செய்திகள் :

இந்தியாவில் 'ஈரான் எண்ணெய்' - முன்பு நிறுத்தியதற்கும், இப்போது வாங்குவதுற்கும் ட்ரம்ப் தான் காரணம்

post image

2019-ம் ஆண்டிற்குப் பிறகு, ஏழு ஆண்டுகள் கழித்து தற்போது ஈரான் எண்ணெயை வாங்கி உள்ளது இந்தியா.

2019-ம் ஆண்டு, ஈரான் எண்ணெயை யாரும் வாங்கக்கூடாது என்று உலக அளவில் அழுத்தத்தைத் தந்தது அமெரிக்கா.

பொதுவாக, ஈரான் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு கடுமையான நெருக்கடிகளைத் தந்து வந்தது அமெரிக்கா.

ஈரான் போர்: கச்சா எண்ணெய்
ஈரான் போர்: கச்சா எண்ணெய்

விதிவிலக்கு

இதற்கு 2019-ம் ஆண்டு வரையில் இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு மட்டும் விதிவிலக்கு வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், 2019-ம்‌ ஆண்டு இந்த விதிவிலக்கும் நீக்கப்பட்டது. இதன்‌ விளைவாக, ஈரான் எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது இந்தியா.

இப்போது ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில், உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சந்தித்து வருகிறது.

இதை தடுக்க, ஏற்றுமதிக்காக கப்பல்களில் இருக்கும் ஈரான் எண்ணெயை வாங்க தடை இல்லை என்று விதிமுறைகளைத் தளர்த்தி உள்ளது அமெரிக்கா.

ஆனால், புதிதாக எடுக்கப்படும் ஈரான் எண்ணெய் வாங்க அனுமதியில்லை.

இதனால், தற்போது இந்தியா ஈரான் எண்ணெயை வாங்கி உள்ளது.

ட்ரம்ப்

இந்தச் சம்பவத்தின் ஹைலைட்டே, 2019-ம்‌ ஆண்டு இந்தியா ஈரான் எண்ணெய் வாங்குவதை நிறுத்தியதற்கும், இப்போது இந்தியா ஈரான் எண்ணெயை வாங்குவதற்கும் ட்ரம்ப் தான் காரணம்.

ஏனெனில், இரண்டு சமயங்களிலும் ட்ரம்ப் தான் அமெரிக்காவின் அதிபர்.

ஈரான் எண்ணெய் வாங்குவதில் இந்தியா பேமெண்ட் பிரச்னையைச் சந்திக்கிறது. அதனால், ஈரான் எண்ணெய் சீனாவிற்கு சென்றுவிட்டது போன்ற தகவல்கள் வெளியாகின.

ஆனால், அது உண்மை அல்ல என்றும், ஈரான் எண்ணெய் இந்தியா வந்துவிட்டது என்றும் இந்திய பெட்ரோலியம் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

கரூர்: "சட்டை அவரோடது தான்; ஆனால், மாப்பிள்ளை அவரில்லை.!" - திமுக வேட்பாளரை கிண்டல் செய்த அண்ணாமலை

கரூர், வெங்கமேடு பகுதியில் அதிமுக வேட்பாளர், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார்.இதில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள... மேலும் பார்க்க

பிரசாரத்துக்கு விடுமுறை எடுக்கும் விஜய் - கவலையில் தவெக வேட்பாளர்கள்?

சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் ஓய இன்னும் சரியாக 10 நாட்களே இருக்கிறது. எல்லா கட்சித் தலைவர்களும் அதிகமான தொகுதிகளை கவர் செய்ய சுற்றி சுழன்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தவெக தலைவர் விஜய் மட்டு... மேலும் பார்க்க

தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

வருகிற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை மாற்றி வருகிறது இந்திய தேர்தல் ஆணையம்.அதன் ஒரு பகுதியாக, இப்போது தமிழ்நாடு உள்துறை செயலாளர் மாற்றப்பட்டுள... மேலும் பார்க்க

"பா.ஜ.க-வுக்கு பன்முகம் கிடையாது, கோர முகம் தான் இருக்கிறது"- செல்வபெருந்தகை கடும் தாக்கு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கிள்ளியூர் வேட்பாளர் ராஜேஷ்குமார், குளச்சல் வேட்பாளர் தாரகை கத்பர்ட், விளவங்கோடு வேட்பாளர் டி.டி.பிரவீன் ஆகியோரை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவ... மேலும் பார்க்க

முழுமையாக திறக்கப்படாத ஹார்முஸ் ஜலசந்தி - ஈரான் 'இதை' மறந்ததே காரணம்!

மூன்று நாள்களாக ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டுள்ளது.இருந்தும் ஈரான் அனுமதித்த கப்பல்கள் மட்டும் ஹார்முஸைக் கடந்து வருகிறது‌.ஆனால், அந்தக் கப்பல்களையும் வழக்கமான பாதையில் அல்லாமல், ஹார்முஸிலேயே வேறு பா... மேலும் பார்க்க

TVK Vijay: "அனைவரும் களத்தில் இறங்கி பணியாற்றுங்கள்.!"- தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிட இருக்கிறார். இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்க... மேலும் பார்க்க