செய்திகள் :

'இவ்வளவு நாள் பென்ச்ல இருந்து நிறைய கத்துக்கிட்டேன்!' - உணர்ச்சிவசப்பட்ட சஞ்சு சாம்சன்!

post image

வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான போட்டியில் மிகச்சிறப்பாக ஆடி 97 ரன்களை குவித்து ஆட்டநாயகன் ஆகியிருக்கிறார் சாம்சன். அவரின் ஆட்டத்தால் இந்திய அணி உலகக்கோப்பையின் அரையிறுதிக்குள்ளும் நுழைந்திருக்கிறது. போட்டிக்குப் பிறகு அவர் பேசியவை

Samson
Samson

சாம்சன் பேசியதாவது, 'கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய நாளிலிருந்தே இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவோடுதான் இருந்தேன். அந்தக் கனவுக்காக காத்திருந்த நாள் இதுதான்.

என்னுடைய பயணம் எப்போதும் தனிச்சிறப்பு கொண்டது. நிறைய ஏற்றத் தாழ்வுகள் இருந்தது. ‘என்னால முடியுமா? நான் இந்த இடத்துக்கு வர முடியுமா?’ன்னு என்னையே நான் சந்தேகப்பட்ட தருணங்களும் நிறைய இருந்திருக்கு. ஆனா நம்பிக்கையை விடல. இன்று எனக்கு ஆசீர்வாதம் தந்த கடவுளுக்கு நன்றி.

இந்த ஃபார்மாட்டை நான் நீண்ட காலமா விளையாடி வரேன். IPL இல் 10–12 வருஷமா விளையாடி இருக்கேன். இந்திய அணியில கடந்த 10 வருஷமா இருக்கேன். பல போட்டிகளில் விளையாடல, ஆனா டக்அவுட்-ல இருந்து பார்த்து நிறைய கத்துக்கிட்டேன்.

விராட் கோலி, ரோஹித் சர்மா மாதிரி பெரிய வீரர்கள் எப்படி விளையாடுறாங்க? எப்படி ஆட்டத்தை முடிக்கிறாங்க, சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி தங்கள் ஆட்டத்தை எப்படி மாற்றுறாங்கன்னு கவனிச்சு கத்துக்கிட்டேன்.

Samson
Samson

அது எனக்கு ரொம்ப உதவியா இருந்துச்சு.

நான் நேரடியாக 50–60 போட்டிகள் தான் விளையாடி இருப்பேன். ஆனா 100க்கும் மேலான போட்டிகளை பார்த்திருக்கேன். இது என் வாழ்க்கையிலேயே மிகச் சிறந்த நாட்களில் ஒன்று. பந்தை மட்டும் பார்த்தேன்,என்னோட திறமையை நம்பினேன். அவ்வளவுதான்' என்றார்.

'மாஸ் காட்டிய சேட்டன்; அரையிறுதியில் இந்தியா!' - போராடி வீழ்ந்த கரீபியர்கள்!

'எங்கக்கிட்ட 11 ஆபத்தான ப்ளேயர்ஸ் இருக்காங்க' என பிரஸ்மீட்டில் பேசியிருந்தார் டேரன் சமி. அந்த அபாயமானவர்கள் கொடுத்த சவாலை திறம்பட எதிர்கொண்டு ஈடன் கார்டனில் சாதித்திருக்கிறது இந்திய அணி. ஒரு மேட்ச் வி... மேலும் பார்க்க

IND vs ZIM : “ஜிம்பாப்வே ஓட இந்த டெக்னிக் ரொம்ப இம்ப்ரசிவ்-ஆ இருந்துச்சு” - சூர்யகுமார் யாதவ்

சென்னை M.A. சிதம்பரம் மைதானத்தில் நடந்து முடிந்த இந்தியா vs ஜிம்பாப்வே போட்டியில், 256 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்த இந்திய அணி, 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.இந்த வெற்றிக்கு... மேலும் பார்க்க

'இமாலய இலக்கோடு ஜிம்பாப்வேவை வீழ்த்திய இந்திய அணி!' - சேப்பாக்கத்தில் சூர்யா & கோவின் ஜாலி சம்பவம்!

சேப்பாக்கத்தில் நடந்த உலகக்கோப்பையின் சூப்பர் 8 போட்டியில் ஜிம்பாப்வே வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்திருக்கிறது இந்திய அணி. Ind vs Zimஇந்திய அணி கடந்த போட்டியில் மிக மோசமாக பேட்டிங் ஆடி வீழ்ந்தி... மேலும் பார்க்க

T 20 WC: பிரகாசமாகும் இந்தியாவின் செமி ஃபைனல் வாய்ப்பு; அதிரடி காட்டிய தென்னாப்பிரிக்க அணி!

அகமதாபாத்தில் இன்று (பிப். 26) நடைபெற்ற முக்கியமான சூப்பர் 8 போட்டியில், தென்னாப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் அவர்கள் விளையாடிய இரண்டு போட்டிகளில... மேலும் பார்க்க

Ind v Zim : 'இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்துவீர்களா?' - ஜிம்பாப்வேயின் பதில் என்ன?

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 8 போட்டி நாளை சேப்பாக்கத்தில் நடக்கிறது. இதை முன்னிட்டு ஜிம்பாப்வே அணியின் ஆல்ரவுண்டர் ரியான் பர்ல் இன்று பத்திரிகையாளர்களை சந்தித... மேலும் பார்க்க

ஜிம்பாப்வேக்கு எதிராக சஞ்சு சாம்சன் ஆடுவாரா? - என்ன சொல்கிறார் இந்தியாவின் பேட்டிங் பயிற்சியாளர்!

உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் போட்டி நாளை சேப்பாக்கத்தில் நடைபெறவிருக்கிறது. இதை முன்னிட்டு இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் இன்று பத்திரிகையாளர்களை சந்தி... மேலும் பார்க்க