செய்திகள் :

"இப்போ அவர் ரீல்ஸ் பண்றாரு; இந்த நோயை முதல்ல இறக்கி வைப்போம்!" - சென்னையில் பிரகாஷ் ராஜ்

post image

சென்னையில் நடைபெற்ற அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாட்டில், பாஜக அரசை விமர்சித்தும், ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்தும் நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியிருக்கிறார்.

Prakash Raj
Prakash Raj

அந்த மாநாட்டில் பிரகாஷ் ராஜ் பேசுகையில், "இப்போ மோடி என்னென்னவோ ரீல்ஸ் பண்றாரு. நான் இந்த தலைமுறையை முழுசா நம்புறேன். ஏன்னா, இவர்கள் வழக்கமான இன்னொரு அரசியல்வாதி இல்லை.

பாபாசாகேப் அம்பேத்கர் நமக்குக் கொடுத்த அரசியலமைப்புச் சட்டத்தை ஒழுங்கா படிச்சு, அதை நாம உணர்ந்தாலே போதும். இந்தியாவில் அரசியல் செய்ய வேண்டியதே மக்கள் நாம்தான். நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் நமக்காக வேலை மட்டும்தான் பார்க்கணும்.

தேர்ந்தெடுக்கப்பட்டவன் அரசியல் பண்ணிக்கிட்டு இருக்கான், நாம அவனுக்காக வேலை பார்த்துக்கிட்டு இருக்கோம். முதல்ல இந்த நிலைமையை மாத்தணும். நாம யாரும் அரசியல்வாதி ஆக வேண்டியதில்லை, ஒரு கட்சியைக் ஆரம்பிக்க வேண்டிய அவசியமும் இல்லை.

ஒரு சராசரி குடிமகனா, தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரியை நிமிர்த்தி கேள்வி கேட்கிற அதிகாரமும் துணிவும் மக்களுக்கு இருந்தாலே போதும். 'வேலை செய்யலைன்னா உன்னை ஆட்சியிலிருந்து இறக்கிடுவோம்' என்கிற பயத்தை அவனுக்கு உணர்த்தினால் மட்டுமே போதும்.

Prakash Raj
Prakash Raj

அதைத்தான் நாம செய்யணும், அதைத்தான் இன்னைக்கு இளைஞர்கள் செய்திருக்காங்க. நாம இப்போ ரொம்ப யோசிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கோம். பாஜகவின் இந்த பாசிச மன்னர் ஆட்சி இன்னும் மூணு வருஷத்தில் கண்டிப்பா இறங்கும்.

ஆனா இந்திய அரசியலின் இயல்பை நாம புரிஞ்சுக்கணும். இங்க எதிர்க்கட்சி ஜெயிக்காது, ஆளுங்கட்சிதான் தன் தவறுகளால் கீழே விழும். இது ஒரு கேன்சர் மாதிரி, அசிங்கமான நோய். இந்த நோயை முதல்ல இறக்கி வைப்போம். அப்புறம் மத்த குறைகளையும் ஒவ்வொன்றாகச் சரி பண்ணுவோம்" எனப் பேசியிருக்கிறார்.

'மூன்று' ரூட்டுகளில் இந்தியாவிற்குள் வந்த அமெரிக்க டாலர்கள்; Strong ஆன இந்திய ரூபாய் மதிப்பு!

இந்த மாதத்தின் தொடக்கம் முதலே, இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு ரூ.94-95 என வலுவாகியிருக்கிறது. கடந்த இரண்டு நாள்களாக, சற்று இறக்கத்தைக் கண்டாலும், இந்திய ரூபாயின் மதிப்பு இன்னும் ரூ.95-க்கு... மேலும் பார்க்க

இடைத்தேர்தல்: `புறக்கணிக்கும் முடிவில் தலைமை; அப்செட் உதயநிதி' - அறிவாலய அப்டேட்!

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவித்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். த.வெ.க-வும் அ.தி.மு.க தேர்தலுக்கு ஆயத்தமாகிவரும் நிலையில், இடைத்தேர்தலை புறக்கணிக்கும் முடிவில் தி.மு.க இரு... மேலும் பார்க்க

``என்னை எப்படியாவது காப்பாத்துங்க; சித்ரவதை செய்யுறாங்க.!"- குவைத்தில் தவிக்கும் கள்ளக்குறிச்சி பெண்

குவைத்தில் வீட்டு வேலைக்குச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் அங்கே கடுமையாகச் சித்ரவதை செய்யப்படுவதாகவும், கடந்த இரண்டு மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் கூறி உருக்கமாக வீடியோ ... மேலும் பார்க்க

முதல்வர் செயலக அலுவலகம் புதுபிப்பு: ரூ.5.54 கோடிக்கு டெண்டர்; `ரூ.3.78 கோடி போதும்' - ராசி பில்டர்ஸ்

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் பிரதான கட்டடத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அலுவலகத்தை, நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்ற... மேலும் பார்க்க

திமுக : `செந்தில் பாலாஜிக்கு மட்டும் ஏன் ஸ்பெஷல் ஆஃபர்?' - கொதிப்பில் சீனியர்கள்!

சட்டமன்றத் தேர்தல் தோல்வியிலிருந்து மீண்டுவரும் நோக்கில் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிவருகிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். பல்வேறு கறார் முடிவுகளை எடுத்துவரும் கட்சித் தலைமை, `செந்தில... மேலும் பார்க்க

`பிரதமர் முகம் விஜய்'- தவெக ஸ்டன்ட், அப்செட்டில் விசிக; கொந்தளிக்கும் இரண்டாம் கட்ட நிர்வாகிகள்!

'இன்றைய முதல்வர் விஜய், நாளைய பிரதமர்' என தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பிரசாரம் செய்துவருவதால், கடும் அப்செட்டில் இருக்கிறார்கள் வி.சி.க நிர்வாகிகள். 'பாஜக-வை வீழ்த்துவதே நோக்கம்' என்பதை முதல்வர் வி... மேலும் பார்க்க