செய்திகள் :

இலங்கை: விமான ஒப்பந்தத்தில் 8 லட்சம் டாலர் லஞ்சம்; மஹிந்த ராஜபக்சே மகன் கைதான பின்னணி என்ன?

post image

இலங்கையில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே. இவரது மகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சேவை நேற்று (செப்டம்பர் 4) இலங்கை நாட்டின் ஊழல் தடுப்பு அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர்.

என்ன காரணம்?

2013-ம் ஆண்டில் நடைபெற்ற ஏர்பஸ் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் (சுமார் 8 லட்சம் அமெரிக்க டாலர்கள்) லஞ்சமாகப் பெற்றிருக்கிறார் என்கிற குற்றச்சாட்டு அவர் மீது எழுந்திருக்கிறது.

இந்த ஒப்பந்தம் 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலானது ஆகும்.

கைது
கைது

இந்தக் குற்றச்சாட்டை விசாரிக்கத்தான் தற்போது நாமல் ராஜபக்சே கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இவரைக் காவலில் எடுக்க கொழும்பு தலைமை நீதிபதி அஸங்க போதரகம உத்தரவிட்டிருக்கிறார்.

இந்த ஒப்பந்த லஞ்சக் குற்றச்சாட்டில் இவர் மட்டும் குற்றம் சாட்டப்படவில்லை. இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக ஐரோப்பிய விமானத் தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ், இலங்கை அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கியிருக்கிறது என்று கூறப்படுகிறது.

அதில் ஒரு பகுதியான 8 லட்சம் டாலர்களை நாமல் பெற்றிருக்கிறார்.

நாமல் விண்ணப்பித்த ஜாமீன் மனுவும் மறுக்கப்பட்டிருக்கிறது.

அரசியல் முன்னெடுப்பு

ராஜபக்சே குடும்பம் தங்களது அடுத்த அரசியல் வாரிசாக நாமலைத்தான் முன்னெடுக்கிறது.

"இஸ்ரேல் இருந்திருக்காது; மத்திய கிழக்கே அழிந்திருக்கும்" - ஈரான் போருக்கு ட்ரம்ப் சொல்லும் காரணம்

பிப்ரவரி மாதக் கடைசியில் தொடங்கிய ஈரான் போர் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.ஆனால், அமெரிக்க அதிபர் ட்ரம்போ ஈரான் போர் விரைவில் முடிந்துவிடும்... இப்போது முடிந்துவிடும்... அப்போது முடிந்துவிடும் என்ற... மேலும் பார்க்க

"வரலாற்றை திருத்துவது சரியில்லை; நானும் சபையை வழிநடத்தியிருக்கிறேன்"- சிபிஎம் முன்னாள் பெண் எம்எல்ஏ

தமிழக சட்டசபையில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அலுவல் பணிக்காக தனது அறைக்குச் சென்றபோது, துணை சபாநாயகரும் அவையில் இல்லை. இதனால் மாற்று அவைத் தலைவராக த.வெ.க எம்.எல்.ஏ சத்யபாமா அவையை வழி நடத்தினார். இதைய... மேலும் பார்க்க

'அதிகாரிகள் செய்தது தவறு; வருந்துகிறோம்' - தவெக அமைச்சர்கள் சந்திப்பு குறித்து பெ.சண்முகம்

கடந்த மாதம், தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக இரண்டு சம்பவங்கள் நடந்தன.ஒன்று, குஜிலியம்பாறை வட்டாட்சியர் அந்தச் சுற்றுவட்டாரத்தில் உள்ள கம்யூனிஸ்டுகளின் பெயரைச் சேகரிக்கச் சொல்லியிருந்தார்.இ... மேலும் பார்க்க

"பாபநாச அணை திறக்க போராடிய விவசாயிகளை அராஜக கைது செய்த தவெக அரசு" - கனிமொழி கண்டனம்

தூத்துக்குடி விவசாயிகள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி."பாபநாசம் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக் கோரி, நியாயமான உரிமைக்காக... மேலும் பார்க்க

'வழக்குகள் வாபஸ்; உணவுப்படி 50 ரூபாய்...' - தூய்மைப் பணியாளர்களுக்கு அமைச்சர்கள் கொடுத்த வாக்குறுதி!

பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு குறித்து நீண்ட நாட்களாக போராடி வரும் தூய்மைப் பணியாளர்களுடன் தவெக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், ராஜ்மோகன், நிர்மல் குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இந்தப் ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் போரட்டம்: "உறுதியாக முதல்வர் சந்திப்பார்; பணி நிரந்தரம்.?" - ராஜ்மோகன்

கடந்த 16 நாட்களாக, சென்னை ரிப்பன் பில்டிங்கில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.இன்று காலை அவர்களைச் சந்தித்து அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், நிர்மல் குமார் ஆகியோர் பேச்சுவா... மேலும் பார்க்க