மீறி நாங்கள்.."- கலாநிதி வீராசாமி

post image

'என்னது திமுகவும், அதிமுகவும் கூட்டணியா?' என்பதுதான் நேற்றைய இரவு முதல் இன்று காலை வரை இந்தியா முழுவதும் பேசப்பட்ட 'ஹாட்' டாபிக்.

"தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்கட்டும். அவரது ஆட்சியை திமுக ஆறு மாதங்களுக்குத் தொந்தரவு செய்யாது" என்று 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தி நிறுவனத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தந்த பேட்டியில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

 கலாநிதி வீராசாமி
கலாநிதி வீராசாமி

இந்தப் பரபரப்பு செய்தி குறித்து திமுக எம்.பி., காலநிதி வீராசாமியும் தனது எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்திருக்கிறார். அவர் கூறியுள்ளதாவது, "காங்கிரஸ் (மற்றும் பிற கூட்டணிக் கட்சிகள்) செய்த துரோகத்தையும் மீறி, ஒரு வலுவான எதிர்க்கட்சியாகச் செயல்பட திமுக முடிவு செய்துள்ளது.

அதே சமயம், தவெக ஆட்சி அமைப்பதைத் தடுக்க அதிமுக, பாஜகவைத் தூண்டிவிட்டு வருகிறது. இது மக்களின் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். ஜனநாயகம் வெல்லும் என்று நம்புவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

திமுக எதிர்க்கட்சியாகச் செயல்பட தயார் என்றால், எப்படி 'திமுக - அதிமுக கூட்டணி?' பேச்சு வந்தது என்கிற கேள்வி எழுகிறது.

அதற்கான பதிலாக, "ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு கோரி திமுகவை அதிமுக நாடியது. ஆனால், இந்தக் கோரிக்கையை, 'மக்களின் தீர்ப்பை மீறி எதையும் செய்ய எங்களுக்கு விருப்பமில்லை.

அதனால், திமுக எதிர்க்கட்சியாகச் செயல்பட தயார்' என்று திமுக மறுத்திருக்கிறது" என்பதைக் கூறுகிறார்கள் விவரமறிந்தவர்கள்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு தங்களுடைய ஆதரவு இல்லை என்பதை நேற்று அதிமுக மறுத்தது குறிப்பிடத்தக்கது.

`விஜய் முதல்வராவதை தடுத்தால்..!' - ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவூட்டும் காங்கிரஸ் நிர்வாகி

காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் மகேந்திரன். இவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதி மகேந்திரனுக்கு ... மேலும் பார்க்க

`தி.மு.க-வுக்கு பாயத் தயாராகும் சிறுத்தைகள் டு சாரி கேட்ட செந்தில் பாலாஜி!' | கழுகார் அப்டேட்ஸ்

புலம்பும் கு.ப.கிருஷ்ணன்!"தப்புக்கணக்கு போட்டுட்டோம்"த.வெ.க-வில், முகம் தெரியாத பலரும் வெற்றிபெற்ற நிலையில், லால்குடி தொகுதி வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனோ தோல்வியைத் தழுவியிருக்கிறார். அ.தி.மு.க முன்னாள் அ... மேலும் பார்க்க

விஜய்க்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் பந்தாடும் ஆளுநர்! - வலுக்கும் கண்டனங்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன... மேலும் பார்க்க

`அந்த திட்டம் வேண்டாம்!' - அதிமுகவுக்கு `நோ' சொல்லிய திமுக?

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்தாலும் இன்னும் பரபரப்புக்குக் குறைவில்லாமல் நகர்கிறது அரசியல் களம். குறிப்பாக நேற்று இரவு வெளியான சில தகவல்கள் தமிழக அரசியல் பார்வையாளர்கள்கூட எதிர்பாராதவை. அதாவது, ... மேலும் பார்க்க

"விஜய்யைப் பதவியேற்க அனுமதிக்க வேண்டும்; ஆளுநர் அப்படி சொல்ல முடியாது" - திருமாவளவன்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது. 118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுக கூட்டணிய... மேலும் பார்க்க

`மு.க.ஸ்டாலின் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி மனதார வருத்தப்பட்டார்!' – ஆதங்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக த.வெ.க உருவெடுத்திருந்தாலும், ஆட்சி அமைப்பதற்கு தேவையான தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் தி.மு.க கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அதிலிருந்து ... மேலும் பார்க்க