செய்திகள் :

இந்த பட்ஜெட்டை நிதி அமைச்சர் எழுதியிருக்க முடியாது! – மரபுகளை மாற்றச் சொல்கிறார் பழனிவேல் தியாகராஜன்

post image

தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் விதம் குறித்த விவாதம் அவ்வப்போது எழுந்து வரும் நிலையில், முன்னாள் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தற்போதைய பட்ஜெட் தாக்கல் நடைமுறையை கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக, பல மணி நேரம் பட்ஜெட் உரையைத் தொடர்ந்து வாசிக்கும் முறையை மாற்றி, முக்கிய அம்சங்களை இயல்பான முறையில் அவையில் எடுத்துரைக்கும் புதிய நடைமுறையை கொண்டு வர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “தற்போதைய பட்ஜெட் உரையைப் பார்க்கும்போது, அதை தற்போதைய நிதி அமைச்சரே முழுமையாக எழுதியிருக்க முடியாது என்பது எனது கணிப்பு. அதிகாரிகள் தயாரித்துக் கொடுத்த நீண்ட ஆவணத்தை அமைச்சர் அவையில் வாசிப்பதால்தான், நீண்ட நேர உரையின்போது வாசிப்பதில் தடுமாற்றங்களும் சிரமங்களும் ஏற்படுகின்றன.

நான் பட்ஜெட்டைத் தயாரித்தபோது, அந்த ஆவணத்தை நானேதான் எழுதினேன் என்று உறுதியாகச் சொல்ல முடியும். முதலில் ஆங்கிலத்தில் எழுதுவேன். பின்னர் அதை தமிழில் மொழிபெயர்க்கச் செய்து, ஒன்றுக்கு இரண்டு முறை பயிற்சி எடுத்துக்கொண்டு அவையில் வாசிப்பேன். அப்படி தயாராக இருந்தாலும், இரண்டு அல்லது மூன்று மணி நேரம் தொடர்ந்து ஒரு நீண்ட ஆவணத்தை வாசிப்பது மிகவும் கடினமான விஷயம்.

நிதி அமைச்சர் மரிய வில்சன்

பட்ஜெட் உரையை வாசிக்கும் நடைமுறையில் சில மரபுகள் தேவையானதாக இருந்தாலும், அவற்றில் சிலவற்றை காலத்துக்கு ஏற்ப மாற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது.  குறிப்பாக, சட்டமன்றத்தில் நீண்ட நேரம் எழுத்து வடிவிலான உரையை வாசிப்பதற்குப் பதிலாக, மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இயல்பான உரையாடல் பாணியில் முக்கியமான அறிவிப்புகளை எடுத்துரைக்கலாம்.

நான் பொதுவாக எந்தத் தாள்களையும் வைத்துக்கொண்டு பேசுவதில்லை. 99 சதவிகித நேரம் நேரடியாகத்தான் பேசுவேன். புள்ளிவிவரங்களைக்கூட நினைவில் வைத்துக்கொண்டு பேசும் பழக்கம் எனக்கு இருக்கிறது. இரண்டு மணி நேரம் பேச வேண்டிய சூழல் என்றால், முக்கியமான எண்களை மட்டும் ஒரு குறிப்புச் சீட்டில் வைத்துக்கொண்டு பேசலாம். அப்படி பேசும்போது உரை இயல்பாகவும், கேட்பதற்கு சுவாரஸ்யமாகவும் இருக்கும்.

இன்றைய டிஜிட்டல் காலத்தில் பட்ஜெட்டின் ஒவ்வொரு விவரமும் இணையத்தில் வெளியிடப்படும் நிலையில், சட்டமன்றத்தில் முழு பட்ஜெட் ஆவணத்தையும் நீண்ட நேரம் வாசிக்க வேண்டிய அவசியம் உள்ளதா என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை மட்டும் சபையில் இயல்பான முறையில் எடுத்துரைத்துவிட்டு, முழு ஆவணத்தையும் அவைக் குறிப்பில் இடம்பெறச் செய்து, பின்னர் அதன்மீது விரிவான விவாதத்தை நடத்தும் நடைமுறையைப் பின்பற்றலாம்.

பழனிவேல் தியாகராஜன்

அதிகாரிகளின் சிந்தனை என்பது பெரும்பாலும் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் மரபுகளைத் தொடர்ந்து கொண்டுசெல்லும் வகையிலேயே உள்ளது. புதிய கோணத்தில் சிந்திப்பது, அதாவது ‘Out of the box thinking’ என்பது குறைவாக இருக்கிறது.

பட்ஜெட் என்பது வெறும் புள்ளிவிவரங்களையும் நீண்ட ஆவணங்களையும் வாசிக்கும் நிகழ்வாக இல்லாமல், அரசின் கொள்கைகள் மற்றும் மக்களுக்கான திட்டங்களை எளிமையாக விளக்கும் முக்கியமான தருணமாக இருக்க வேண்டும் என்பதே கருத்தின் மையமாக உள்ளது. எனவே, காலத்துக்கு ஏற்ப சட்டமன்றத்தின் பட்ஜெட் தாக்கல் மரபுகளிலும் மாற்றம் கொண்டுவருவது குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும்” என்றார்.

`ஆளுங்கட்சியினர் அதிமுகவினரை தாஜா செய்கிறார்கள்; இடைத்தேர்தலில் நாங்கள்..!' - எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். "இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு தொகுதிகளும் (மதுராந்தகம், தாராபுரம்) ஏற்கெனவே அதிமுக வெற்றி பெற்ற இடங்கள்... மேலும் பார்க்க

`நீதி கேட்கும் அதிமுக; குறைகூறும் திமுக... நம்பிக்கையில் தவெக' - இடைத்தேர்தல் களம் எப்படி இருக்கும்?

தமிழகத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, இவ்விரு தொகுதிகளுக்க... மேலும் பார்க்க

சீரற்ற சாலை; மருத்துவக் கழிவுகளால் நோய் பரவல் அபாயம்; கவனிப்பை பெறுமா செங்கல்பட்டு அரசு மருத்துவமனை?

தமிழகத்தின் முக்கிய நெடுஞ்சாலையான ஜி.எஸ்.டி சாலைக்கு அருகில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது.தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்லும் இந்த மருத்துவமனை... மேலும் பார்க்க

'குற்றம்சாட்டப்பட்ட என்னுடைய மருமகள், JCD பிரபாகர், லீமா ரோஸின்..!'- விஜய் உரைக்கு இ.கருணாநிதி பதில்

நேற்று சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உரையாற்றியிருந்தார். அதில் சர்க்காரியா கமிஷன் முதல் மிசா வரை பலவற்றைக் குறிப்பிட்டுத் திமுக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார். அதில் தி... மேலும் பார்க்க

"மூன்று கோப்புகள் இருப்பதாக முதல்வர் சொன்னார், ஏன் அதைப் பற்றி பேசவில்லை? சம்மந்தமே.!" - பெ.சண்முகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் சட்டமன்ற செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். "சட்டமன்றம் சண்டைமன்றமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆளுங்கட்சி எதிர்க்கட்சி... மேலும் பார்க்க

"தவெக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் சிபிஎம் பங்கேற்காது"- பெ.சண்முகம்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நாளை (செப்.9) கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் மாநில செயலாளர் சி.பி சண்ம... மேலும் பார்க்க