செய்திகள் :

"விஜய்யைப் பதவியேற்க அனுமதிக்க வேண்டும்; ஆளுநர் அப்படி சொல்ல முடியாது" - திருமாவளவன்

post image

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.

118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுக கூட்டணியில் இருந்து விலகி 5 இடங்களை வென்ற காங்கிரஸ் ஆதரவு அளித்திருக்கிறது.

ஆளுநரைச் சந்தித்த தவெக தலைவர் விஜய்
ஆளுநரைச் சந்தித்த தவெக தலைவர் விஜய்

இன்னும் ஆறு இடங்கள் தேவை என்பதால் த.வெ.க சிக்கலில் உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் த.வெ.க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி வருகின்றன.

இதனிடையே த.வெ.க தலைவர் விஜய் நேற்று (மே. 6) ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருந்தார்.

பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கையோடு வாருங்கள் என ஆளுநர் அனுப்பி வைத்த நிலையில் இன்று நடைபெற இருந்த த.வெ.க தலைவர் விஜய்யின் பதவியேற்பு விழா ரத்தானது.

இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன், " 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவை காண்பித்துவிட்டு பதவியேற்புக்கு வாருங்கள் என ஆளுநர் சொல்ல முடியாது.

திருமாவளவன்
திருமாவளவன்

த.வெ.க தலைவர் விஜய்க்கு பெரும்பான்மை இருக்கிறதா? என்பதை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும். தனிப்பெரும் கட்சியாக த.வெ.கவை மக்கள் தேர்ந்தெடுத்திருக்கின்றனர்.

எனவே விஜய்யைப் பதவியேற்க அனுமதிக்க வேண்டும். ஆனால் ஆளுநர் இன்னும் முடிவு எடுக்காமல் குழப்பம் உருவாவதற்கு இடம் கொடுக்கிறார்" என்று தெரிவித்திருக்கிறார்.

`மு.க.ஸ்டாலின் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி மனதார வருத்தப்பட்டார்!' – ஆதங்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக த.வெ.க உருவெடுத்திருந்தாலும், ஆட்சி அமைப்பதற்கு தேவையான தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் தி.மு.க கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அதிலிருந்து ... மேலும் பார்க்க

SRH vs PBKS:"பஞ்சாப்பை வீழ்த்தி முதலிடம்; அதிரடி ஆட்டமே எங்களின் ரகசியம்!"– பேட் கம்மின்ஸ் பெருமிதம்

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (மே 6) விறுவிறுப்பான ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த பஞ்சாப் அணியை வீழ்த்தி, ஹைதராபாத் அணி அபார வெற்... மேலும் பார்க்க

'எதிர்க்கட்சியினருக்கு அநீதியாகிவிடும்'னு சொன்னவரு ஸ்டாலின், அதனால்.!'- சி.எஸ் அமுதன் சொல்வது என்ன?

நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது. ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.கவி... மேலும் பார்க்க

'திராவிட கட்சிகள் திருமாவை முதல்வராக முன்மொழிய வேண்டும்' - புது ரூட்டில் சிந்தனைச் செல்வன்

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, தவெக என எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், தொங்கு சட்டமன்றம் தான் அமைய உள்ளது. பெரும்பாலான தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள தவெக, பெரும்... மேலும் பார்க்க

தவெக ஆதரவுக்காக உடைகிறதா அதிமுக? – எம்.எல்.ஏ-க்கள் புதுச்சேரி ரிசார்ட்டில் குவிந்த பின்னணி என்ன?

த.வெ.க ஆதரவுக்காக வெடித்த கோஷ்டி மோதல்!தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க-வை வீழ்த்தி த.வெ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், அந்தக் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்க... மேலும் பார்க்க