செய்திகள் :

இன்னொரு விமானியையும் மீட்ட அமெரிக்கா: ஈரானில் எங்கே இருந்தார்? எப்படி மீட்டோம்? - ட்ரம்ப் பெருமிதம்

post image

நேற்று அமெரிக்காவின் F-15E ஸ்ட்ரைக் ஈகளை தாக்கி வீழ்த்தியிருந்தது ஈரான்‌ ராணுவம்.

அந்த விமானத்தில் இரண்டு விமானிகள் இருந்திருக்கின்றனர். அதில் ஒருவர் நேற்றே மீட்கப்பட்டார்.

இன்னொருவரை தேடும் பணி நடந்துகொண்டிருந்தது.

அவரும் தற்போது மீட்கப்பட்டுள்ளார்‌ என்று அமெரிக்க அதிபர்‌‌ ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.

"அவரைக் கண்டுபிடித்துவிட்டோம்! என் சக அமெரிக்கர்களே, கடந்த சில மணிநேரங்களாக, அமெரிக்க ராணுவம், அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் துணிச்சலான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஒன்றை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது.

ஈரான் போர்
ஈரான் போர்

இது நமது அற்புதமான அதிகாரிகளில் ஒருவருக்காக மேற்கொள்ளப்பட்டது ஆகும். அவர் மிகவும் மதிக்கப்படும் ஒரு கர்னல். அவர் இப்போது பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்கிறார் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்!

எங்கே இருந்தார்?

இந்த வீரமிக்க போர்வீரர், ஈரானின் அபாயகரமான மலைப்பகுதிகளில் எதிரிகளின் பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்தார். ஒவ்வொரு மணி நேரமும் நமது எதிரிகள் அவரை நெருங்கி கொண்டிருந்தனர்.

இன்னொரு பக்கம், அமெரிக்க தலைமைத் தளபதி, போர்ச் செயலாளர், கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவர் மற்றும் சக போர் வீரர்கள்‌‌ என 24 மணி நேரமும் அவரது இருப்பிடத்தைக் கண்காணித்து, அவரை மீட்பதற்காக விடாமுயற்சியுடன் திட்டமிட்டுக்கொண்டிருந்தோம்.

இந்த முயற்சி குழைந்து விடக்கூடாது என்று தான், நேற்று இதை பற்றி தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

ஈரானில் நாம்!

அமெரிக்க ராணுவ வரலாற்றில், எதிரிப் பிரதேசத்தின் ஆழத்தில் இரண்டு அமெரிக்க விமானிகள் தனித்தனியாக மீட்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

நாங்கள் ஒரு அமெரிக்கப் போர் வீரரை ஒருபோதும் கைவிட மாட்டோம்! இந்த இரண்டு நடவடிக்கைகளும், ஒரு அமெரிக்கர் கூட கொல்லப்படாமலோ அல்லது காயமடையாமலோ நம்மால் வெற்றிகரமாக முடிக்க முடிந்தது என்பது, ஈரானிய வான்வெளியில் நாம் மிகப்பெரிய வான் ஆதிக்கத்தையும் மேன்மையையும் அடைந்துவிட்டோம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது.

https://truthsocial.com/@realDonaldTrump/116350133044957842

இது குடியரசுக் கட்சியினர், ஜனநாயகக் கட்சியினர் மற்றும் பிற அனைத்து அமெரிக்கர்களும் பெருமைப்பட வேண்டிய மற்றும் ஒன்றுபட வேண்டிய ஒரு தருணம்.

உலக வரலாற்றிலேயே மிகச் சிறந்த, மிகவும் தொழில்முறை வாய்ந்த மற்றும் சிறந்த ராணுவத்தை நாம் உண்மையிலேயே கொண்டுள்ளோம்" என்று தனது ட்ரூத் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கரூர்: "சட்டை அவரோடது தான்; ஆனால், மாப்பிள்ளை அவரில்லை.!" - திமுக வேட்பாளரை கிண்டல் செய்த அண்ணாமலை

கரூர், வெங்கமேடு பகுதியில் அதிமுக வேட்பாளர், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார்.இதில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள... மேலும் பார்க்க

பிரசாரத்துக்கு விடுமுறை எடுக்கும் விஜய் - கவலையில் தவெக வேட்பாளர்கள்?

சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் ஓய இன்னும் சரியாக 10 நாட்களே இருக்கிறது. எல்லா கட்சித் தலைவர்களும் அதிகமான தொகுதிகளை கவர் செய்ய சுற்றி சுழன்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தவெக தலைவர் விஜய் மட்டு... மேலும் பார்க்க

தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

வருகிற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை மாற்றி வருகிறது இந்திய தேர்தல் ஆணையம்.அதன் ஒரு பகுதியாக, இப்போது தமிழ்நாடு உள்துறை செயலாளர் மாற்றப்பட்டுள... மேலும் பார்க்க

"பா.ஜ.க-வுக்கு பன்முகம் கிடையாது, கோர முகம் தான் இருக்கிறது"- செல்வபெருந்தகை கடும் தாக்கு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கிள்ளியூர் வேட்பாளர் ராஜேஷ்குமார், குளச்சல் வேட்பாளர் தாரகை கத்பர்ட், விளவங்கோடு வேட்பாளர் டி.டி.பிரவீன் ஆகியோரை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவ... மேலும் பார்க்க

முழுமையாக திறக்கப்படாத ஹார்முஸ் ஜலசந்தி - ஈரான் 'இதை' மறந்ததே காரணம்!

மூன்று நாள்களாக ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டுள்ளது.இருந்தும் ஈரான் அனுமதித்த கப்பல்கள் மட்டும் ஹார்முஸைக் கடந்து வருகிறது‌.ஆனால், அந்தக் கப்பல்களையும் வழக்கமான பாதையில் அல்லாமல், ஹார்முஸிலேயே வேறு பா... மேலும் பார்க்க

TVK Vijay: "அனைவரும் களத்தில் இறங்கி பணியாற்றுங்கள்.!"- தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிட இருக்கிறார். இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்க... மேலும் பார்க்க