செய்திகள் :

`அந்த திட்டம் வேண்டாம்!' - அதிமுகவுக்கு `நோ' சொல்லிய திமுக?

post image

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்தாலும் இன்னும் பரபரப்புக்குக் குறைவில்லாமல் நகர்கிறது அரசியல் களம். குறிப்பாக நேற்று இரவு வெளியான சில தகவல்கள் தமிழக அரசியல் பார்வையாளர்கள்கூட எதிர்பாராதவை. அதாவது, விஜய்க்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால், ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காத பட்சத்தில், திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைப்பதற்கான திரைமறைவு பேச்சுகள் நடப்பதாக வெளியான தகவல்தான் களத்தை அனலாக்கியது.

எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், விஜய்
எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின்

'தவெகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சியமைக்கப் போகிறது. இது மக்களின் முடிவுக்கு எதிரானது' என அரசியல் விமர்சகர்களும் மூத்த பத்திரிகையாளர்கள் சிலரும் சமூக வலைதளங்களில் எழுத, அரசியல் களம் அனலாக மாறியிருக்கிறது.

இந்த நிலையில், இன்றும் விஜய் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை வைத்தார். அப்போது ஆளுநர் தரப்பில், "உங்களுக்கு எத்தனை எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கிறது? பெரும்பான்மையை எப்போது நிரூபிக்க முடியும்? யார் யார் உங்களுக்கு ஆதரவளிக்க உள்ளார்கள்? நிலையான அரசாங்கத்தை வழங்க முடியுமா?" உள்ளிட்ட கேள்விகள் எழுப்பப்பட்டதாகக் கூறப்பட்டது.

இதனிடையே, திமுக தலைமை அதிமுகவுடனான கூட்டணி ஆட்சித் திட்டத்திற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, திமுகவின் மூத்த நிர்வாகிகளும் முன்னாள் அமைச்சர்கள் சிலரும் திமுக தலைமையைச் சந்தித்து, "அதிமுகவுக்கு ஆதரவளிக்கும் முடிவை எடுத்தால் அது நமக்கு எதிர்காலம் இல்லாமல் செய்துவிடும். இன்று எடுக்கும் முடிவு தொண்டர்களையும் சோர்வடையச் செய்யும். இன்று பழனிசாமி ஆட்சி அமைக்க திமுக ஆதரவளிக்கும் பட்சத்தில், நாளை அவர்கள் பாஜகவுக்கு ஆதரவாக ஒரு நிலைப்பாடு எடுக்கும்போது அதன் பழி நம் மீதும் விழும். தற்போதைய நிலையில் தவெக ஆட்சி அமைப்பதே சரியானதாக இருக்கும். நம்மால் திறமையான எதிர்க்கட்சியாக செயல்பட முடியும். அதன் மூலம் இழந்த ஆதரவை மீட்டெடுக்க முடியும். மாறாக அதிமுகவுக்கு ஆதரவாக நின்றால், எதிர்கட்சியாகவும் செயல்பட முடியாமல் போகும் " என்று கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தற்போது ஆளுநர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் தடுப்பது பாஜக தான் எனும் கருத்து மக்களிடம் இருக்கிறது. நாமும் அதிமுகவுடன் இணைந்து செயல்படுவது என்பது, பாஜக ஆடும் ஆட்டத்துக்கு நாமும் உடந்தை என் நம் பக்கம் மக்களின் கோபம் திரும்பி விடும் சிக்கலும் உள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

ஸ்டாலின் - திமுக
ஸ்டாலின் - திமுக

இதனைத் தொடர்ந்து திமுக தலைமையும், எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான ஒருவர் மூலம், "இந்தத் திட்டம் வேண்டாம்; திமுகவுக்கு இதில் மாற்றுக் கருத்து உள்ளது" என்று தெரிவித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. .

தற்போது திமுக தலைவர் ஸ்டாலினுடன் விசிக தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு நடத்தி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். திமுக தலைமை, இந்த திட்டத்தை கைவிட்ட பின்னர் தான் தற்போது இந்த சந்திப்பு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பின்னர் அவர்கள் தங்களின் நிலைப்பாட்டை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

`ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லை' - விஜய் உடனான சந்திப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்!

ஆட்சியமைக்க பெரும்பான்மை ஆதரவு தேவை என ஆளுநர் வலியுறுத்தியதாக, தகவல் வெளியாகியிருக்கிறது.தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தன... மேலும் பார்க்க

`இரண்டு பி.எல்.ஓக்கள் காணாமப் போனாங்க!' - மம்தா தொகுதியான பவானிப்பூர் எஸ்.ஐ.ஆர் அதிகாரி சி.முருகன்

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளது.ஆனாலும் அந்தக் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, ‘நான் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன், தேர்தலில் சதி நடந... மேலும் பார்க்க

"ஆளுநர் மூலம் அரசியல் சாசனத்திற்கு விரோதமாக நடக்கிறது பாஜக" - பெ.சண்முகம் குற்றச்சாட்டு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என்கிற குரல் தற்போது தமிழ்நாடு முழுவதும் எழுந்துள்ளது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்... மேலும் பார்க்க

TVK: ``ஆளுநர் ஏன் தயங்குகிறார்; மக்களின் தீர்ப்புக்கு மரியாதை இதுதானா?" - நடிகர் விஷால் விமர்சனம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில்தான் திமுக கூட்ட... மேலும் பார்க்க

பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசமா, 24 மணிநேர அவகாசமா? - அன்று எடியூரப்பாவுக்கு நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சிக்கலில் தவெக..!ஆனால் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே... மேலும் பார்க்க

‘எந்த கொள்கையை விற்று இன்றைக்கு கோடீஸ்வரனாக இருக்கிறீர்கள்? ’ – டி.ஆர்.பாலுவுக்கு காங்கிரஸ் பதிலடி

தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிய நிலையில், இரண்டு கட்சியினர் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது. இதனிடையே காங்கிரஸை காட்டமாக விமர்சித்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு ஒரு அறிக்கை வெளியி... மேலும் பார்க்க