செய்திகள் :

'திராவிட கட்சிகள் திருமாவை முதல்வராக முன்மொழிய வேண்டும்' - புது ரூட்டில் சிந்தனைச் செல்வன்

post image

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, தவெக என எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், தொங்கு சட்டமன்றம் தான் அமைய உள்ளது.

பெரும்பாலான தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள தவெக, பெரும்பான்மையை நிரூபிக்க பிற கட்சிகளின் ஆதரவை நாடி வருகிறது.

கூட்டணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், விசிகவின் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்...
சிந்தனைச் செல்வன் - திருமாவளவன்
சிந்தனைச் செல்வன் - திருமாவளவன்

மனிதனுக்கும் மனிதனுக்குமிடையே நடந்த தேர்தல் அல்ல

"நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகள் வியத்தகு அதிர்வுகளை உருவாக்கி உள்ளன்.

திராவிட கட்சிகளுக்கு எதிரான மக்களின் கோபம் இது என்கிறார்கள் சிலர்.

விஜய் மீதுள்ள ரசிக மனோபாவத்தில் எழுந்த ஒரு ஜென்சி அலை இது. அர்த்தமுள்ள அரசியல் பிரளயம் அல்ல. பொங்கி வழிந்து உடனே வடிந்து நீர்த்துவிடும் மாய சுனாமி இது என்கிறார்கள் சிலர்.

இது மனிதனுக்கும் மனிதனுக்குமிடையே நடந்த தேர்தல் அல்ல. மனிதனுக்கும் வாக்குச்சாவடி எந்திரத்திற்கும் இடையே நடந்த யுத்தம் இது.

அண்ணன் ஸ்டாலினின் தோல்வி...

நேர்மையான தேர்தலை நடத்தவா ஞானேஷ்குமாரை பாஜக குறுக்கு வழியில் சட்டங்களை வளைத்து தலைமைத் தேர்தல் அதிகாரியாக கொண்டு வந்தது?

பாஜகவுக்கு எதிரான மாநிலங்களில் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் பொய்கருத்தை பொதுக்கருத்தாக திணித்து அதற்கேற்ப வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் அரங்கேற்றப்படும் நுட்பமான மோசடி இது என உறுதிபட சொல்பவர்களின் கருத்தும் புறக்கணிக்க முடியாததுதான்.

கொளத்தூரில் அண்ணன் ஸ்டாலினின் தோல்வி எந்திர மோசடியே தவிர அது வாக்காளர்களின் உணர்வு அல்ல என்பதை அண்மை நிகழ்வுகள் மெய்ப்பிக்கின்றன.

விஜய்
விஜய்

இத்தகு சூழலில்தான் குடித்து விட்டு தெருவில் ஆடும் சில தவெக எம் எல் ஏக்களின் ஆட்டம் , திரு. விஜயின் உடனிருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்களின் பின்னணி இவற்றை கண்டு அதிர்ந்து போன பலரும் அதிமுகவை குறைந்தபட்ச செயல் திட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் திமுக ஆதரிக்க முன்வரவேண்டுமென பேசுவதையும் காண முடிகிறது.

என்னிடமும் சமூக அக்கறையுள்ள நண்பர்கள் இது குறித்து பேசினார்கள்.

ரசிக மனோநிலை உருவாக்கிய ஆபத்திலிருந்து நாட்டைக் காக்க இப்படி நடந்தால் என்ன என கேள்வி எழுப்பினார்கள்.

தலைவர் திருமாவை முதல்வராக...

இந்த சூழலில் தலைவர் திருமாவை முதல்வராக முன்மொழிந்து அதை நோக்கி நகர்த்துவதுதான் திராவிட கட்சிகள் முன்னெடுக்க வேண்டிய சரியான நிலைப்பாடாக இருக்குமென தோன்றுகிறது.

மாற்றம் வேண்டுமென தமிழக மக்கள் உண்மையிலேயே விரும்பியிருந்தால் தன் வாழ்வை மக்களுக்காக அர்பணித்துள்ள அப்பழுக்கற்ற அனுபவம் வாய்ந்த தலைவர் திருமாவை முதல்வர் ஆக்குவதுதான் சரியாக இருக்கும்.

சமூக நீதி மண் இது என்று மார்தட்டிக்கொள்பவர்கள் தமிழ்நாட்டை காப்பாற்ற இப்படி ஒரு முடிவெடுப்பது காலத்தின் கட்டாயம்.

இது தமிழகத்தின் மீது படிந்துள்ள அனைத்து கறைகளையும் துடைத்தெறிந்து விடும். இருபெரும் எதிர் துருவ திராவிடக்கட்சிகளின் இடையே இது மட்டும்தான் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் குறைந்தபட்ச செயல்திட்ட ஒப்பந்தமாக இருக்கும்.

பின்குறிப்பு: சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பும் அன்பர்கள் கவனத்திற்கு. இது என் தனிப்பட்ட கருத்தல்ல. கோடிக்கணக்கான மக்களை நம்பிக்கையூட்டும் கருத்து.

ஆனால் சத்தியமாக எழுச்சித்தமிழருடன் இது குறித்து நான் கலந்து பேசவில்லை. முதல் முறையாக கட்சித்தோழர்கள் யாருடனும் கலந்து பேசாமல் மக்களின் தாகத்தை நான் பதிவுசெய்துள்ளேன்". என்றிருக்கிறார்.

பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசமா, 24 மணிநேர அவகாசமா? - அன்று எடியூரப்பாவுக்கு நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சிக்கலில் தவெக..!ஆனால் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே... மேலும் பார்க்க

‘எந்த கொள்கையை விற்று இன்றைக்கு கோடீஸ்வரனாக இருக்கிறீர்கள்? ’ – டி.ஆர்.பாலுவுக்கு காங்கிரஸ் பதிலடி

தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிய நிலையில், இரண்டு கட்சியினர் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது. இதனிடையே காங்கிரஸை காட்டமாக விமர்சித்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு ஒரு அறிக்கை வெளியி... மேலும் பார்க்க

'கடந்த காலங்களை போலவே, பாஜக ஆளுநர்களை வைத்து இடையூறு!' - செல்வப்பெருந்தகை

தவெக ஆட்சி அமைப்பதில் இழுப்பறி நீடித்து வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். "கடந்த காலங்களை போலவே, தமிழ்நாட்டில் மக்க... மேலும் பார்க்க

``ஆளுநர் நல்லவர்தான். ஆனால் பாஜக அரசியல் செய்கிறது!" - மாணிக்கம் தாக்கூர்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுக கூட்டணியி... மேலும் பார்க்க

`விஜய் முதல்வராவதை தடுத்தால்..!' - ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவூட்டும் காங்கிரஸ் நிர்வாகி

காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் மகேந்திரன். இவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதி மகேந்திரனுக்கு ... மேலும் பார்க்க

`தி.மு.க-வுக்கு பாயத் தயாராகும் சிறுத்தைகள் டு சாரி கேட்ட செந்தில் பாலாஜி!' | கழுகார் அப்டேட்ஸ்

புலம்பும் கு.ப.கிருஷ்ணன்!"தப்புக்கணக்கு போட்டுட்டோம்"த.வெ.க-வில், முகம் தெரியாத பலரும் வெற்றிபெற்ற நிலையில், லால்குடி தொகுதி வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனோ தோல்வியைத் தழுவியிருக்கிறார். அ.தி.மு.க முன்னாள் அ... மேலும் பார்க்க