செய்திகள் :

"3 வேளையும் பார்லே-ஜி பிஸ்கட்டை மட்டுமே சாப்பிட்டு உயிர் பிழைத்திருக்கிறேன்" - நவாசுதீன் சித்திக்

post image

'கேங்ஸ் ஆஃப் வசைப்பூர்' திரைப்படம் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற நடிகர் நவாசுதீன் சித்திக், பாலிவுட்டில் இன்று தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.

சமீபத்தில் 'ரேடியோ நாஷா' இதழுக்கு அளித்த பேட்டியில், தனது ஆரம்பகாலத் திரைப் பயணப் போராட்டங்கள் மற்றும் வறுமை குறித்தும் அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

Nawazuddin
Nawazuddin

அந்தப் பேட்டியில் அவர், "ஆரம்பக் காலத்தில் நமக்குள்ளே ஒரு பெரும்தன்னம்பிக்கையும், நடிப்பின் மீது ஒரு தீராத ஆர்வமும் இருக்கும். ஆனால், அடுத்தடுத்து எதிர்கொள்ளும் தோல்விகளும், நம்முடைய தன்னம்பிக்கையை மெல்ல மெல்லச் சிதைக்கத் தொடங்கும். நம் மீது நமக்கே சந்தேகம் வரத் தொடங்கும்.

என்னையே சந்தேகித்து, 'நாம் இந்தத் துறைக்குச் சரிப்பட்டு வரமாட்டோமோ' என்று மனநிலை உண்டானது. அந்த இக்கட்டான மனநிலையை நான் கடந்து வந்துள்ளேன்.

ஒவ்வொரு முறையும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கும் போது, அது கடைசி நேரத்தில் கைநழுவிப் போகும். ஏறத்தாழ 10 ஆண்டுகளாக என்னைத் துரதிர்ஷ்டசாலியாகவே நான் கருதிக்கொண்டிருந்தேன். பெரிய வாய்ப்புகள் தேடி வரும்போது, அவை எதிர்பாராத விதமாகத் தடையாகிப் போகும்.

அப்போதெல்லாம் நான் என் நண்பர்களிடம் 'எனக்குத் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்துவிட்டது' என்று மிகத் தற்பெருமையுடன் கூறுவேன். ஆனால், படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில் என்னைத் தூக்கி எறிந்துவிடுவார்கள்.

சில நேரங்களில் எனக்கு தகவல் கூடத் தெரிவிக்க மாட்டார்கள். அந்தத் தருணங்களில் நடுரோட்டில் நின்று அழ வேண்டும் என்று தோன்றும். அப்படி அழுதும் இருக்கிறேன்.

ஆனால், யாராவது என்னைப் பார்த்துவிடக் கூடாதே என்று சுற்றும் முற்றும் கவனித்துக்கொண்டே அழுவேன்.

Nawazuddin Siddiqui
Nawazuddin Siddiqui

அந்த வறுமை நிறைந்த நாட்களில், ஒரு நாளைக்கு மூன்று வேளையும் பார்லே-ஜி பிஸ்கட்டை மட்டுமே சாப்பிட்டு உயிர் பிழைத்திருக்கிறேன்.

இன்றும் அந்த பிஸ்கட்டைச் சாப்பிடும்போதும், பழைய டெல்லி நாட்கள்தான் நினைவுக்கு வரும். அன்று நான் அனுபவித்த அந்தத் துயரம் இன்றும் என் மனதின் அப்படியே இருக்கிறது" எனப் பகிர்ந்திருக்கிறார்.

படப்பிடிப்பில் தீபிகா தீவிரம்; வீட்டில் குழந்தையைக் கவனிக்கும் ரன்வீர்; ஆச்சரியத்தில் பாலிவுட்!

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் சமீபத்தில் வெளியான துரந்தர் 2 படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கிறது. உலக அளவில் படம் ரூ.1700 கோடிக்கும் அதிகமான வசூலைக் கொடுத்து இருக்கிறது. ஆனால் படம்... மேலும் பார்க்க

Ek Din Review: ஒரு நாள் மெமரி லாஸ் காதல்! - படமாக நினைவில் தங்குகிறதா இந்த `ஏக் தின்'?

கதாநாயகன் தினேஷும் (ஜுனைத் கான்), நாயகி மீரா ரங்கநாதனும் (சாய் பல்லவி) ஒரே ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். மீராவை ஒருதலையாக காதலிக்கிறார் தினேஷ். அந்நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் ஜப்பானுக்கு டூர்... மேலும் பார்க்க

`கெளரி வந்தபிறகுதான் எனது வாழ்க்கை முழுமையடைந்தது' - லைஃப் பார்ட்னர் குறித்து நடிகர் ஆமீர் கான்

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் இரண்டு திருமணங்கள் செய்தார். ஆனால் இரண்டுமே நிலைத்திருக்கவில்லை. இரண்டு மனைவிகளையும் அவர் விவாகரத்து செய்துவிட்டார். அவர்களை விவாகரத்து செய்தாலும் தனது வீட்டிற்கு அருகேயே கு... மேலும் பார்க்க

'3 இடியட்ஸ்' படத்தின் 2-ம் பாகம் உருவாகிறதா? - ஆமீர் கான் சொன்ன தகவல் என்ன?

'3 இடியட்ஸ்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக ஆமீர் கான் தெரிவித்திருக்கிறார். கடந்த 2009 ஆம் ஆண்டு ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில், ஆமீர் கான் மாதவன், ஷர்மான் ஜோஷி நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்... மேலும் பார்க்க

Ek Din: "சாய் பல்லவிதான் இந்த நாட்டின் சிறந்த நடிகை!" - ஆமீர் கான் புகழாரம்

ஆமீர் கானின் மகன் ஜூனைத் கான் நடிகராக அறிமுகமாகும் 'ஏக் தின்' (Ek Din) படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றது. Ek Din Movieஇத்திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிக... மேலும் பார்க்க

Akshay Kumar: ஆன்லைன் கேமில் அக்‌ஷய் குமாரின் 13 வயது மகளிடம் நிர்வாணப் படம் கேட்ட நபர் கைது

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மகள் ஆன்லைனில் துன்புறுத்தலைச் சந்தித்தாகத் தெரிவித்து இருந்தார். மும்பையில் நடந்த சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியி... மேலும் பார்க்க