இயற்கை பேரிடரை எதிர்கொள்வதில் நம்பிக்கையுடனும் இருப்போம் - ஆளுநர் ஆர்.என்.ரவி
இயற்கை பேரிடரை எதிர்கொள்வதில் நம்பிக்கையுடனும் இருப்போம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், “ ஃபென்ஜால் புயல் புயலுடன் பெய்து வரும் கன மழையால் தமிழ்நாட்டின் வட கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நமது மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
கோவையில் டிச. 1 - 3ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை
இந்த இக்கட்டான நேரத்தில், நமது மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும், முற்றிலும் அவசியமின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். அதிகாரிகள் வழங்கும் அறிவுரைகளை தயவு செய்து பின்பற்றவும். இந்த அவசரநிலையைச் சமாளிக்க மத்திய, மாநில அமைப்புகள் அயராது உழைத்து வருகின்றன.
சில தன்னார்வ தொண்டு அமைப்புகளும் மக்களின் துயரங்களைக் குறைக்க தங்களால் இயன்றதைச் செய்து வருகின்றன. இந்த இயற்கை பேரிடரை எதிர்கொள்வதில் நம்பிக்கையுடனும் பொறுமையுடனும் இருப்போம்." - ஆளுநர் ரவி. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.