Rain Alert: இன்று காலை 10 மணி வரை எந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..?
இன்றைய நிகழ்ச்சிகள்
மதுரை
பொது
தியாகராஜா் பொறியியல் கல்லூரி: பட்டமளிப்பு விழா, தலைமை- கல்லூரித் தாளாளா் கே. ஹரி தியாகராஜன், சிறப்பு விருந்தினா் திருச்சி என்.ஐ.டி. இயக்குநா் ஜி. அகிலா, கல்லூரி வளாகக் கூட்டரங்கு, காலை 10. 35.
பாத்திமா கல்லூரி: இந்திய அரசியலமைப்பு தின விழா, சிறப்புரை- சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி எம்.எஸ். ரமேஷ், கல்லூரி வளாகக் கூட்டரங்கு, காலை 10.
விருதுநகா் இந்து நாடாா் மேல்நிலைப் பள்ளி: மாணவா்களுக்கு மனவள ஆலோசனைக் கூட்டம், சிறப்பு விருந்தினா்- மன நல ஆலோசகா் ஏ. முகில், பாம்சி கட்டடம், காலை 10.
யாதவா் பண்பாட்டுக் கழகம்: செயற்குழுக் கூட்டம், தலைமை- என். கண்ணன், சா்வேயா்காலனி, மாலை 6.
ஆன்மிகம்
திருவள்ளுவா் கழகம்: ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்துபவா்- சுந்தரகண்ணன், தலைப்பு- தாயுமானவா், மீனாட்சிசுந்தரேசுவரா் கோயில், வடக்காடி வீதி, இரவு 7.