செய்திகள் :

`இளைஞர்களின் கருத்தை முட்டாள்கள் கேட்பதில்லை; அமித் ஷா அவைக்கு வராதது ஏன்?'- நாடாளுமன்றத்தில் ராகுல்

post image

நாடாளுமன்றத்தில் பொதுத்தேர்வு திருத்த மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. விவாதத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "அமித் ஷா அவைக்கு வராதது ஏன்? அவருக்கு துணிச்சல் இல்லையா?

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறை அல்லது வெறுப்பின் வெளிப்பாடு அல்ல. அது நாட்டின் இளைஞர்களின் உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் பிரதிபலிக்கும் ஆழமான வெளிப்பாடு.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

மாணவர்கள் நடத்திய போராட்டம் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்திருக்கிறது. இளைஞர்கள் தங்களது எதிர்காலம் குறித்து கொண்டுள்ள கவலை மற்றும் எதிர்பார்ப்புகளையே அந்த போராட்டம் வெளிப்படுத்தியது.

இந்த மாணவர் போராட்டத்தை எந்த அரசியல் கட்சியும் தவறாக புரிந்துகொள்ளக் கூடாது. ஆளும் பாஜக உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் மாணவர்களின் ஜனநாயகப்பூர்வமான கருத்து வெளிப்பாட்டை மதிக்க வேண்டும். இந்த போராட்டத்தில் தவறு எதுவும் இல்லை.

இளைஞர்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தை கொச்சைப்படுத்தக் கூடாது. எதிர்காலத்தை சிந்தித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களை அரசு முட்டாள்கள் என சித்திரிக்கிறது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

மாணவர்கள் போராட்டம் குறித்து ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டும். இளைஞர்களின் கருத்தை முட்டாள்கள் கேட்பதில்லை" என்று ராகுல் காந்தி அவையில் பேசியிருக்கிறார். ராகுலின் இந்தக் கருத்துக்கு பாஜக எம்.பி-க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அமளியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

நள்ளிரவு டெல்லி ஃபோன்கால்... கேன்சலாகிறதா அமித் ஷா - எடப்பாடி சந்திப்பு?

தென்னிந்திய முதல்வர்கள் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக, இன்றிரவு சென்னை வருகிறார் அமித் ஷா. கோவளத்திலுள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் தங்குபவர், பின்னிரவில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி... மேலும் பார்க்க

"100 நாள் ஆட்சியில், 6 காவல் நிலைய மரணங்கள்; அரசின் ஈடு இணையற்ற சாதனை"- சீமான் கண்டனம்

"100 நாள் ஆட்சியில், 6 காவல் நிலைய மரணங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதுதான் தவெக கொடுங்கோன்மை அரசின் ஈடு இணையற்ற சாதனை" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அ... மேலும் பார்க்க

மாணவர்கள் போராட்டம் குறித்த சுற்றறிக்கை: "பாசிச அரசியலைத் தொடங்க ஆழம் பார்த்ததா தவெக அரசு?"- கனிமொழி

காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் இடதுசாரி போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து சில நிமிடங்களிலேயே இந்த ... மேலும் பார்க்க

`ஆளுங்கட்சி ஆகிவிட்டோம்' தவெக கூட்டணியை உறுதி செய்த திருமா; பாமக-வுக்கு வைத்த செக்! - பின்னணி என்ன?

தவெக அமைச்சரவையில் அமைச்சர் வன்னி அரசு இடம்பெற்றிருந்தாலும் எந்தக் கூட்டணியில் விசிக இருக்கிறது என்பதை தெளிவாக கூறாமல் திருமாவளவன் குழப்பி வந்தார். 'திமுகவுடன் எங்களது நட்பு தொடர்கிறது' என்று திமுகவிற... மேலும் பார்க்க

மேகமலை: `துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும்; முழுமையாக இடித்து அகற்றுங்கள்'- உச்ச நீதிமன்றம் அதிரடி

மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் மாஞ்சோலையைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், இலவம் பஞ்சு தோட்டங்களையும் முழுமையாக அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான உத்... மேலும் பார்க்க

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?'- திமுக கேள்வி

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?' என திமுக கேள்வி எழுப்பியிருக்கிறது.இது தொடர்பாக வெளியாகியிருக்கும் அறிக்கையில், `நேற்றைய தினம் அதிகார ஆணவத்திமிரோடு, “திண்டுக்கல் மாவட்டம்... மேலும் பார்க்க