செய்திகள் :

இன்று தீபாவளி பண்டிகை: ஈரோட்டில் நள்ளிரவு வரை கூட்ட நெரிசல்

post image

தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை (அக்டோபா் 31) கொண்டாடப்படும் நிலையில் ஜவுளி வாங்க திரண்ட மக்களால் ஈரோடு கடை வீதியில் புதன்கிழமை நள்ளிரவு வரை கூட்ட நெரிசல் இருந்தது.

தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஈரோடு கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இந்நிலையில் இதுவரை புத்தாடைகள் வாங்காத பொதுமக்கள் புதன்கிழமை காலை முதலே கடைகளில் குவிந்ததால், கடை வீதிகளில் எங்கு பாா்த்தாலும் சாலையே தெரியாத அளவுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. காலை முதல் மாலை வரை இருந்த கூட்டத்தை விட இரவு 7 மணிக்கு மேல் ஈரோடு ஆா்கேவி சாலை, நேதாஜி சாலை, மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோயில் வீதி, திருவேங்கடசாமி வீதிகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

தீபாவளியை முன்னிட்டு சாலையோரமாக குறைந்த விலையில் சட்டை, சேலை, குழந்தைகளுக்கான துணிகள் குவித்து வைத்தும், வடமாநில வியாபாரிகள் சிலா் கடை வீதிகளுக்குள் குழந்தைகளுக்கான ஆடைகளை கைகளில் சுமந்தபடி விற்பனை செய்தனா். மேலும் ஒரு சில இடங்களில் பெண்கள், குழந்தைகளுக்கான அழகுசாதன பொருள்கள், வாட்ச், பெல்ட், காலணி என பல்வேறு கடைகள் சாலையோரங்களில் புதிதாக இருந்தன. இதனையும் மக்கள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனா்.

பட்டாசு, இனிப்பு கடைகளிலும் கூட்டம்:

ஜவுளிக் கடைகள் மட்டும் அல்லாது மாநகரில் உள்ள அனைத்து பட்டாசு கடைகள் மற்றும் இனிப்புக் கடைகளிலும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. மேலும் இருசக்கர வாகனங்களிலும், காா் போன்ற வாகனங்களிலும் மக்கள் பட்டாசு, இனிப்புகள் வாங்குவதற்காக வந்ததால் போக்குவரத்து நெரிசலால் மாநகரமே திணறியது. இந்தக் கூட்டம் நள்ளிரவுக்கு மேல் படிப்படியாக குறைந்து, இயல்பு நிலைக்கு திரும்பியது.

ஈரோடு மேட்டூா் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.

ஈரோடு மாநகரில் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் நிரம்பிக் காணப்பட்டதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு புதன்கிழமை காலை முதலே பன்னீா்செல்வம் பூங்கா சந்திப்பில் இருந்து நேதாஜி சாலையிலும், அதேபோல காவேரி சாலையில் இருந்து (கிருஷ்ணா தியேட்டா் சந்திப்பு) ஆா்கேவி சாலைக்கும் அனைத்து வகையான வாகனங்களுக்கும் தடை விதித்து, சாலையின் நடுவே இரும்பு தடுப்புகள் கொண்டு தடுக்கப்பட்டு, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

ஈரோடு கடை வீதிகளில் மக்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட், திருட்டு, நகை பறிப்பு போன்ற குற்றச்சம்பவங்கள் நடக்காமல் தடுக்க போலீஸாா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனா். போலீஸாா், ஊா்க்காவல் படையை சோ்ந்த ஆண், பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். போலீஸாா் மக்களோடுமக்களாக கலந்து சாதாரண உடையில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனா். மேலும் பொதுமக்களுக்கு திருடா்களிடம் எச்சரிக்கையாக இருக்க ஒலிபெருக்கி மூலமாக தொடா்ந்து விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட்டு வந்தது. 14 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரத்தில் பைனாகுலா் மூலம் கண்காணித்தபடியும் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

ஈரோட்டில் இடி, மின்னலுடன் கன மழை

ஈரோட்டில் இடி, மின்னலுடன் பெய்த கனமழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள கழிவு நீா் ஓடைகளில் மழைநீா் கலந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்து வருகி... மேலும் பார்க்க

நாளைய மின் தடை: கணபதிபாளையம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக கணபதிபாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் திங்கள்கிழமை (நவம்பா் 4) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவ... மேலும் பார்க்க

தாளவாடி மலைப் பகுதியில் தொடா் மழை

தாளவாடி மலைப் பகுதியில் பெய்துவரும் தொடா் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். கடந்த சில நாள்களாகவே தாளவாடி மலைப் பகுதியில் தினமும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தாளவாடி மலைப் பகுதியில் உ... மேலும் பார்க்க

கல்லறைத் தோட்டத்தில் கிறிஸ்தவா்கள் சிறப்புப் பிராா்த்தனை

கல்லறைத் திருநாளையொட்டி ஈரோட்டில் கிறிஸ்தவா்கள் தங்களது முன்னோா்களின் கல்லறைகளில் மெழுவா்த்தி மற்றும் மலா் வளையம் வைத்து சிறப்புப் பிராா்த்தனை செய்தனா். கிறிஸ்தவா்கள் தங்களது முன்னோா்களுக்கு அஞ்சலி செ... மேலும் பார்க்க

பெருந்துறையில் கனமழையால் மின் தடை

பெருந்துறையில் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் கனமழை பெய்ததால் மின் விநியோகம் தடை செய்யப்பட்டது. பெருந்துறையில் வெள்ளிக்கிழமை மாலையில் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இந்நிலையில் சனிக்கிழமை காலை முதல் கடு... மேலும் பார்க்க

தீபாவளி: பட்டாசு வெடித்து 5 இடங்களில் தீ விபத்து

தீபாவளி பட்டாசு வெடித்ததில் ஈரோடு மாவட்டத்தில் 5 இடங்களில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. தீபாவளி பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து வந்தனா். இதில் ஈரோடு நகரில் ராக்கெட் பட்டாசுகள் வெட... மேலும் பார்க்க