செய்திகள் :

`இனி கூட்டுறவு சங்கங்கள் மூலம் நெல் கொள்முதல்'- தவெக அரசின் அறிவிப்பால் கொந்தளிக்கும் விவசாயிகள்!

post image

உணவுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து இதுவரை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தவெக அரசு கூட்டுறவு சங்கங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படும் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விவசாயிகள் உள்ளிட்ட யாரிடமும் கருத்து கேட்காமல் தன்னிச்சையாக அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு, விவசாயிகளைப் பெரும் அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது.

விவசாயம்

``எதிர்காலத்தில் விவசாயக் கடன் தள்ளுபடியே இருக்கக் கூடாது, செய்யக் கூடாது என்பதற்காக பழைய நடைமுறையை மாற்றி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் வியாபாரிகள் நெல் கொள்முதலில் தடம் பதிப்பதற்கான வாசலை திறக்கும் விதமாக திரைமறைவில் தவெக அரசு இதனைச் செயல்படுத்துகிறது" என விவசாயிகள் கொந்தளிக்கின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை விமல்நாதன் நம்மிடம், ``முதல்வர் விஜய், தேர்தல் பிரசாரத்தின்போது அறிவித்த வாக்குறுதிபடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யவில்லை. அப்போது, `மற்ற கட்சித் தலைவர்கள் தருவதுபோல் இது வாக்குறுதி அல்ல, உத்தரவாதம்' எனக் கடன் தள்ளுபடி குறித்துப் பேசினார். விஜய் முதல்வரான பிறகு விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து நான்கு முறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், விவசாயிகள் மத்தியில் அரசின் அறிவிப்பு அதிருதிப்யை ஏற்படுத்தியதுடன் ஏற்க முடியாததாகவும் இருந்து வருகிறது.

நெல்

இந்நிலையில் விவசாயக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி முதல்வர் கவனத்தை ஈர்ப்பதற்காக 25ம் தேதி 50 விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு சார்பாக போராட்டம் நடத்த இருக்கிறோம். இந்தச் சூழலில் அரசு திசைதிருப்பும் விதமாக கூட்டுறவு சங்கங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படும் என்கிற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 1970 முதல் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

தனியார் கொள்முதலை தடுக்கவும், கொள்முதல் செய்யப்பட்ட தினத்திலேயே விவசாயிகளுக்கு நெல்லுக்கான பணம் கையில் கிடைக்கவும் அரசு இதனை செயல்படுத்தி வருகிறது. கிட்டத்தட்ட 56 ஆண்டுக்கால நடைமுறையை தவெக அரசு மாற்றியிருக்கிறது. நடவு பணிகளுக்கு விவசாய சங்கங்களில் விவசாயிகள் கடன் பெறுகின்றனர். நெல்லை போட்டதும் அந்தக் கடனை திருப்பிச் செலுத்துவார்கள். அப்படிச் செலுத்தாத விவசாயிகளுக்கு புதிய கடன் வழங்க மாட்டார்கள்... இது தான் நடைமுறை வழக்கம்.

விமல்நாதன்

புதிய அறிவிப்பில் அறுவடை செய்ததும் நெல்லை கூட்டுறவு சங்கங்கள் கொள்முதல் செய்யும். விவசாயி வாங்கிய கடனை உடனே பிடித்தம் செய்து கொண்டு மீதித்தொகையை விவசாயிகளுக்கு செலுத்துவார்கள். இந்த அடிப்படையில் செயல்படுத்துவதற்கான அறிவிப்பைத்தான் அரசு அறிவித்துள்ளது. இம்முறை விவசாயிகளுக்கு முழு மகிழ்ச்சியை தராது. மேலும் கட்டாயப்படுத்தி கடனை வசூலிப்பதற்கு இதனை செயல்படுத்துகின்றனர். தனியார் பெரிய நிறுவனங்கள் நெல் கொள்முதல் செய்வதற்கு உள்ளே வருவார்கள். அட்வான்ஸ் கொடுத்து விவசாயிகளிடம் நெல்லை வாங்கி விற்பனை செய்த பிறகு மீதி பணத்தை தருவார்கள்.

இவற்றை தவிர்க்கவே அரசு நேரடியாக நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து நெல்லை பெற்று வந்தது. விவசாயிகள், எம்.எல்.ஏ-க்களிடம் கருத்து கேட்கவில்லை. சட்டமன்றத்திலும் அறிவிப்பு வெளியிடவில்லை. ஆனால் திடீரென அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அடுத்த பிறவியில் விவசாயியாக பிறக்க ஆசைப்படுகிறேன் என்ற முதல்வர் விஜய், விவசாயிகளின் நலனை அறியாமல், பலவேறு விபரீதங்களை உண்டாக்கக்கூடிய புதிய அறிவிப்பை எதேச்சதிகாரத்துடன் வெளியிட்டிருப்பது ஏன் என்று புரியவில்லை. உடனடியாக இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்றார்.

'5 ரூபாய் எக்ஸ்ட்ரா கொடுத்தால்தான் சரக்கு'- டாஸ்மாக் கடை பேடிஎம் மெஷினைத் தூக்கிக்கொண்டு ஓடிய இளைஞன்

ராணிப்பேட்டை மாவட்டம், லாலாப்பேட்டை பகுதியில் அரசுக்குச் சொந்தமான டாஸ்மாக் மதுபானக் கடை (எண்: 13511) செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மதுப்பிரியர்கள் இங்கு வந்து மது வாங்... மேலும் பார்க்க

போருக்கும் ரெடி, பேச்சுவார்த்தைக்கும் ரெடி: ஈரான் சொல்லும் நிலைப்பாடு என்ன?

நவம்பர் 3-ம் தேதி மிட் டேர்ம் தேர்தல் முடிந்து, அந்தத் தேர்தலின் முடிவுகளும் வெளியாகிவிட்டன. ஆனால், இன்னமும் ஈரான் போரில் அடுத்தக்கட்டத்தை முன்னெடுக்கவில்லை அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.இதற்குத் தேர்தலில் ... மேலும் பார்க்க

"தவெக கட்சி ‘அரசியல் பிணி’ மட்டுமல்ல; அது ஒரு ‘சமூகப் பிணி’ "- ஸ்டாலின் விமர்சனம்

அண்ணா அறிவாலயத்தில் நேற்று (நவ.22) குடிஅரசு இதழ் முழுத்தொகுப்பை வெளியிட்டார் திமுக தலைவர் ஸ்டாலின். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "நம்முடைய ஆட்சியில், தமிழ்நாட்டு மக்களுக்குப் பணவீக்கத்தின் பாதிப்பே ... மேலும் பார்க்க

`பாமக ஆட்சிக்கு வந்தால் 6 மாதங்களில் 70% பிரச்னைகளைத் தீர்ப்போம்!’ - அன்புமணி சொல்வதென்ன?

கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய பா.ம.க தலைவர் அன்புமணி, ``மேகதாதுவில் அணையைக் கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு எந்தவித உரிமையும் கிடையாது. உச்ச நீதிமன்ற... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம்: 'ஆட்சியரிடம் இருந்து புகார் வரவில்லை'- காவல்துறை தரப்பு விளக்கம்!

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசமாக மெசெஜ் அனுப்பியதாக கூறப்படுகிற விவகாரம், தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் ஆட்சிய... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: `தீர்ப்பை அமல்படுத்துவதில் முதல்வருக்கு என்ன தயக்கம்?' - நயினார் கேள்வி!

கரூரில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த ஆண்டு மட்டும் தீப... மேலும் பார்க்க