செய்திகள் :

Ali Khamenei: "பழிவாங்குவதற்கு ஈரானுக்குக் கடமையும் உரிமையும் உள்ளன" - ஈரான் அதிபர் பெஷேஷ்கியான்

post image

மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான தாக்குதலில் ஈரானின் முக்கியத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.

நேற்று நடைபெற்ற தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதை ஈரான் அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

IRAN SUPREME LEADER KHAMENI
IRAN SUPREME LEADER KHAMENI

இதனைத் தொடர்ந்து, ஆயதுல்லா அலி கமேனியைக் கொன்றது முஸ்லிம்களுக்கு எதிரான திறந்த போர் அறிவிப்பு என்று ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான் தெரிவித்துள்ளார்.

ஈரான் அரசு தொலைக்காட்சியில் வெளியான அறிக்கையில் அவர் கூறியதாவது, “இஸ்லாமியக் குடியரசின் உயர்ந்த அரசியல் அதிகாரி மற்றும் உலக அளவில் ஷியா இஸ்லாமின் முக்கிய தலைவரின் கொலை, உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு, குறிப்பாக ஷியாக்களுக்கு எதிரான திறந்த போர் அறிவிப்பாகக் கருதப்படுகிறது.

Iran President Masoud Pezeshkian
Iran President Masoud Pezeshkian

கமேனியின் கொலைக்குப் பழிவாங்குவது கடமை ஆகும்.

இந்த வரலாற்றுக் குற்றத்தின் நிர்வாகிகள் மற்றும் திட்டமிட்டவர்களைப் பழிவாங்குவது ஈரானின் சட்டபூர்வமான கடமையும் உரிமையும் என்று நாங்கள் கருதுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

கமேனி கொலை: ஈரான் இடைக்கால மதத்தலைவராக மூத்த மதகுரு அயதுல்லா அராபி நியமனம்

ஈரானில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகள் நேற்று நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டார்.இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஈரானில் புதிய மதத் தலைவராக யார் நி... மேலும் பார்க்க

அறிவாலயம் வராத ம.நீ.ம - தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி?

தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கும் நிலையில் மக்கள் நீதி மய்யத்தினர் அறிவாலயம் பக்கமே வராதாதது அக்கட்சியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தி.மு.க - ம.நீ.... மேலும் பார்க்க

தொகுதி் பங்கீடு: பேச்சுவார்த்தைக்கு அழைத்த அறிவாலயம்... விசிக-வின் கணக்கு என்ன?

தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, தொடங்கியிருக்கும் நிலையில் மார்ச் 2-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அழைப்பு விடுத்திருக்கிறது அறிவாலயம். இச்சூழலில் வி.சி.க-வின் எதிர்பார்ப்புக... மேலும் பார்க்க

'சட்டமன்றத் தேர்தலை தள்ளிப்போடுங்கள்.!' - தேர்தல் ஆணையத்துக்கு சீமான் கோரிக்கை!

தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு முன்பாக சட்டமன்றத் தேர்தலுக்காக வேட்பாளர்களை அறிவித்திருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீ்மான் திடீரென தேர்தலை தள்ளிப்போடச் சொல்லியிருப்பது பரபரப்பை கிளப... மேலும் பார்க்க

`எஸ்.ஐ.ஆர் மூலம் குடியுரிமை பறிப்பு' - அகில இந்திய மக்கள் இயக்க மாநாட்டில் பரக்கல பிரபாகர் ஆவேசம்!

சென்னை தி.நகரிலுள்ள சர் பிடி தியாகராயர் அரங்கில் அகில இந்திய மக்கள் இயக்கம் சார்பில் 'வஞ்சிக்கப்படும் தென்னிந்தியா, பழிவாங்கப்படும் தமிழ்நாடு' என்ற தலைப்பில் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி கருத்தரங்கம் நடை... மேலும் பார்க்க

`இந்த வீட்டு வாசல்ல அம்மா கார் டயருக்கு வணக்கம் வச்சவங்கதானே; இங்க வர்றதுக்கு என்ன?' – ஜெ.தீபா

மறைந்த முன்னாள் முதல்வரும் அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதாவின் பிறந்தநாள் நேற்று அக்கட்சியின் தொண்டர்களால் கொண்டாடப்பட்டது.ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டன் வீட்டில் தற்போது வசித்து வ... மேலும் பார்க்க