செய்திகள் :

படப்பிடிப்பில் தீபிகா தீவிரம்; வீட்டில் குழந்தையைக் கவனிக்கும் ரன்வீர்; ஆச்சரியத்தில் பாலிவுட்!

post image

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் சமீபத்தில் வெளியான துரந்தர் 2 படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கிறது. உலக அளவில் படம் ரூ.1700 கோடிக்கும் அதிகமான வசூலைக் கொடுத்து இருக்கிறது. ஆனால் படம் இந்த அளவுக்கு அதிக வசூலைக் கொடுத்த பிறகும் ரன்வீர் சிங் புதிய படம் எதிலும் பங்கேற்காமல் எந்த நிகழ்ச்சிக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார்.

அதோடு ரன்வீர் சிங் இப்போது வீட்டை விட்டு வெளியில் வராமல் தனது மகளைக் கவனித்துக்கொண்டிருக்கிறார். ரன்வீர் சிங் மனைவியான நடிகை தீபிகா படுகோனே தற்போது குழந்தையை மும்பையில் விட்டுவிட்டு நடிகர் ஷாருக்கானுடன் கிங் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வெளிநாடு சென்று இருக்கிறார்.

எனவே அவர் திரும்பி வரும் வரை வீட்டை விட்டு வெளியில் எங்கும் செல்லாமல் குழந்தையைக் கவனித்துக்கொள்ளும் வேலையை ரன்வீர் சிங் செய்து வருகிறார்.

தனது வேலைகளுக்கு பிரேக் கொடுத்துவிட்டு குழந்தையைக் கவனித்து வருகிறார். கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் தொழிலில் ஆதரவாக இருப்பது குறித்து பாலிவுட்டில் பலரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

தீபிகா படுகோனே சமீபத்தில்தான் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். அப்படி இருந்தும் ஷாருக்கான் படத்தை முடித்துக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவருடன் தென்னாப்பிரிக்காவிற்குச் சென்று இருக்கிறார்.

ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே

ஷாருக்கானும், தீபிகா படுகோனேயும் தண்ணீரில் படப்பிடிப்பில் பங்கேற்ற புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தது. கிங் படம் டிசம்பர் மாதம் திரைக்கு வர இருக்கிறது. மேலும் சில நாள்களுக்கு தீபிகா படுகோனே தென்னாப்பிரிக்காவில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தந்தை மற்றும் தாய் ஆகியோரின் இரண்டு வேலையையும் ரன்வீர் சிங் செய்து வருகிறார்.

சமீபத்தில்தான் ரன்வீர் சிங்கிற்கும், டான் 3 படத்தயாரிப்பாளர் பர்ஹான் அக்தருக்கும் இடையே இருந்த பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது. பாலிவுட் நடிகர்கள் ஆமீர் கான் போன்ற பிரபலங்கள் இதில் தலையிட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு முடிவு கண்டுள்ளனர்.

ரன்வீர் சிங், டான் 3 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு ரூ.10 கோடி முன்பணமும் வாங்கினார். அவரை நம்பி தயாரிப்பாளர் தரப்பில் இடம் தேர்வு போன்ற படப்பிடிப்புக்கு முந்தைய பணிகளுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டது.

ஆனால் ரன்வீர் சிங் திடீரென இப்படத்தில் நடிக்க முடியாது என்று சொன்னதால் ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு ரன்வீர் சிங் தங்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று பர்ஹான் அக்தர் கோரிக்கை விடுத்து இருந்தார். தற்போது பேச்சுவார்த்தையில் ரன்வீர் சிங் வாங்கிய முன்பணம் ரூ.10 கோடியைத் திரும்ப கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

"3 வேளையும் பார்லே-ஜி பிஸ்கட்டை மட்டுமே சாப்பிட்டு உயிர் பிழைத்திருக்கிறேன்" - நவாசுதீன் சித்திக்

'கேங்ஸ் ஆஃப் வசைப்பூர்' திரைப்படம் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற நடிகர் நவாசுதீன் சித்திக், பாலிவுட்டில் இன்று தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். சமீபத்தில் 'ரேடியோ நாஷா' இதழுக்கு அளித்த பேட... மேலும் பார்க்க

Ek Din Review: ஒரு நாள் மெமரி லாஸ் காதல்! - படமாக நினைவில் தங்குகிறதா இந்த `ஏக் தின்'?

கதாநாயகன் தினேஷும் (ஜுனைத் கான்), நாயகி மீரா ரங்கநாதனும் (சாய் பல்லவி) ஒரே ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். மீராவை ஒருதலையாக காதலிக்கிறார் தினேஷ். அந்நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் ஜப்பானுக்கு டூர்... மேலும் பார்க்க

`கெளரி வந்தபிறகுதான் எனது வாழ்க்கை முழுமையடைந்தது' - லைஃப் பார்ட்னர் குறித்து நடிகர் ஆமீர் கான்

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் இரண்டு திருமணங்கள் செய்தார். ஆனால் இரண்டுமே நிலைத்திருக்கவில்லை. இரண்டு மனைவிகளையும் அவர் விவாகரத்து செய்துவிட்டார். அவர்களை விவாகரத்து செய்தாலும் தனது வீட்டிற்கு அருகேயே கு... மேலும் பார்க்க

'3 இடியட்ஸ்' படத்தின் 2-ம் பாகம் உருவாகிறதா? - ஆமீர் கான் சொன்ன தகவல் என்ன?

'3 இடியட்ஸ்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக ஆமீர் கான் தெரிவித்திருக்கிறார். கடந்த 2009 ஆம் ஆண்டு ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில், ஆமீர் கான் மாதவன், ஷர்மான் ஜோஷி நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்... மேலும் பார்க்க

Ek Din: "சாய் பல்லவிதான் இந்த நாட்டின் சிறந்த நடிகை!" - ஆமீர் கான் புகழாரம்

ஆமீர் கானின் மகன் ஜூனைத் கான் நடிகராக அறிமுகமாகும் 'ஏக் தின்' (Ek Din) படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றது. Ek Din Movieஇத்திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிக... மேலும் பார்க்க

Akshay Kumar: ஆன்லைன் கேமில் அக்‌ஷய் குமாரின் 13 வயது மகளிடம் நிர்வாணப் படம் கேட்ட நபர் கைது

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மகள் ஆன்லைனில் துன்புறுத்தலைச் சந்தித்தாகத் தெரிவித்து இருந்தார். மும்பையில் நடந்த சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியி... மேலும் பார்க்க