செய்திகள் :

'இனி சீர்திருத்தங்களை நோக்கி..!' - தர்மேந்திர பிரதான் ராஜினாமாவிற்கு சோனம் வாங்சுக் பதிவு

post image

வினாத்தாள் கசிவு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, 26 நாள்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார் இந்திய செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக்.

மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, ஜிந்தேந்திர சிங் உடனான பேச்சுவார்த்தைக்குப் பின், நேற்று முன்தினம் (ஜூலை 24) உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார்.

தற்போதும் சிகிச்சையில் தான் இருக்கிறார் சோனம் வாங்சுக்.

தர்மேந்திர பிரதான் தற்போது பதவி விலகி உள்ளதை வரவேற்று தனது எக்ஸ் பக்கத்தில் சோனம் வாங்சுக் பதிவிட்டிருப்பதாவது...

சோனம் வாங்சுக் பதிவு
சோனம் வாங்சுக் பதிவு

"இது ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி!

நேரடி ஜனநாயகம்... தெருக்களிலிருந்து நேரடியாக வென்றெடுக்கப்பட்டிருக்கிறது!

இது அமைதி, பொறுமை மற்றும் விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி!

வாழ்த்துகள் CJP! வாழ்த்துகள் நாட்டின் Gen Z தலைமுறையே!

பயத்தையும், பயத்தைப் பற்றிய பயத்தையும் தூக்கியெறிந்துவிட்டு நாட்டின் அனைத்து மூலைமுடுக்குகளிலிருந்தும் வீரியத்துடன் கிளர்ந்தெழுந்த அனைத்துக் குடிமக்களுக்கும் நன்றிகள்!

பொறுப்புணர்வை உறுதி செய்தாச்சு, இனி சீர்திருத்தங்களை நோக்கி!"

தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது மட்டும் தீர்வு அல்ல - அமைச்சர் நிர்மல்குமார்

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள திருப்பரங்குன்றம் செய்தியாளர்கள் அறையை தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் ரிப்பன் வெட்டி, குத்த... மேலும் பார்க்க

’திரையரங்குகளில் அமைச்சர்கள் கண்ணீர் விட்டது ஏன்?’ – அமைச்சர் சம்பத்குமார் விளக்கம்!

கோவை வ.உ.சி மைதானம் அருகில் ரூ.5.90 கோடி மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம், கபடி உள் விளையாட்டு அரங்கம், வாலிபால் உள் விளையாட்டு அரங்கம் ஆகியவற்றை பிற்படுத்தபட்ட... மேலும் பார்க்க

தர்மேந்திர பிரதான் விலகல்: 'கரப்பான் பூச்சிகள் வென்றன; இன்னும் 2 கோரிக்கைகள் நிலுவை' - CJP Reactions

டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலாக போராடி வரும் காக்ரோச் ஜனதா கட்சிக்கு இன்று வெற்றி கிடைத்துள்ளது.தர்மேந்திர பிரதான் மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக பிரதமர் மோடிக்கு கடித... மேலும் பார்க்க

CJP Protest: `நாம் சாதித்து விட்டோம்!' - தர்மேந்திர பிரதான் ராஜினாமா குறித்து அபிஜீத் திப்கே

மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, சி.ஜே.பி (CJP) அமைப்பின் நிறுவனர் அபிஜீத் திப்கே வரவேற்று பேசியிருக்கிறார்.தர்மேந்திர பிரதான்இது குறித்து அவர... மேலும் பார்க்க

"த.வெ.க-விடம் காங்கிரஸுக்கு உரிய இடங்களைக் கேட்டு பெற்று போட்டியிடுவோம்!" - அமைச்சர் ராஜேஷ்குமார்

தமிழக காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் பொறுப்பேற்ற உற்சாகத்தில், கட்சிப் பணிகளில் வேகம் காட்டி வருகிறது சத்திய மூர்த்தி பவன். அண்மையில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு 'லஞ்சம் தவிர்; நெஞ்சம் நிமிர்' ... மேலும் பார்க்க

"இனி என்னிடம் அரசியல் பேசாதீர்கள்; அன்புமணி.!" - அரசியலில் இருந்து விலகிய ராமதாஸ்

2024-ம்‌ ஆண்டு டிசம்பர் மாதம் பாமகவின் இளைஞரணி தலைவராக முகுந்தனை நியமித்ததில் தொடங்கியது ராமதாஸ், அன்புமணி மோதல்.பாமக நிறுவனர் ராமதாஸின் மகள் வழிப் பேரன் முகுந்தன். அக்கா மகனுக்கு கட்சியில் உடனடியாக ப... மேலும் பார்க்க