செய்திகள் :

"இனி என்னிடம் அரசியல் பேசாதீர்கள்; அன்புமணி.!" - அரசியலில் இருந்து விலகிய ராமதாஸ்

post image

2024-ம்‌ ஆண்டு டிசம்பர் மாதம் பாமகவின் இளைஞரணி தலைவராக முகுந்தனை நியமித்ததில் தொடங்கியது ராமதாஸ், அன்புமணி மோதல்.

பாமக நிறுவனர் ராமதாஸின் மகள் வழிப் பேரன் முகுந்தன். அக்கா மகனுக்கு கட்சியில் உடனடியாக பெரிய பொறுப்பு வழங்கப்படுவதை ரசிக்கவில்லை பாமக தலைவர் அன்புமணி.

இந்தப் புகைச்சல் கட்சிக்குள் புகைந்து கொண்டிருந்தாலும், 2025-ம் ஆண்டு மே மாதம் வெட்ட வெளிச்சமானது. அப்போது தான், ராமதாஸ் தன்னை தானே பாமக தலைவராக அறிவித்தார். இது அன்புமணிக்கு பிடிக்கவில்லை.

இதையடுத்து ராமதாஸ் அணி, அன்புமணி அணி என வெளிப்படையாகத் தோன்றின.

அன்புமணி, ராமதாஸ்
அன்புமணி, ராமதாஸ்

அமைதியான ராமதாஸ்

இதன் பின், இருதரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகள், நீதிமன்றத்தின் படியேறுதல்... அவ்வப்போது பேச்சுவார்த்தைகள் என வேகமாக அடுத்தடுத்து அரங்கேறின.

ஆனால், எந்தப் பேச்சுவார்த்தையும் கைகொடுக்கவில்லை.

2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலையொட்டி, பிற கட்சிகளும் அப்பா-மகனை இணைக்க செயல்பட்டன. ஆனால், எதுவும்‌ வேலைக்கு ஆகவில்லை.

இதனால், அன்புமணி அணி அதிமுக கூட்டணியிலும், ராமதாஸ் தரப்பு சசிகலா கூட்டணியிலும் தேர்தலைக் கண்டது.

இந்தத் தேர்தல் அன்புமணி தரப்பிற்கு 4 எம்.எல்.ஏக்களை தந்தாலும், ராமதாஸ் தரப்பிற்கு கிடைத்த எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை ஜீரோ.

தேர்தலுக்குப் பின் அப்படியே அமைதியாகிவிட்டார் ராமதாஸ்.

மீண்டும் ராமதாஸ், அன்புமணி!

கடந்த மாதம் 24-ம் தேதி, பெற்றோர் திருமண நாளையொட்டி, தைலாபுரம் சென்றார் அன்புமணி.

விரிசல் உண்டானதில் இருந்து பல சந்திப்புகள் நடந்திருந்தாலும், இந்தச் சந்திப்பு வெற்றிகரமாக இருந்தது. இந்தச்‌ சந்திப்பில் கண்ணீரோடு அன்புமணியை அணைத்து கொண்டார் ராமதாஸ்.

அன்றே அன்புமணி அணியும், ராமதாஸ் அணியும் மீண்டும் பாமக ஆகியது.

இன்று ராமதாஸிற்கு பிறந்த நாள். இன்று மிக முக்கிய அறிவிப்பு ஒன்றையும் அறிவித்துள்ளார் ராமதாஸ்.

அன்புமணி, ராமதாஸ்
அன்புமணி, ராமதாஸ்

அது...

"இன்று எனக்கு 88-வது வயது தொடங்குகிறது. இந்த நல்ல நாளில் ஒரு செய்தியை உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். இன்று முதல் எனக்கு 'அரசியல் துறவரம்'.

அரசியல் துறவரம் என்று சொன்னால், நான் இனி அரசியல் பேச Thursday, அரசியலுக்கு வழிகாட்ட மாட்டேன்.

ஆனால் என்னைப் பார்க்க வருபவர்களைப் பார்ப்பேன், நலம் விசாரிப்பேன்; அவ்வளவுதான். அரசியலை அன்புமணி பார்த்துக் கொள்வார். நாங்களும் அதற்குத் துணையாக இருப்போம்.

என்னை வந்து பார்ப்பவர்கள் 'ஐயா நலமா?' என்று மட்டும் கேட்டுவிட்டுச் செல்லலாம். அரசியலைப் பேசுவதற்கு இனி ஏதுமில்லை, ஏனென்றால் இன்று முதல் நான் ஒரு துறவியாகிவிட்டேன்".

மதுரை: `எந்த layout வந்தாலும் என்னிடம் அப்ரூவல் வாங்கிய பிறகே அனுமதி'- எம்எல்ஏ கார்த்திகேயன்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 88 மணி நேர தாக்குதலின் ரகசியங்களை முதன்முறையாக உடைத்த அஜித் தோவல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் முதன்முறையாக விரிவாக பேசியிருக்கிறார். ... மேலும் பார்க்க

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்: ``தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" - சிபிஎம் சண்முகம்

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``பெற்றோரின் புகாரைப் பெற மறுத்த குற்றச்சாட்டில் உண்மையில்லை" - அமைச்சர் சம்பத் குமார்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் மயக்கத்தில் இருக்குறீர்களே CM sir?"- அப்பாவு காட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க